Pages

Search This Blog

Showing posts with label Rhythm. Show all posts
Showing posts with label Rhythm. Show all posts

Tuesday, October 29, 2013

ரிதம் - அன்பே இது

அன்பே இது நிஜம்தானா...
என் வானில் புது விண்மீனா...
யாரைக் கேட்டது இதயம் உன்னைத் தொடர்ந்து போக
என்ன துணிச்சல் அதற்கு என்னை மறந்து போக
இருந்தும் அவை இனிய வரிகளே...

கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ
கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ
விரல் தொடவில்லையே...நகம் படவில்லையே...
விரல் தொடவில்லையே நகம் படவில்லையே உடல் தடையில்லையே
இது போல் ஒரு இணையில்லையே

கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ

விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே
உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே
விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே
உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ

கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ

அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லையே...
நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லையே...
அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லையே
நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லையே
யாரைக் கேட்டது இதயம்...யாரைக் கேட்டது இதயம்
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ...விழி தொடுவது விரல் தொடவில்லை

கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ
ஆஆஆ...
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ

Rhythm - Anbae Idhu

ரிதம் - ஹையோ பத்திகிச்சு

ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ கண்ணே
ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓ ஓ பெண்ணே
நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ஓஓ கண்ணே

ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம்
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம்
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க

ஹையோ பத்திகிச்சு...

ஆணும் பெண்ணும் சிக்கிமுக்கிக் கல் ஒன்றுடன் ஒன்று உரசப் பொறி வருமே வா
வா ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்
ஐம்பொறியெல்லாம் தீப்பொறிதான் ஆசையில் எரியும் சரிதான் அணைவதற்குள் வா வா
வா வா வா வா வா வா
காதல் நெருப்பு உள்ளவரை காலம் உறைவதில்லை
கதிரவனே வா வா காதலிப்போம் வா வா
தீதான் முதல் விஞ்ஞானம் காதல்தான் முதல் மெய்ஞானம்
தீ பத்திகிச்சு...பத்திகிச்சு...பத்திகிச்சு...பத்திகிச்சு...

ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ கண்ணே
நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ஓ ஓ பெண்ணே
முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம்
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க

தீச்சுடர் எரியப் பொருள் வேண்டும் காதல் எரிவது எதிலே
விடை சொல்ல வா வா வா...வா வா வா வா வா வா
ஒவ்வொரு உயிரையும் திரியாக்கி காதல் தன் சுடர் கொளுத்தும்
ஒளி விடுவோம் வா ஹா...வா ஹாஆஆஆ...
காதல் நெருப்பை நீ வளர்த்து கவலைக் குப்பைகளைக் கொளுத்து
சுடர் வளர்ப்போம் வா வா சுகம் வளர்ப்போம் வா வா வா
தீபம் போலே இருந்தவள் நான் தீப்பந்தமாய் என்னை மாற்றிவிட்டாய்
பத்திகிச்சு...பத்திகிச்சு...பத்திகிச்சு...பத்திகிச்சு...
ஹையோ...ஹையோ...ஹையோ...ஹையோ...

ஹையோ பத்திகிச்சு...நெஞ்சோ சிக்கிகிச்சு...
ஹையோ...ஹையோ...பத்திகிச்சு...
பத்திகிச்சு...பத்திகிச்சு...பத்திகிச்சு...பத்திகிச்சு...
ஹையோ பத்திகிச்சு...

Rhythm - Ayyo Pathikichu

ரிதம் - காற்றே என் வாசல்

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம்மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திறண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக...
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு...

Rhythm - Kaatre En Vasal

ரிதம் - தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே
அடி நீயும் பெண் தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைந்தோடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைந்தோடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
தினம் மோதும் கரை தோறும் அட யாரும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலில் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா...

Rhythm - Nadhiye Nadhiye

ரிதம் - தனியே தன்னந்தனியே

தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா.. பேரன்பே.. புரியாதா.. பேரன்பே..ஓஹ்..
தனியே.. தனியே.. தனியே..

ஒக்டோபெர் மாததில் அந்திமழை வானதில்
வானவில்லை ரசிதிருந்தேன்
அந்த நேரதில் யாருமில்லை தூரதில் இவள் மட்டும்
வானவில்லை ரசிக்க வந்தாள்
அன்று கண்கள் பார்து கொண்டோம், உயிர் காட்றை மாட்றி கொண்டோ
ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணைய கண்டோம்
நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது

(தனியே)

என்னுடைய நிழலையும் இன்னொருதி தொடுவது
பிழையென்று கருதிவிட்டாள்
ஒரு ஜீன்ச் அணிந்த சின்னக்கிளி ஹெல்லோ சொல்லி கைகொடுக்க
தங்கமுகம் கருகிவிட்டாள்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள், நான் ஜீவன் உருகி நின்றேன்
சின்னதொரு காரணதால் சிறகடிது மறைந்துவிட்டாள்
மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது
தனியே...

(தனியே)

Rhythm - Thaniye

Followers