Pages

Search This Blog

Showing posts with label Vanna Kili. Show all posts

Thursday, December 13, 2018

வண்ண கிளி - சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு

சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்

அத்தானை பாத்து அசந்து போய் நின்னாளாம்

முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்

வெத்தாக பேசி இளம் மனச தொட்டானாம்
வெத்தாக பேசி இளம் மனச தொட்டானாம்
ஆ..முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்

குண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்
முகம் கோணாமல் ஆசை அன்பா பேசும் நல்லவளாம்
ஆ ஹா ஹா ஆ ஆ ஆ ஆ……
ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ………
குண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்
முகம் கோணாமல் ஆசை அன்பா பேசும் நல்லவளாம்
அந்த கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்
அந்த கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்
அந்த கள்ளி அத்தானை கல்யாணம் பண்ணி கொண்டாளாம்
ஆ…சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்

அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெய்க்க வல்லவனாம்
ஆ…ஆ.ஆ…..ஆ….
அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெய்க்க வல்லவனாம்
அந்த முண்டாசு காரன் கொஞ்சம் முன்கோபியாம்

ஆனாலும் பெண் என்றால் அவன் அஞ்சி கெஞ்சி நிப்பானாம்
ஆனாலும் பெண் என்றால் அவன் அஞ்சி கெஞ்சி நிப்பானாம்
ஆ..முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்

முன்னூறு நாளை மட்டும் எண்ணிக்கொள்ளுங்க
அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
முன்னூறு நாளை மட்டும் எண்ணிக்கொள்ளுங்க
அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகும்ங்க
இந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகும்ங்க
அதை கண்டு சந்தோசம் கொண்டாடி பாட போறாங்க
அதை கண்டு சந்தோசம் கொண்டாடி பாட போறாங்க

சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்
முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்
மயிலாக வந்தாளாம்……… முத்தாரம் போட்டானாம்
மயிலாக வந்தாளாம் …….. முத்தாரம் போட்டானாம்

Vanna Kili - Chiththaadai kattikittu Singgaaram Pannikittu

Followers