Pages

Search This Blog

Showing posts with label Annamalai. Show all posts
Showing posts with label Annamalai. Show all posts

Friday, December 20, 2013

அண்ணாமலை - வந்தேண்டா பால்காரன்

ஹேய்..வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
புல்லு குடுத்தா பாலு குடுக்கும்
உன்னால முடியாது தம்பி -அட
பாதி புள்ள பொறக்குதப்பா
பசும்பால தாய் பாலா நம்பி

வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடபோறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்

***

தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா
தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா
சாணம் விழுந்தா உரம் பாரு
எருவை எரிச்சா திருநீறு
உனக்கு என்ன வரலாறு
உண்மை சொன்னா தகராறு
நீ மாடு போல உழைக்கலியே - நீ
மனுஷனை ஏய்ச்சு பொழைக்கிறியே

வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடபோறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்

***

ஆ&பெ குழு : தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தானனா தன தந்தானனா தன்
தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தனா தந்தனா தந்தனா..

அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க
அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க
அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம்
ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க
அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம்
அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க
அன்னை வாரி கொடுத்தது தாய் பாலு
என்னை வாழ வைத்தது தமிழ் பாலு

வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடபோறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
புல்லு குடுத்தா பாலு குடுக்கும்
உன்னால முடியாது தம்பி -அட
பாதி புள்ள பொறக்குதப்பா
பசும்பால தாய் பாலா நம்பி

வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடபோறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
ஹா ஆஹா ஹா ஓஹோ ஓ
அஹா அஹா ஆஹா ஏய் ஏய் ஏய்
ஆங் ஆங் ஆங் அஹா அஹா ஆஹா
அஹா அஹா ஆஹா அஹா அஹா ஆங் ஆங் (இசை)

Annamalai - Vanthenda Paalkaran

அண்ணாமலை - வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

***

இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது
எல்லையைத் தொடும் வரை எனது கட்டை வேகாது
ஒவ்வொரு விதையிலும் ருட்சம் ஒளிந்துள்ளதே
ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுதே
பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே

அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

***

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்
மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்
பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே
எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே

அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

Annamalai - Vettri Nichayam

அண்ணாமலை - அண்ணாமல அண்ணாமல

பெண் : அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்
அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்
ஆசையிலே சொக்குதய்யா என் வயசு
உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு
உன் காதுக்குள்ளே காதல் சொல்லும் கண்ணா என் கொலுசு

ஆண் : அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி
முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி
ஓன்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி
நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி

பெண் : அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்

***

பெண் : நேசம் உள்ள மாமன் கொஞ்சம் நெருங்கி வரட்டுமே
உன் நெத்தியில விழுந்த முடி என் மேல் விழட்டுமே

ஆண் : ஈரத்தலை துவட்டும் துணி என் மேல் சிந்தட்டுமே
உன் இடுப்பச் சுத்தி கட்டும் சேல என்னைக் கட்டட்டுமே

பெண் : அழகான வீரனே அசகாய சூரனே
கருப்பான வண்ணனே கலிகால கண்ணனே

ஆண் : நாடகம் தொடங்கினால் நான் உந்தன் தொண்டனே

பெண் : அண்ணாமல அண்ணாமல

ஆண் : ஹோய்

பெண் : ஆசை வச்சேன் எண்ணாமலே

ஆண் : ஹைய்யோ

பெண் : அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்

***

ஆண் : பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான்
அடி காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான்

பெண் : சாமிக்குந்தான் கருணை வந்து அள்ளிக் கொடுத்துட்டான்
நான் தாவணிக்கு வந்த நேரம் உன்னை அனுப்பிட்டான்

ஆண் : வாழ்ந்தாக வேண்டுமே வளைந்தாடு கண்மணி
வண்டாடும் பூவுக்கு வலிக்காது அம்மணி

பெண் : உலுக்கித்தான் பறிக்கணும் உதிராது மாங்கனி

ஆண் : அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி
முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி
ஓன்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி
நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி

பெண் : அண்ணாமல அண்ணாமல

ஆண் : ஹ ஹா ஹ

பெண் : ஆசை வச்சேன் எண்ணாமலே

ஆண் : ஹோ ஓ ஓ

பெண் : அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்

ஆண் : ச்சு ச்சு ச்சு

பெண் : ஆசையிலே சொக்குதய்யா என் வயசு
உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு
உன் காதுக்குள்ளே காதல் சொல்லும் கண்ணா என் கொலுசு

ஆண் : அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி

பெண் : அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்

Annamalai - Annamalai Annamalai

அண்ணாமலை - கொண்டையில் தாழம்பூ

ஆண் : கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ

ஆண் : ஆ..ஹா..

ஆண் : கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ
உன்னாட்டம் பொம்பள யாரடி
இந்த ஊரெல்லம் உன்பேச்சு தானடி
அல்லிராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா

பெண் : வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி
உண்மைக்கு பேர் சொல்லும் மனிதனே
நீ ஒரு கோடி ஆண்களின் கலைஞனே
மின்னல் போல, நீ வந்து நின்றால்
கூட்டம் கை தட்டுமே கொடி பூக்கள் கொட்டுமே

ஆண் : கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ

பெண்குழு : பாப பாப பா...பாப பாப பா...
பாப பாப பா...பாப பாப பா...

***

ஆண் : பஞ்சுமெத்தை கால் முளைச்சு நடந்து வந்ததை போல
நீ சுத்தி வந்து இழுக்குறியே சும்மா கெடந்த ஆளை

ஆண் : ஆ...அஹ்ஹா...ஹெய் ஹெய்...அஹ்ஹாஅ

பெண் : கன்று கண்டா கயிரருக்கும் கரா பசுவ போல
நீ எடுக்க வண்ட வழுக்குடய்ய இழுது கட்டிய சேல

ஆண் : கண்டாகி சேலையாக மாறவா
ஓன் கண்ணாடி மேனிதொட்டு மூடவா

பெண் : கல்யாணதாலி கட்டிபுட்டு கட்டில் மேலாடு ஜல்லிகட்டு

ஆண் : ஆனி வந்தா தாலி வந்து
கட்டுவேன் சத்தியம் இன்னும் என்ன பத்தியம்

பெண் : வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி

***

பெண் : மின்னல் போல நீ நடக்கும் சுறுசுறுப்ப பாத்து
ஜன்னல் திறந்து கொண்டதைய்யா சனிக்கிழமை நேத்து
ஆ...அஹஹா...

ஆண் : தாஜ்மஹால் நடந்து வந்து தழுவிக்கொண்டதை பாத்து
அடி தண்ணியாக வேர்த்துபோச்சு சட்டயெல்லாம் நேத்து

பெண் : உன் கண்ணில் காந்த சக்தி உள்ளது
அது என் கண்ணை வந்து வந்து கிள்ளுது

ஆண் : கண்ணுக்குள் பார்தேன் காதல் மச்சம்
கல்யாணம் ஆனால் இன்னும் சொச்சம்

பெண் : அந்த யோகம் வந்து சேர்ந்தா
கண்களும் தூங்குமோ கட்டில் என்ன தாங்குமா

ஆண் : குஷ்பூ...குஷ்பூ...குஷ்பூ

ஆண் : கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ
உன்னாட்டம் பொம்பள யாரடி
இந்த ஊரெல்லாம் உன்பேச்சு தானடி
அல்லிராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா

பெண் : வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி

Annamalai -  Kondaiyil Thaazhampoo

அண்ணாமலை - ஒரு பெண் புறா

ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ
சுமை தாங்கியே சுமை ஆனதே
எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே
ஒரு பெண் புறா

***

கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணை சொக்குமே அது அந்த காலமே
மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லேயே அது இந்த காலமே
என் தேவனே ஓஓ தூக்கம் கொடு
மீண்டும் அந்த வாழ்க்கை கொடு
பாலைவனம் கடந்து வந்தேன் பாதங்களை ஆறவிடு

ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ
சுமை தாங்கியே சுமை ஆனதே
எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே
ஒரு பெண் புறா

***

கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா
அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி
குஞ்சு மிதித்து இந்த கோழி நொந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி
ஆண் பிள்ளையோ சாகும் வரை
பெண் பிள்ளையோ போகும் வரை
விழி இரண்டும் காயும்வரை அழுதுவிட்டேன் ஆனவரை

ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ
சுமை தாங்கியே சுமை ஆனதே
எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே
ஒரு பெண் புறா

Annamalai - Oru Pen Pura

Followers