Pages

Search This Blog

Showing posts with label Veyyil. Show all posts
Showing posts with label Veyyil. Show all posts

Thursday, October 24, 2013

வெயில் - உருகுதே மருகுதே

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா

ஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா.. ஓ..

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

ஏ அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு
ஏழுகடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான்
எங்கருத்து மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
நாம சேர்ந்து வாழும் காட்சி கோடி பார்க்கிறேன்
காட்சி யாவும் நிசமா மாற கூட்டி போகிறேன்
சாமி பார்த்துக் கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்கே.. ஏ

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
கூரைப்பட்டுச் சேலைதான் வாங்கிச் சொல்லி கேட்கிறேன்
கூடுவிட்டு கூடுபாயும் காதலால சுத்துறேன்
கடவுள்கிட்ட கருவறை கேட்டேன் உன்னைச் சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா
ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன்

ஓ.. உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா..
ஓ.. உருகுதே

Veyil - Urugudhe Maragudhe

Wednesday, October 9, 2013

வெயில் - வெயிலோடு விளையாடி

வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே

நண்டூரும் நரி ஊரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே

பசி வந்தா குருவி முட்டை
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை
புழுதி தான் நம்ம சட்டை
(வெயிலோடு)

வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்

அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்
அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்

பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயிலத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்
(வெயிலோடு)

வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
பொன்வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்
காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டனோம்

ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்
கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்
எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்

தொப்புள்கொடியைப் போலத்தான்
இந்த ஊரை உணர்ந்தோம்
வெயிலைத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்
(வெயிலோடு)

Veyil - Veyilodu Vilaiyaadi

வெயில் - காதல் நெருப்பின் நடனம்

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
புள்ளி மான்கள் புன்னகை செய்து
வேடனை வீழ்த்தும்
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

கனவுகள் பூக்கின்ற செடி என
கண்கள் மாறுதுன்னாலே
வயதிலும் மனதிலும்
விட்டு விட்டு வண்ணம் வழியிதுன்னாலே

உனது வளையாடும் அழகான
கை சீண்டவே
தலையில் இலை ஒன்று விழ வேண்டுமே

குடைகள் இல்லாத நேரத்து
மழை வாழ்கவே
உனது கை ரெண்டும் குடை ஆனதே
உனது முத்ததில் நிறம் மாறுதே
உடலில் ஒரு சோடி நதி பாயுதே

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயனம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

வானத்தின் மறுபுறம்
பறவையாய் நீயும் நானும் போவோமே
பூமியின் அடிப்புறம்
வேர்களாய் நீண்ட தூரம் போவோமே

கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே
காதல் மொழி கேட்டு மழை ஆனதே
நூறு நூற்றாண்டு காணாத பூவாசமே
பூமி எங்கெங்கும் தான் வீசுதே
என்உள் உன்னை உன்னுள் என்னை
காலம் செய்யும் காதல் பொம்மை

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

Veyil - Kadhal Neruppin Nadanam

Followers