Pages

Search This Blog

Showing posts with label Arangetra Velai. Show all posts
Showing posts with label Arangetra Velai. Show all posts

Wednesday, April 26, 2017

அரங்கேற்ற வேளை - ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் உண்டு
பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

பெண் : தென்பாண்டி மன்னன் என்று திரு மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண் : இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண் : கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண் : கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண் : நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

பெண் : தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண் : வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்

பெண் : அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன

ஆண் : அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன

பெண் : இசை வீணை வாடுதோ இதமான கைகளை மீட்ட

ஆண் : சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

பெண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

ஆண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

Arangetra Velai - Aagaya Vennilaave

அரங்கேற்ற வேளை - குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
கன்னி வெடி வெச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வெச்சிருக்கேன்
தொட்டா சிதறிவிடும் தோட்டா வெடிச்சிவிடும்
குட்டு ஒடிஞ்சிவிடும் பட்டா தெறிச்சிவிடும் டோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
கன்னி வெடி வெச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வெச்சிருக்கேன் ஹோ ஹோ

தாய்பாலும் கெட்டுபோச்சு என்ன பண்ணும் கொழந்த
ஹும் ஹா...ஹும் ஹா...ஹும் ஹா
வாய்க்காலில் தண்ணி இல்ல தண்ணியிலே மனுஷன்
ஹும் ஹா...ஹும் ஹா...ஹும் ஹா
சுட்டுபுட்ட ஹீரோ நீ தான் தட்டுகெட்ட ஜீரோ தான்
வெட்டுகுத்து நீயும் போட்டா
கட்சிக்குள்ள கோட்டா தான்
வீறாப்பா மெரட்டி உருட்டும்
ஊரெல்லாம் திருட்டு பயக
கெட்டாலும் சுட்டாலும் எல்லோரும் ராஜாங்கதான் டோய்

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
கன்னி வெடி வெச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வெச்சிருக்கேன்
தொட்டா சிதறிவிடும் தோட்டா வெடிச்சிவிடும்
குட்டு ஒடிஞ்சிவிடும் பட்டா தெறிச்சிவிடும் டோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
கன்னி வெடி வெச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வெச்சிருக்கேன் ஹோ

நெல்லு விளையும் நிலம் வீடாகிபோச்சு
ஹும் ஹா...ஹும் ஹா...ஹும் ஹா ஹா
ஊரில் ஜனம் இருந்தும் காடாகி போச்சு
ஹும் ஹா...ஹும் ஹா...ஹும் ஹா ஹா
கெட்ட வேலையான கூட துட்டு வந்த தப்பே இல்ல
இஷ்டப்படி விட்ட போதும் அப்பன் போல புள்ளயில்ல
குளிரெல்லாம் விலகிபோச்சு எல்லாமே பழகிபோச்சு
வெள்ளைக்கும் கொள்ளைக்கும் அல்லாடும்
சொள்ளைகளே ஹே ஹோய்

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
கன்னி வெடி வெச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வெச்சிருக்கேன்
தொட்டா சிதறிவிடும் தோட்டா வெடிச்சிவிடும்
குட்டு ஒடிஞ்சிவிடும் பட்டா தெறிச்சிவிடும் டோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
கன்னி வெடி வெச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வெச்சிருக்கேன் ஹோ

Arangetra Velai - Gundu Onnu Vachirukken

Followers