மடை திறந்து தாவும் நதி அலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசைக் கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹே ...
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின்
நாட்டியம் அமைப்பேன் நான்
மடை திறந்து ...
நேற்றின் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றின் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்களம்
இசைக்கென இசைக்கின்ற ரசிகர்கள்
ராஜ்ஜியம் எனக்கே தான்
மடை திறந்து ....
Nizhalgal - Madai Thiranthu