Pages

Search This Blog

Showing posts with label Riksha mama. Show all posts
Showing posts with label Riksha mama. Show all posts

Tuesday, November 19, 2013

ரிக்ஷா மாமா - வைகை நதியோரம் பொன்மாலை

எண்ணம் எனும் ஏட்டில்
நான் பாடும் பாட்டில்
நீ வாழ்கிறாய்..
நித்தம் வரும் ஊஞ்..

ஐயய்யே.. கொஞ்சம் இருங்க
கொஞ்சம் இருங்க..
என்னாங்க பாடுறீங்க?
அப்படியில்லை..
நான் பாடுறேன் பாருங்க..

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
இது அன்பின் வேதம்
அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காத்தே

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
ஆமா..
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
கரெக்ட்டு.. இது கரெக்ட்டு..

மாலை மழை மேகம் தன்னை மெதுவாய் அழைத்தேன்
துணை வர வேண்டுமென்று தூது சொல்லத்தான்
மூண்டு வரும் மோகம் தன்னை மடலாய் வரைந்தேன்
நினைவுகள் பூத்த வண்ணம் நானும் மெல்லத்தான்
ஓர் சோலை புஷ்பம்தான்
திரு கோயில் சிற்பம்தான்
(ஓர் சோலை..)
இதன் ராகம் தாளம் பாவம் அன்பை கூறும்
(வைகை நதியோரம்..)

யாரின் மனம் யாருக்கென்று இறைவன் வகுத்தான்
இரு மனம் சேர்வதிங்கு தேவன் சொல்லித்தான்
பூஜைக்கிது ஏற்றதென்று மலரை படைத்தான்
தலைவனும் மாலையென்று சூடிக்கொள்ளத்தான்
ஓர் நெஞ்சின் ராகம்தான்
விழி பாடும் நேரம்தான்
(ஓர் நெஞ்சின்..)
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காற்றே
(வைகை நதியோரம்..)

Rickshaw Mama - Vaigai Nadhi Oram

Followers