Pages

Search This Blog

Showing posts with label Bharathi Kannamma. Show all posts
Showing posts with label Bharathi Kannamma. Show all posts

Tuesday, January 3, 2017

பாரதி கண்ணம்மா - சின்ன சின்ன கண்ணம்மா

சின்ன சின்ன கண்ணம்மா
எண்ணி ரெண்டு வருஷமா
சின்ன சின்ன கண்ணம்மா எண்ணி ரெண்டு வருஷமா
உன்ன எண்ணி பூத்திருக்கா
புத்தம் புது பூவால நித்தம் ஒரு பூமாலை
கட்டி வெச்சு காத்திருக்கா
தொண்ட குழிக்குள் நூறு நெனைப்பு
நான் சொல்ல தவிப்பு
ஏ உல்லாச குயிலே நீயாச்சும் வாய் பேசு
உன் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாரேன் தங்க காசு
சின்ன சின்ன கண்ணம்மா

பல்லு தேய்க்க தெரியாது தேய்ச்சு விட்டதும் நீதான்
பாவாடைக்கு நாடாவ கட்டி விட்டதும் நீதான்
அங்கங்கே மருதாணி அப்பி விட்டதும் நீதான்
நான் ஆளான அந்நேரம் அங்கே நின்னதும் நீதான்
மஞ்ச தண்ணி எதுக்கு நீதான் நீதான் நீயேதான்
மாமங்காரன் எதுக்கு நீதான் நீதான் நீயேதான்
மாராப்பு செரி செஞ்ச மகராசன் நீயேதான்
என் நெத்தியில பொட்டு வெச்ச ஒத்த வெரல் நீதான்
சின்ன சின்ன கண்ணம்மா

என்னைப்போல உன் மேல ஆசை வெச்சவ இல்ல
உன்னைப்போல உள்ளூரில் மீசை வெச்சவன் இல்ல
அத்தானே உனக்கும் நான் தாலி கட்டப்போறேன்
அய்யேழு நாளோடு முழுகாம போறேன்
என்ன தரடா நீ இரவும் பகலும் நிறைவாக
மாதம் ஏழு போக வளவி போட வருவாக
கண்ணால நம் மீது கண் வைக்க போராக
உன்ன நானும் பொத்தி வைப்பேன் மண்ணுக்குள்ள வேறாக
சின்ன சின்ன கண்ணம்மா எண்ணி ரெண்டு வருஷமா
உன்ன எண்ணி பூத்திருக்கா
புத்தம் புது பூவால நித்தம் ஒரு பூமாலை
கட்டி வெச்சு காத்திருக்கா
தொண்ட குழிக்குள் நூறு நெனைப்பு
நான் சொல்ல தவிப்பு
ஏ உல்லாச குயிலே நீயாச்சும் வாய் பேசு
உன் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாரேன் தங்க காசு

Bharathi Kannamma - Chinna Chinna Kanamma

பாரதி கண்ணம்மா - நாலெழுத்து படிச்சவரே என் தலையெழுத்த

நாலெழுத்து படிச்சவரே என் தலையெழுத்த படிக்கலையே
ஊர விட்டு போறவரே என் மனச விட்டு போகலையே
தண்ணீரில் பொறந்த மீனு தண்ணீரில் சாவது போல்
என்னோடு வந்த நேசம் என்னோடு போவதென்ன
சாதி என்ன தடுத்ததென்ன

Bharathi Kannamma - Naalethu Padhuchavare

பாரதி கண்ணம்மா - பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு

பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு
காதலர்கள் வாழ்வதில்லை கல்லறைகள் சொல்கிறது
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது
அடி பாரதி கண்ணம்மா மணம் கலங்குவதேனம்மா
பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு

வெறும் கோயில் இங்கே ஏன்மா விளக்கேற்றினாய்
விளங்காத காதல் பாட்டை அரங்கேற்றினாய்
விளையாத மண்ணில் ஏம்மா விதை தூவினாய்
வெயிற்கால கானல் நீரில் வலை வீசினாய்
அறியாமல் பிழை செய்தாய்
மணலாலே சிலை செய்தாய்
அடி பாரதி கண்ணம்மா இது பாழ்பட்ட மண்னம்மா
பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு

வரும் ஜென்மம் நானும் நீயும் உறவாடலாம்
வளையாடும் கைகள் தொட்டு விளையாடலாம்
இடைவேளை போலே இந்த பிரிவாகலாம்
இப்போது காதல் வேண்டாம் விடை கூறலாம்
இளம்பூவே வருந்தாதே
உலகம் தான் திருந்தாதே
அடி பாரதி கண்ணம்மா நீ பாரத பெண்னம்மா
பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு
காதலர்கள் வாழ்வதில்லை கல்லறைகள் சொல்கிறது
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது
அடி பாரதி கண்ணம்மா மணம் கலங்குவதேனம்மா

Bharathi Kannamma - Poonkatre Poonkatre

பாரதி கண்ணம்மா - ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு

ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு
அதுபோல புயலு புயலு நாந்தாண்டி வைகை புயலு
எந்த பொண்ணு தான் ஏங்க மாட்டா
என்ன பாத்ததும் தூங்க மாட்டா
மாதுரி தீட்சித் கூட முந்தாநாளு லெட்டர் போட்டா
ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு
அதுபோல புயலு புயலு நாந்தாண்டி வைகை புயலு

தானாக தூக்கும் என் சட்ட காலர்
காரணம் பையில் அமெரிக்க டாலர்
என் பின்னால் யாரும் அடிக்காதே ஜாலர்
கைய தட்டி அழைச்சா வானம் விட்டு எறங்கி ரம்பையும் தான் வருவாளே
காச விட்டு எறிஞ்சா வெத்தலைய மடிச்சி ஊர்வசியும் தருவாளே
ஜூலி ஜூலி உனக்கும் எனக்கும் தினமும் ஜாலி
இடையில் ஏது தடுக்கும் வேலி
கால விட்டு தடுக்கிக்கிட்டு பாடிடலாம் கவ்வாலி
ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு
புயலு புயலு நாந்தாண்டி வைகை புயலு

பம்பாயில் நேத்து கரிஷ்மாக்கா ஊரு
என்னத்தான் பாத்து கண் வெச்சா பாரு
என்மேலே கிரேசி வடநாட்டு ஸ்டாரு
என்னிடத்தில் ஏதோ கரண்ட் ஒன்னு இருக்கு இழுக்குது பல பேர
என்னுடைய நெனப்பில் சின்ன சின்ன பொண்ணுங்க மறக்குது தன் பேர
அம்சா அம்சா நீதான் எனக்கு சிக்கன் சம்சா
இனிமேல் என்ன ஜல்சா ஜல்சா
ப்ளைட்டில் ஏறி ஹனிமூனுக்கு போயிடலாம் முன் பாசா
ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு
புயலு புயலு நாந்தாண்டி வைகை புயலு
எந்த பொண்ணு தான் ஏங்க மாட்டா
என்ன பாத்ததும் தூங்க மாட்டா
மாதுரி தீட்சித் கூட முந்தாநாளு லெட்டர் போட்டா
ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு
அதுபோல புயலு புயலு நாந்தாண்டி வைகை புயலு

Bharathi Kannamma - Rayula Bullet Railu

பாரதி கண்ணம்மா - ரெட்டகிளி ரெக்கை விரிக்கும்

ரெட்டகிளி ரெக்கை விரிக்கும் இந்த வெட்டவெளி அளக்க
எட்டு திசை எட்டி பறக்கும் மணம் கட்டவிழ்ந்து கிடக்க
நினைத்தால் போதும் நீளம் பூத்த நெடுவானம் நம் கைக்கெட்டும்
நிறைவேறாது காதல் என்று பிறர் பேசும் சொல் பொய்க்கட்டும்
அம்மாடியோ நீயின்றி நான் என்னாவதோ
ரெட்டகிளி ரெக்கை விரிக்கும் இந்த வெட்டவெளி அளக்க

சின்ன சின்ன தூறல்களை தென்பொதிகை மேகம்
சிந்த சிந்த சில்லென்று தான் சில்லிட்டது தேகம்
பின்னி பின்னி நீ அணைத்தால் புல்லரித்து போகும்
இன்னும் இன்னும் என்ன சுகமோ
வண்டு வந்து வாயை வைத்து ஊதுகின்ற பூவே
விண்ணை விட்டு மண்ணை தொட்ட வட்ட வெண்ணிலாவே
உன்னை விட்டு நானிருந்தால் வாழ்க்கை ஒரு தீவே
ஒட்டி ஒட்டி வந்த உறவோ
பிறவி வரும் ஏழு தரம் நீ தொட நான் வருவேன்
இனியும் ஒரு தனிமை இல்லை வாழ்ந்திடும் நாள் வரை தான்
பூக்கோலம் ராக்கோலம் போடாமல் விடுவேனா
ரெட்டகிளி ரெக்கை விரிக்கும் இந்த வெட்டவெளி அளக்க

வண்ண மணி சித்திரமே உன்னிடத்தில் கேட்டு
வாங்கிக்கொண்ட முத்தங்களை வட்டிகளை போட்டு
தந்துவிட வந்திருக்கேன் கன்னங்களை காட்டு
ஒவ்வொன்னாக எண்ணி தரவா
முத்தமிட்டு முத்தமிட்டு பட்ட காயம் போதும்
மஞ்சளைத்தான் நான் அரைத்து பூசினால் தான் போகும்
மேல் உதடும் கீழ் உதடும் மேலும் மேலும் நோகும்
இன்று சென்று நாளை வரவா
ஒதுங்குவதேன் பதுங்குவதேன் கூறடி மாங்குயிலே
ஹா.. உணர்ச்சியிலே நரம்புகளே ஓடுது மாலையிலே
ஏனென்று நானின்று சொல்லாமல் புரியாதா
ரெட்டகிளி ரெக்கை விரிக்கும் இந்த வெட்டவெளி அளக்க
எட்டு திசை எட்டி பறக்கும் மணம் கட்டவிழ்ந்து கிடக்க
நினைத்தால் போதும் நீளம் பூத்த நெடுவானம் நம் கைக்கெட்டும்
நிறைவேறாது காதல் என்று பிறர் பேசும் சொல் பொய்க்கட்டும்
அம்மாடியோ நீயின்றி நான் என்னாவதோ

Bharathi Kannamma - Retakili Rekkai

பாரதி கண்ணம்மா - தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு

யே…. யே….
சேத்து மட தொறக்க செவ்வாள மீன் துடிக்க
தாவி குதிச்ச மீனு தாவணிக்குள் விழுந்துவிட
பாம்பு புகுந்ததுன்னு பருவ பொண்ணு கூச்சலிட
முறைமாமன் ஓடிவந்து முந்தானைக்குள் மீன் எடுக்க
வாலமீன புடிக்க வந்து சேலை மீன புடிச்சதென்ன ஓ…
ஆ…

தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு
அது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு
தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு
அது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு
தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு
அது பாசமெனும் பாட்டு
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு
தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு

உள்ளங்கையில் வந்து தேன் விழுந்தா அத உறிஞ்சி குடிப்பதில் தப்பிருக்கா
வண்ண சிறுக்கொடி பூத்திருக்க வண்டு கண்ண மூடிக்கொண்டால் அர்த்தமுண்டா
வானத்தில நிலா பூத்திருக்கு வண்டு தேனெடுக்க ஒரு தெம்பிருக்கா
மாட்டுக்கொம்பில் வந்து பால் கறக்க மணம் ஆசப்பட்டா அதில் தோதிருக்கா
எறும்பு ஊற கல்லும் தேயும் இது தெரியாதா
கல்ல விடவும் உள்ளம் உறுதி அது தெரியாதா
விடுகத போட்டேன் ஒரு விடை தெரியாதா
விடுகத போட்டேன் ஒரு விடை தெரியாதா
அட ஏண்டா பேராண்டி அத சொல்ல தெரியலையா
நான் சொல்லி தாரேன் வாறியா
தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு
அது பாசமெனும் பாட்டு
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு
தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு

என்னையும் தண்ணியும் …
என்னையும் தண்ணியும் ஒண்ணா கலந்ததில்லே கலந்ததில்லே
நெல்லை போல கோரையிருக்கும் விளைஞ்சதில்ல விளைஞ்சதில்ல
நட்டு வெச்ச நாத்து பூமிய பிடிப்பதில்ல பிடிப்பதில்ல
வேரு விட்ட பிறகு மண்ணை பிரிவதில்ல பிரிவதில்ல
பாறையில் விதைச்ச விதை பலனுக்கு வருவதில்ல
பாறையிலும் செடி முளைக்கும் ஏன் அதை பாத்ததில்ல
கல்லுல நார் உரைக்கும் கதை எங்கும் நடந்ததில்ல
கல்லுல செல செதுக்கும் கலை அது பொய்யும் இல்ல
இது விடுகதையா இல்ல விதியா என் தலை சுத்தி போச்சு
உண்மை நிலை தெரியும் அது புரியும் இது மழுப்புற பேச்சு
அட ஏண்டா பேராண்டி அவ சொன்னது கேட்கலையா
நான் சொல்லி தாரேன் வாறியா
தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு
அது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு
தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு
அது பாசமெனும் பாட்டு
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு
தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு
அது பாசமெனும் பாட்டு
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு
தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு

Bharathi Kannamma - Thendralukku Theriyuma

பாரதி கண்ணம்மா - வாடிப்பட்டி மேளமடா வருஷ

ஹே …
வாடிப்பட்டி மேளமடா வருஷ நாடு கேட்குமடா
கொட்டு சத்தம் கேட்கையிலே கூதல் விட்டு போகுமடா
கல்யாண வீடா இல்லாட்டி காதுகுத்து வீடா
கட்சி மாநாடா ஓட்டு தேடி வாடிப்பட்டி வாடா

வாடிப்பட்டி மேளம் கேட்டா வச்ச செடி பூக்குமடா
கர்பத்துல உள்ள புள்ள கைய தட்டி ஆடுமடா
சுதியும் வேணாம்டா எங்களுக்கு சுரமும் வேணாண்டா
ஒரு தாளக்கட்டுக்குள்ள அடிக்கிற சங்கீதம் தாண்டா

நாலு எழுத்து கத்ததில்ல நாங்க ராகம் படிச்ச வித்வான் இல்ல
அப்பன் ஆத்தா போட்ட பிச்ச சும்மா ஊறிக்கிடக்கு ரத்தத்திலே

ஹோய் அந்தக்கால வாத்தியம் தான் ரொம்போ அழிஞ்சு போச்சு பாதியிலே
வாடிப்பட்டி கொட்டு மட்டும் சும்மா கலந்து போச்சு வாழ்க்கையிலே ஹேய்

Bharathi Kannamma - Vaady Patti Melamada

Followers