Pages

Search This Blog

Wednesday, November 16, 2016

கெத்து - எவன்டா இவன் சோலோ

What To Do Now Homie
He Is A Next Level Player
What To Do Now Homie
Ivan Mosamana Hassler
What To Do Now Homie
He Is A Rock Rock Rockstar
What To Do Now Homie
Maho Maho Monster


 
எவன்டா இவன் சோலோ நின்னு சண்ட செஞ்சு
பொருள இடுப்புல வெச்சி சீன போட்ட வேஸ்ட்
அய்யயோ இவன் எந்த ஊரு ஆளு
பொறந்து வளந்து வியாசர் பாடி காசிமேடு தூளு
வருவான் இவன் தேடி தேடி உன்ன போட
லெப்ட்ல விட்ட ரைட் பகுலு கிழிஞ்சு போய்டும்  சின்கிள் பஞ்ச்
அய்யயோ இவன் கண்ணா பாத்த கன்னு மாரி
அவுத்துவிட்ட கிஞ்சிபோயிடும் ஒன்னு வெச்ச உயிரே போய்டும்
அட்சான் பாரு மாமா ஒடச்ச பாரு மாமா
மாஞ்ச சோறு சுண்ட கஞ்சு
முரு மோசமான ஆள பாரு
எவண்ட இவன் லோக்கல் ஆளு குத்த போடு
யார்டா மச்ச இங்க வேற மாரி ஆளு

உட்ட மாரியம்மா ஓடவிட்டு சீனா ஆஹ் போட்டு
குமுளி தேனி பக்கம் வந்துபாரு டப்பாங்குத்து
என்ன சொன்னாலுமே கோப்பன் பேச்சை கேப்பான் பாரு
என்னங்குற கம்மங்கற ஏண்டவந்து கொம்முங்குர

What To Do Now Homie
He Is A Next Level Player
What To Do Now Homie
Ivan Mosamana Hassler
What To Do Now Homie
He Is A Rock Rock Rockstar
What To Do Now Homie
Maho Maho Monster

நக்கலாத்தான் பாக்காத பேசாதா
உங்க அப்பனுக்கே வைப்பான் பாரு கோயா உட்டு சொல்லட்டுமா
தருவான் இவன் வாரி வாரி கேக்க மலே
துண்ட காணோம் துணிய காணோம்
ஓட்டிக்க ஸ்டிக்கர் தரட்டுமா
என்ன டா சும்மா வாயி உதார் குடுகிரிங்கோ
தம்மாதுண்டு இருந்துகினு உனக்கு டகிலு பேச்சு கேக்குதா
அய்யயோ இவன் வேற மாரி ஆளு மாமு
சொன்ன கேளு முடிஞ்சா நீ வீடு போய் சேர பாரு
அமுக்குன இவன் தொடுக்கு மேல சின்கிள் புஞ்சு
அழுவுறான் அந்த ஒப்போநென்ட் இவன நெனச்சி
என்னமா இவன் ஸ்கெட்ச் போட்டு முடிச்சா பாரு
எங்க மச்ச இங்க வேற மாரி ஆளு
சிரிக்குறான் இவன் லுக்கு விட்ரா ஆள பாத்து
அழுவுறான் அவன் ஓரமா தான் முட்டி போட்டு
என்ன சொன்னாலுமே கொப்பன் பேச்சை கேப்பான் பாரு
என்னங்குற கம்மங்கற ஏண்டவந்து கொம்முங்குர

Gethu - Yevanda Ivan

தாரை தப்பட்டை - இடரினும் எனதுறு

இடரினும் எனதுறு நோய் தொடரினும்
நின் கழல் தொழுது எழுவேன்
வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும்
நின் கழல் விழுவேன் நல்லேன்
தாளிலம் தடம் புனல் தயங்கு சென்னி
போலில மதி வைத்த புண்ணியனே
போலில மதி வைத்த புண்ணியனே
 
என்னுள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம்
அது இந்த கீதம் அல்லவா சொல்லவா
உன்னை தொடும் உண்மை அல்லவா

நீ வந்தது எங்கோ நானும் வந்தது எங்கோ
நம்மை இங்கு ஒன்றாய் சேர்த்ததே இசையே
எந்தன் முன்பு உன்னை வைத்ததே

பிறந்தது சிற்றூரில்
வாழ்வது ஓலை குடிலில்
இருக்கும் இவை வந்து என்னை என்ன செய்யும்
மேகமற்ற வான் போல
தெளிந்த தண்ணீர் போல
ஊற்றெடுக்கும் இசை அமுதம் எந்தன் மீது ஓடும்
நீ விரும்பும் நேரம் உனக்கிது வேண்டும்
உன் கவனம் யாவும் பொழுது போக தீரும்
சிறிதே இசைத்தாலும் அருமருந்தாகும்
வாழ்வென்ன இசை என்ன எனக்கு ஒன்றாகும்

என்னுள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம்
அது இந்த கீதம் அல்லவா சொல்லவா
உன்னை தொடும் உண்மை அல்லவா

ஊர்கள் கூடும் திருநாளை
தொடங்கி வைக்கும் என் கூட்டம்
முடிந்தால் ஊரோரம் ஒதுங்கி வாழ வேண்டும்
இசை தெய்வம் கலைவாணி எனக்கருளும் போதும்
ஊர் தெய்வம் பேசாது
சாட்சி போல பார்க்கும்
நிறைந்த எந்தன் நெஞ்சம்
திறந்திருக்கும் வானம்
குறைகள் தன்னை தள்ளி
உண்மை கொண்டு வாழும்
எனக்கென்று எது உண்டு
இங்கு இந்த மண்ணில்
எந்த எதிர்பார்ப்பும் இல்லை
வேறு என்ன வேண்டும்

என்னுள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம்
அது இந்த கீதம் அல்லவா சொல்லவா
உன்னை தொடும் உண்மை அல்லவா

Tharai Thappattai - Idarinum

கெத்து - தில்லு முள்ளு பண்ணல

ஹேய்
தில்லு முள்ளு பண்ணல
கெத்து கித்து காட்ல
சீனு கீனு போடல
பல்பு கில்ப் வாங்கல
 
கண்ணும் கண்ணும் பாக்கல 
நான் உன்ன விட்டு போகல 
தொட்டு கிட்டு பேசல
நீ தொட்ட ஏன்னு கேக்கல

பெட்டி கடையில நிக்கல
வெட்டி கதையும் பேசல
தம்மு கிம்மு அடிக்கல 
பின்ன ஏன்டி என்ன புடிக்கல

அழகு பொண்ணுங்க நாட்டுல
நடந்து போகுது ரோட் ல 
எதையும் நானும் பாக்கல
அது ஏனோ உனக்கு புரியல

பர்ஸ்டு லவ் நீ தானே
மை பேபி
என்ன ஜஸ்ட் நீயும் பாக்கல நா
ஒய் பேபி
பெஸ்ட் லவ்வர் நான் தானே
ஒய் பேபி
உன்ன ரெஸ்ட் இல்லாம காதலிப்பேன்
நான் பேபி

பார்ட்டி கீர்ட்டி போகல
ஆட்டம் கீட்டம் போடல
ப்ரெண்ட் க்ரிண்டுனு சுத்தல
மப்புல கிப்புல கெடகல

கீஞ்ச பேண்ட் அ போடல
அதா இடுப்பு கீழ ஏறகல
ஊராம் ஊட்டு பைக் ல
நான் ஊற சுத்தி பாக்கல

உன்ன பாத்த ஜோருல
என் அப்பன் பேச்சும் ஏறல
நேருல பேச தில் இல்ல
என் கூட பேசு செல்லு ல

நீ தான் எப்பவும் நெஞ்சுல
இத யாரு கிட்டயும் சொல்லல
எனக்கு நீ தான் அஞ்சல
நான் இதுக்கு மேல கெஞ்சல

சிங்கிள் ல ஆனா ஆளு நானு 
மை பேபி
என்ன சிங்கிள் ஆவே இருக்க சொன்னா
ஒய் பேபி

மிஸ்டர்.கிளீன் நான் தானே
மை பேபி
என் மிஸஸ் ஆகா நோ சொல்ற
ஒய் பேபி

இது திங்கள் கெழம
சரியில்ல நெலம
நான் சொல்ல போன பக்குங்குதே
என்ன கொடும

நீ பிஞ்சு திமிரு
உன் லவ்வ அவுரு 
அடி ஆளு கொல்ல பெத்து போட்டா
உங்க மதரு 
உன் அழகா எல்லாம் ஏன் ஒளிச்சி வச்ச
நான் ரசிக்கறத ஏன் தட விதிச்ச

மை பேபி. ஹோ பேபி

தில்லு முள்ளு பண்ணல
கெத்து கித்து காட்ல
சீனு கீனு போடல
பல்பு கில்ப் வாங்கல

கண்ணும் கண்ணும் பாக்கல 
நான் உன்ன விட்டு போகல 
தொட்டு கிட்டு பேசல
நீ தொட்ட ஏன்னு கேக்கல

பெட்டி கடையில நிக்கல
வெட்டி கதையும் பேசல
தம்மு கிம்மு அடிக்கல 
பின்ன ஏன்டி என்ன புடிக்கல

அழகு பொண்ணுங்க நாட்டுல
நடந்து போகுது ரோட் ல 
எதையும் நானும் பாக்கல
அது ஏனோ உனக்கு புரியல

பர்ஸ்டு லவ் நீ தானே
மை பேபி
என்ன ஜஸ்ட் நீயும் பாக்கல நா
ஒய் பேபி
பெஸ்ட் லவ்வர் நான் தானே
ஒய் பேபி
உன்ன ரெஸ்ட் இல்லாம காதலிப்பேன்
நான் பேபி

Gethu - Thillu Mullu

கபாலி - நெருப்புடா நெருங்குடா

நெருப்புடா
நெருங்குடா
முடியுமா…

பயமா ஹா ஹா

நெருப்புடா
நெருங்குடா பாப்போம்
நெருங்குனா பொசுக்குற கூட்டம்
அடிக்கிற அழிக்கிற எண்ணம்
முடியுமா நடக்குமா இன்னும்
 
அடக்குனா அடங்குற ஆளா நீ
இழுத்ததும் பிரியிற நூலா நீ
தடையெல்லாம் மதிக்கிற ஆளா நீ
விடியலை விரும்பிடும் கபாலி..
கபாலி..

மகிழ்ச்சி

கருணையை மறு கவலைகளை அறு
இதயத்தில் ஒரு இறுக்கம் வரும் பொறு
யாவும் இங்கே மாயம் மாயம்
உன் வீரம் என்றும் சீறி பாயும்
நம் தேசம் எங்கும் ரோஷம் ஏறும்
ஒரு வார்த்தை கூட
புது மாற்றம் காணும்

நா வந்துட்டேனு சொல்லு
திரும்பி வந்துட்டேனு,
25 வருஷத்துக்கு முன்னாலே எப்படி போனானோ கபாலி
அப்டியே திரும்பி வந்துட்டேனு சொல்லு..
கபாலி டா

விடுதலையடை
விடையென நினை
பயத்தையே முறை
பகல் கனவை உடை
வீரம் தியாகம் மோதும் மோதும்
உன் தொழில் காயம் ஆறும் ஆறும்
இனி க்ரோதம் துரோகம் மாயும் மாயும்
வருங்காலம் இனியும்
இதிகாசம் ஆகும்

Kabali - Neruppu Da

கபாலி - உலகம் ஒருவனுக்கா

வா வா நீ வா தோழா
 
உலகம் ஒருவனுக்கா
உழைப்பவன் யார்?
விடை தருவான் கபாலி தான்
கலகம் செய்து ஆண்டவரின்
கதை முடிப்பான்

உலகம் ஒருவனுக்கா
உழைப்பவன் யார்?
விடை தருவான் கபாலி தான்
கலகம் செய்து ஆண்டவரின்
கதை முடிப்பான்

நீ நீயாய் வந்தாய்
தீயின் கருவாய்
கண்கள் உறங்கினாலும்
கனவுகள் உறங்காதே
பூவின் நிழலாய்
புல்லாங்குழலாய்
உன்னை வெளியீடு துளிர் விடு
பலியாடாய் எண்ணாதே…
விதையாக வாழும் நமக்கு
கதைகள் இருக்கு
நாளை நமக்கே விடியும்
விழித்து போராடு
வானம் உனதே பாதி வழியில்
பறவை பறக்க மறக்காதே

ஏ எண்ணத்தில் நூறு திட்டமிட்டு 
கபாலி வாரான் கையாட்டு
பம்பரம் போல சுத்திகிட்டு
பறையிசை அடித்திட்டு பாட்டு கட்டு..
ஏ இத்தனை நாளா கூட்டுக்குள்ள
இனிமே வாரான் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடி போச்சே
குருதியில் நெருப்பு தான்
கூடி போச்சே..

கபாலி..
இதுக்கு பேர் தான் தலைவர் அதிரடி
கபாலி..

நாங்க எங்க பிறந்த
அட உனக்கென்ன போடா தமிழனுக்காக
வந்து நின்னவன் தமிழன்டா

வந்தவன போனவன
வாழ வச்சவன்
இனி வாழ்ந்து காட்ட போறேன்
வாய மூடி கவனி

வேரும் பூவும் வேறில்லை
கருமேகம் போலே நீரில்லை 
அலை கடல் அடங்குமோ
அதிகார குரலுக்கு
எப்போதும் நீரின் வீழ்ச்சி நீதானே
உன்னை நீந்தி கடக்க முடியாதே
ஒரு பனித்துளி
அது எரிமலை அணைத்திடுமோ..

மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது
இன முகவரி அது இனி
விழி திறந்திடுமே

மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது
இன முகவரி அது இனி
விழி திறந்திடுமே

விதையாக வாழும் நமக்கு
கதைகள் இருக்கு
நாளை நமக்கே விதியும்
விழுந்து போராடு
வானம் உனதே பாதி வழியில்
பறவை பறக்க மறக்காதே

ஏ எண்ணத்தில் நூறு திட்டமிட்டு 
கபாலி வாரான் கையாட்டு
பம்பரம் போல சுத்திகிட்டு
பறையிசை அடித்திட்டு பாட்டு கட்டு..
ஏ இத்தனை நாளா கூட்டுக்குள்ள
இனிமே வாரான் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடி போச்சே
குருதியில் நெருப்பு தான்
கூடி போச்சே

Kabali - Ulagam Oruvanukka

கபாலி - வானம் பார்த்தேன்

நதியென நான் ஓடோடி
கடலில் தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
மூச்சு காற்று போன பின்பு
நான் வாழ்வதோ


 
தீராத காயம்
மனதில் உன்னலடி ஆராதடி

வானம் பார்த்தேன் பழகிய
விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே

ஏனோ இன்று தூரம் போனாள்
இடப்பக்கம் துடித்திடும்
இருதய இசையென
இருந்தவள் அவள் எங்கு போனாலோ
இரு விழி இமை சேராமல்
உறங்கிட மடி கேட்கிறேன்

மழையினை கண் காணாமல்
மேகம் பார்த்து பூமி கேட்க
நான் பாடினேன்
நீயில்லை நானோ 
நிழலை தேடும் நிஜம்
ஆனெனடி..

வானம் பார்த்தேன் பழகிய
விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே

எங்கும் பார்த்தேன் உந்தன் பிம்பம்
கனவிலும் நினைவிலும் 
தினம் தினம் வருபவள்
எதிரினில் இனி வர நேராதோ

நதியென நான் ஓடோடி
கடலில் தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
தூண்டில் முள்ளில் மாட்டி கொண்ட
மீன் நானடி
ஏமாற்றம் காலம்
இனிமேல் வேண்டாம்டி
கை சேரடி..

வானம் பார்த்தேன் பழகிய
விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே

Kabali - Vaanam Paarthen

கபாலி - மாய நதி

நெஞ்சம் எல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே
கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே
நான் உன்னை காணும் வரையில் தாபத நிலையே
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே


 
ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன்
நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்

மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே

மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே

நீர் வழியே மீன்களை போல்
என் உறவை நான் இழந்தேன்
நீ இருந்தும் நீ இருந்தும்
ஒரு துறவை நான் அடைந்தேன்

ஒளி பூக்கும் இருளே
வாழ்வின் பொருளா நீ
வலி தீர்க்கும் வழியா
வாஞ்சை தரவா

மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே

யானை பலம் இங்கே
சீரும் உறவிலே
போன வழியிலே
வாழ்க்கை திரும்புதே

தேசமெல்லாம் ஆளுகின்ற
ஒரு படையை நான் அடைந்தேன்
காலம் எனும் வீரனிடம்
என் கொடியை நான் இழந்தேன்

மணலூரும் மழையாய்
மடிமீது விழ வா வா
அணை மீறும் புனலாய்
மார் சாய்ந்து அழவா

மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே

யானை பலம் இங்கே
சீரும் உறவில்
போன வழியிலே
வாழ்க்கை திரும்புதே

Kabali - Maya Nadhi

Followers