Pages

Search This Blog

Showing posts with label Kizhakku Cheemayile. Show all posts
Showing posts with label Kizhakku Cheemayile. Show all posts

Wednesday, December 19, 2018

கிழக்கு சீமையிலே - எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாரி போச்சே கணக்கு

பள்ளிக்கூட போகையில பல்ல பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாரி போச்சே கணக்கு

பள்ளிக்கூட போகையில பல்ல பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு

ஐயம் பொண்ணு கம்மாயில
அயிர மீனு புடிக்கையில கெண்டு தல கெண்டு என்ன புடிச்சி

மஞ்சு தண்ணி கெடைக்கையில மாராப்பு தான் ஒதுக்கையில
மல்லியப் பூ வாங்கி என்ன புடிச்ச

ஹை ஒத்தை அடி பாதையில ஒத்தையில போகயில
சுத்தி வந்து என் கொசுவம் முடிச்ச

கருசப்பட்டு மந்தையில கரகாட்டம் ஆடையில
காரக் கத்து கன்று என்ன புடிச்சா

ஹே தொட்டு தொட்டு தோள் புடிக்க தூக்கம் வந்தா கால் அமுக்க
நித்தம் ஒரு பொண்ணு வேணும் எனக்கு

வாரத்துக்கு ஏழு நாளு மன்னார் குல
நாளு பேரு மூணு பேரு கொரையுதடி கணக்கு

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாரி போச்சே கணக்கு

பள்ளிக்கூட போகையில பல்ல பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு

கண்ணுக்காட்டு தேன் ருசியா கன்னி பொண்ணு வாய் ருசியா
பந்தையத்த கெட்டு மச்சான் தோக்கட்டும்

வெள்ளரி பூ அழகா வெடல புள்ள தோள் அழகா
விவகாரம் பேசி முடி வெளுப்போம்

பசு மாட்டு நெய் ருசியா பந்தி மாட்டு நீ ருசியா
வாய் போட்டு பேசி பேசி முடிப்போம்

சுண்டக்கானி பால் இனிப்பா சுண்டுவிரல் நா இனிப்பா
சூடத்த அணாச்சி முடி வேடுப்போம்

வயித்துல புள்ள இல்ல வாழ்க்கையில தொள்ளை இல்லை
வாழ்க்கையில இன்பம் கண்டு ஜெய்ப்போம்

சக்காலத்தி சண்ட இல்ல தாலி கட்டும் வம்பு இல்லே
இப்படியே எல்லா நாளும் இருப்போம்

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாரி போச்சே கணக்கு

பள்ளிக்கூட போகையில பல்ல பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாரி போச்சே கணக்கு

பள்ளிக்கூட போகையில பல்ல பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு

Kizhakku Cheemayile - Edhukku Pondatti

Monday, January 6, 2014

கிழக்கு சீமையிலே - கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி

கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதம்மா
தங்கம் போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு
கத்தாழங் காட்டுக்குள்ளே காளைகளுங் கதறுதம்மா
வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிபுட்டா பாதி உயிர் போச்சு

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

அண்ணே போய் வரவா அழகே போய்வரவா
மண்ணே போய்வரவா மாமரமே போய்வரவா
அணில்வால் மீசை கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீசை கொண்ட புருஷனோட போய்வரவா
சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம் தானே
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம் தானே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

Kizhakku Cheemayile - Kathaazha Kaattu Vazhi

கிழக்கு சீமையிலே - அத்தைக்குப் பிறந்தவளே ஆளாகி

ஆண் : அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே
பட்டாம்பூச்சி பிடித்தவள்
தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம் பிறையே நீ முழு நிலவா ஆனதெப்போ
மெளனத்தில் நீ இருந்தால்
யாரை தான் கேட்பதிப்போ.....

ஆண் : ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
ஓடைக்கர ஒழவு காத்துல ஒருத்தி யாரு
இவ வெடிச்சி நிக்குற பருத்தி
தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது

பெண் : ஆத்தங்கரை மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

ஆண்குழு : ஏ..ஏ..ஏ..ஏ..ஏலலோ..ஏலலோ..
ஏலலோ..ஏல..லோ..ஏலே..ஏ..

பெண் : மாமனே உன்னை காண்காம
வட்டியில் சோறும் உண்காம
பாவி நான் பருத்தி நாரா போனேனே
காகம் தான் கத்தி போனாலோ
கதவு தான் சத்தம் போட்டாலோ
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடைக்கரையோரம்
கத்தியே உன் பேர் சொன்னேனே
ஒத்தையில் ஒடும் ரயில் ஒரம்
கத்தியே உன் பேர் சொன்னேனே
அந்த இரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்னை விட்டு போகாதே
என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே

ஆண் : ஆத்தங்கரை மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

ஆண் : தாவணி பொண்ணே சுகந்தானா
தங்கமே தளும்பும் சுகந்தானா
பாறையில் சின்ன பாதம் சுகந்தானா
தொட்ட பூ எல்லாம் சுகந்தானா
தொடாத பூவும் சுகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா
அயித்தயும் மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகந்தானா
அயித்தயும் மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகந்தானா
அன்னமே உன்னையும் என்னையும்
தூக்கி வளர்த்த திண்ணையும் சுகந்தானா
மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு
உன் மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு

பெண் : ஆத்தங்கரை மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
ஆத்தங்கரை மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

ஆண் : ஓடக்கர ஒழவு காத்துல ஒருத்தி யாரு
இவ வெடிச்சி நிக்குற பருத்தி
தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா

பெண் : உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது

ஆண் : ஆத்தங்கரை மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

Kizhakku Cheemayile - Aathangara Marame

கிழக்கு சீமையிலே - மானுத்து மந்தையில மாங்குட்டி

ஆண் : மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

பெண்குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன்
தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

ஆண் : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

ஆ&பெ குழு : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

ஆண் : மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

பெண்குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன்
தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

அனைவர் : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

***

ஆண் : நாட்டுக்கோழி அடிச்சு நாக்குசொட்ட சமைச்சு
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா

பெண்குழு : மேலு காலு வலிச்சா வெள்ளப்பூண்டு உரிச்சி
வெல்லங்கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா

ஆண் : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க

பெண்குழு : பிள்ளக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு

ஆண் : மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு
மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

பெண்குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன்
தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

ஆண் : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

ஆ&பெ குழு : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

***

ஆண் : ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு

அனைவர் : காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்

ஆண் : வெள்ளிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்

பெண்குழு : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க

ஆண் : ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு
மச்சான ஈரத்துணி கட்டி இறுக்கச்சொல்லு
மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே

ஆண்-1 : அய்யோ

ஆண் : பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

பெண்குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன்
தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

ஆண் : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

ஆண்-2 : ஹோய்

அனைவர் : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

ஆண் : மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே

ஆண்-3 : போடு

ஆண் : பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

Kizhakku Cheemayile - Maanooththu Manthaiyile

கிழக்கு சீமையிலே - தென்கிழக்குச் சீமையில செங்காட்டு

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

ஆண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசானி மூலையில மேகம் இருக்கு

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

***

பெண் : தாய் வீட்டுப் பேரும் தாய் மாமன் சீரும்
தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே

ஆண் : சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே

பெண் : குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே

ஆண் : கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வல்லையே

பெண் : உம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

பெண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசானி மூலையில மேகம் இருக்கு

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு

***

ஆண் : செங்காட்டு மண்ணும் நம் வீட்டுப் பொண்ணும்
கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே

பெண் : தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா
தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே

ஆண் : பந்தத்தை மீறிப் போக சக்தி இல்லையே

பெண் : பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே

ஆண் : வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறையே

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

ஆண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசானி மூலையில மேகம் இருக்கு

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

Kizhakku Cheemayile - Then Kizhakku Cheemayile

Followers