Pages

Search This Blog

Showing posts with label Ethir Neechal (1968). Show all posts
Showing posts with label Ethir Neechal (1968). Show all posts

Wednesday, January 4, 2017

எதிர் நீச்சல் (1968) - தாமரை கண்ணங்கள்

தாமரை கண்ணங்கள்...
தேன்மலர்க் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்...
முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்

மாலையில் சந்தித்தேன்
மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும் போது
கைகளை மன்னித்தேன்...

கொத்து மலர்க்குழல் பாதமலந்திடும் சித்திரமோ...
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ...(கொத்து)
துயில் கொண்ட வேளையிலே...
குளிர் கண்ட மேனியிலே
துணை வந்து சேரும்போது...சொல்லவோ இன்பங்கள் (மாலையில்)

ஆளில்லை மேலொரு கண்ணனைப் போலவன் வந்தவனோ...
நூலிடை மேலொரு நாடகமாடிட நின்றவனோ...
சுமை கொண்ட பூங்கொடியின்
சுவை கொண்ட தேன்கனியை
உடை கொண்டு மூடும்போது...உறங்குமோ உன்னழகு...(தாமரை)

Ethir Neechal - Thamarai Kannangal

எதிர் நீச்சல் (1968) - அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா

பெ: அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா … ஏன்னா
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா
அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேர்ந்துக்கறா
அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேர்ந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு பொடவயை வாங்கிக்கிறா
பட்டு பொடவயை வாங்கிக்கிறா
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா

ஆ: அடுத்தாத்து சங்கதியெல்லம் நமக்கேண்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி.. பட்டூ…
அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேண்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி
மூன்றெழுத மூணு ஷோவும் பாத்தது நீதாண்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கேதடி… பட்டூ
புடவைக்கேதடி.
அடுத்தாத்து சங்கதியெல்லம் நமக்கேண்டி

பெ: உங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு
உங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு

ஆ: பட்டு கிட்டு பேரைச்சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு
பட்டு கிட்டு பேரைச்சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு

பெ: நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகைனட்டுண்ண்டா நேக்கு
நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகைனட்டுண்ண்டா நேக்கு
எட்டுக்கல்லு வேசரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு

ஆ: சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு
சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு

பெ: எப்போ இருந்தது இப்போ வர்ரதுக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு .. ம்,,கும்
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா

ஆ: ஏட்டிக்கு போட்டி பேசாதடி பட்டூ..ஊ….

பெ: பேசினா என்ன வைப்பேளா ஒரு குட்டு…ஊ…

ஆ: ஆத்திரம் வந்த பொல்லாதவண்டி கிட்டு..ஊ..

பெ: என்னத்த செய்வேள்

ஆ: சொன்னத்த செய்வேன்

பெ: வேரென்ன செய்வேள்

ஆ: : அடக்கி வைப்பேன்

பெ: அதுக்கும் மேலே

ஆ: ம்ம்….. பல்ல உடைப்பேன்

பெ : ஆ…ஆ..ஆ.ஆ….
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா

ஆ: பட்டூ.. அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி
பட்டு நமக்கேண்டி , பட்டு நமக்கேண்டி....

Ethir Neechal(1968) - Aduthathu Ambujatha Pathel

Followers