Pages

Search This Blog

Friday, December 30, 2016

விருமாண்டி - உன்னை விட இந்த உலகத்தில்

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை யாருமில்லை

வாக்கபட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி
என்னை விட உன்னை சரிவர புரிஞ்சிக்க யாருமில்லை எவளுமில்லை

உன்னை விட…..

என்னை விட……..

அல்லி கொடிய காத்து அசைக்குது
அசையும் குளத்துக்கு உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலை பாயுது

நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்மை பார்த்து ஜோடி சேருது
சேர்த்து வைச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது

என்ன புது தாகம் அனல் ஆகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
கானாக்களா வந்து கொல்லுது
இதுக்கு பேரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா….

உன்னை விட…
காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேட்கையில நமக்கு அது கோயில் மணி
ராத்திரியில் புல் வெளி நனைக்கும் பனி
போத்திக்கிற நமக்கு அது மூடு பனி

உன்னை விட……

உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு ஜென்மம் வேணும் அத கேட்குறேன் சாமியே

(என்ன கேட்குற சாமிய?

நூறு ஜென்மம் உன் கூட

போதுமா?)
நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா?
சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய

காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும்

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை எவளுமில்லை
வாழ்கை தர வந்தான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி

சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை யாருமில்லை

என்னை விட …

உன்னை விட …

Virumaandi - Unnavida Oru

Followers