Pages

Search This Blog

Showing posts with label Acham enbathu madamaiyada. Show all posts
Showing posts with label Acham enbathu madamaiyada. Show all posts

Thursday, November 17, 2016

அச்சம் என்பது மடமையடா - சோக்காலி படம்

ஏய் ஏய் 
ஏக் ஸ்ரீ ராஸ்கோல்
கெட் ட் டவுன் ஏ.ஆர்.ரஹமான் 
கெட் ட் டவுன் 
டவுன் டவுன்… 

சோக்காலி படம் படம்
சோகடிச்சா மதி ஒரு மான் நிக்காதுடா 

சோக்கலி வேண்டாம் வேண்டாம் 
பொண்ணுக்கெல்லாம் ஒன்னுமே இல்லதான்டா  

சோக்காலி படம் படம்
சோகடிச்சா மதி ஒரு மான் நிக்காதுடா 

என்ன மச்சி சோக்கா கீது மச்சி 
சொக்காய மாட்டிக்கிட்டு  
சிட்ட கடத்தி வண்டில வச்சேன் 

சோக்காலி சோக்காலி சோக்காலி
சோக்காலி சோக்காலி கல்லி 
இடது இடது வலது வலது 
திருப்பி திருப்பி வெட்டி சோகாலி காட்டும் வித்தை 
எல்லாம் வெத்தி வெத்தி வெச்சு சோகாலி தான்டி 

ஆ ஏய்… சோகாலி சோகாலி… சோகாலி… சோகாலி காலி 
இடது இடது வலது வலது 
திருப்பி திருப்பி வெட்டி சோகாலி காட்டும் வித்தை 
எல்லாம் வெத்தி வெத்தி வெச்சி சோகாலி நான்டி  

(சோக்காலி)

நம்ம சிறகுகளே இந்த பைக்குங்கள் தானே 
இந்த உலகினிலே முதல் தேவையே 
நான் முருக்க முருக்க என்னை பறக்க பறக்க விடுவாயோ 
கத விலக்க விலக்க என் கவலை மறக்கவிடுவாயோ 
கைய பிடிக்க கட்டி அனைக்க  
எனக்கென்ன ஒரு பைக்கு போதும் 
நேரம் மறக்க தூரம் கடக்க  
என்னோட பைக்கே போதும் போ து ம்… போதுமே 

ஏலே ஏலே ஏலே ஏலே ஏலே மக்கா 
ஏலே ஏலே என்னடா ஆச்சி மச்சி வண்டிய பாரு மச்சி 
பொண்ணுங்க உங்கக்கட்சி நாங்க இப்ப ரெண்டுக்கட்சி 
எ எ எ எ எ எ எ எ எ எ ஏ 
எ எ எ எ எ எ எ எ எ எ ஏ 
என்னடா சொல்வது முடிவது தெரிவதுகூட காமடி பன்ல 
வண்டிய ஓட்டும் போது கனவுல தெரிவது உனக்கென்ன 
ஜாதகம் பார்க்கும் போது வண்டி எந்தன் கவசம் 
பின்னாடி ஓடாதடா உனக்குத்தான் அவஸ்தம் 
சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி  

(சோக்காலி)

நீ குலுங்கி நடக்கும் அழகு நடைய பார்க்க விழிகள் அள்ள 
உன் மயக்கும் மந்திர பார்வை பசங்களுக்கு உறக்கம் இல்ல… 
அதுக்கு மெல்ல மெல்ல இடுப்புல மடிப்புல பார்த்தா ராசா 
விழுந்திடுவான் லேசா… 
இ… புதுமை இல்லாமை இனி புதுமை இருந்தும் 
உன் தந்திரம் மந்திரம் விளையாடும் உரையாடும் 
உந்தன் அழகை கண்டு பல முறை ஒரு முறை திரும்படி 
உன் முன்னாடி தள்ளாடி நின்று நான் சிக்கித் திக்கி முக்கி 
உன் கம்பீர தோற்றத்தில் மிரண்டு நான் சிக்கித் திக்கி விக்கிறேன் 
விக்கெட்டில் நான் கிடந்து 
சோகாலி சோகாலி… சோகாலி காட்டும் வித்தை 
எல்லாம் வெட்டி வெட்டி வெச்சு சோகாலி நான்டி 

Achcham Yenbadhu Madamaiyada - Showkali

அச்சம் என்பது மடமையடா - இது நாள் வரையில்

இது நாள் வரையில் உலகில் எதுவும் அழகில்லை என்றேன் 
எனை ஓங்கி அறைந்தாளே 
குறில் கூச்சத்தால் நெடில் வாசத்தால் 
ஒரு பாடல் வரைந்தானே 
இன்றெந்தன் வீட்டின் கண்ணாடி பார்த்து 
பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னேனே ஏ… ஏ… ஏ… 

இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை 
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கிநாள் 
இதுவரை ஏதுமே மொழியில் சுவை இல்லை 
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாய் 
இதுவரை காற்றிலே தூய்மை இல்லை 
என்றேனே அனைத்தையும் பொய் ஆக்கினாள் 

ஓ மெத்தை மேலே வான் மேகம் ஒன்று 
உக்கார்ந்து கொண்டு உன் கண்ணை பார்த்தால் 
அய் அய் அய்யய்யோ இனிமேலே என்ன செய்வாயோ? 

என் வாழ்க்கை முன் போல் இல்லை 
அதனால் என்ன… பரவா இல்லை… 
இனிமேல் நீ என்ன செய்வாயோ?...... 
இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை 
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள் ஆ… ஆ… ஓ… ஓ… 

அழகில்லை என்றேன் நான் 
அதை அவள் பொய் ஆக்கினாள் 
இசை சுகம் இல்லை என்றேன்  
அதை அவள் பொய் ஆக்கினாள் 
மொழியில் சுவை இல்லை என்றேன் 
அதை அவள் பொய் ஆக்கினாள் 
அவள் அவள் அவள் அவள் பொய் ஆக்கினாள் 
அவள் அவள் அவள், அவள் அவள் அவள்…

Achcham Yenbadhu Madamaiyada - Idhu Naal

அச்சம் என்பது மடமையடா - அவளும் நானும் அமுதும்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்

அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்

ஆளும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்

அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தாலும் புகழும்

மீனும் புனலும்
விண்ணும் விரிவும்
வெற்பும் தோற்றமும்
வேலும் கூறும்

ஆறும் கரையும்
அம்பும் வில்லும்
பாட்டும் உறையும்
நானும் அவளும்

நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்

நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்

அவளும் நானும்
தேனும் இனிப்பும்
அவளும் நானும்
சிரிப்பும் மகிழ்வும்

அவளும் நானும்
திங்களும் குளிரும்
அவளும் நானும்
கதிரும் ஒளியும்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அமுதும் தமிழும்

Achcham Yenbadhu Madamaiyada - Avalum Naanum

அச்சம் என்பது மடமையடா - ராசாளியே நில்லு

பறக்கும் ராசாளியே
ராசாளியே நில்லு
இங்கு நீ வேகமா
நான் வேகமா சொல்லு
கடிகாரம் பொய் சொல்லும்
என்றே நான் கண்டேன்
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே
பறவை போலாகினேன்
போலாகினேன் நெடுந்தூரம்

சிறகும் என் கைகளும்
என் கைகளும் ஒன்றா
ராசாளி பந்தயமா பந்தயமா
நீ முந்தியா நான் முந்தியா
பார்ப்போம் பார்ப்போம்

முதலில் யார் சொல்வது
யார் சொல்வது அன்பே
முதலில் யார் எய்வது
யார் எய்வது அம்பை
மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல
ராவி நீரில் கமலம் போலாடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ

ஆ குளிர்காய்கின்ற தீ

எட்டுத் திசை
முட்டும் எனை பகலினில்
கொட்டும் பனி மட்டும்
துணை இரவினில்
எட்டும் ஒரு பட்டுக்குரல்
மனதினில் மடிவேனே
முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம்
இது முடிந்திட விடுவேனோ

எட்டுத் திசை
முட்டும் எனை பகலினில்
கொட்டும் பனி மட்டும்
துணை இரவினில்
எட்டும் ஒரு பட்டுக்குரல்
மனதினில் மடிவேனே
முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம்
இது முடிந்திட விடுவேனோ

ராசாளி பந்தயமா பந்தயமா
முதலில் யார் சொல்வது
யார் சொல்வது அன்பே
முதலில் யார் எய்வது
யார் எய்வது அம்பை

நின்னுக் கோரி
நின்னுக் கோரி
நின்னுக் கோரி

ஓ நான் உஷா

நின்னுக் கோரி உன்னோடுதான்
நின்னுக் கோரி கோரி
வெயில் மழை வெட்கும்படி நனைவதை
விண்மீன்களும் விண்ணாய்
எனைத் தொடர்வதை

தூருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே
முன்னும் இதுபோலே புது அனுபவம்
கண்டேன் என்று சொல்லும்படி நினைவிலே
இன்னும் எதிர்காலத்திலும் வழியிலே மறவேன்
வெயில் மழை வெட்கும்படி நனைவதை
விண்மீன்களும் விண்ணாய்
எனைத் தொடர்வதை

தூருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே
முன்னும் இதுபோலே புது அனுபவம்
கண்டேன் என்று சொல்லும்படி நினைவிலே
இன்னும் எதிர்காலத்திலும் வழியிலே மறவேனே

ராசாளி பந்தயமா பந்தயமா
முதலில் யார் சொல்வது
யார் சொல்வது அன்பே
முதலில் யார் எய்வது
யார் எய்வது அம்பை
மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல
ராவி நீரில் கமலம் போலாடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே

என் தோள் மீது நீ
ஆ குளிர்காய்கின்ற தீ
என் தோள் மீது நீ
ஆ குளிர்காய்கின்ற தீ
குளிர்காய்கின்ற தீ
குளிர்காய்கின்ற தீ

Achcham Yenbadhu Madamaiyada - Rasaali

Sunday, November 13, 2016

அச்சம் என்பது மடமையடா - தள்ளிப் போகாதே

ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. 

ஏனோ வானிலை மாறுதே 
மணித்துளி போகுதே 
மார்பின் வேகம் கூடுதே 
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே 

கண்ணெல்லாம்.. 
நீயேதான்.. 
நிற்கின்றாய்.. 
விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்.. 
இமை மூடிடு என்றேன்.. 

நகரும் 
நொடிகள் 
கசையடிப் போலே 
முதுகின் மேலே 
விழுவதினாலே 
வரி வரிக் கவிதை.. 
எழுதும் வலிகள் 
எழுதா மொழிகள் 
எனது.. !! 

கடல் போல பெரிதாக நீ நின்றாய்.. 
சிறுவன் நான் 
சிறு அலை மட்டும் தான் 
பார்க்கிறேன்.. பார்க்கிறேன்..
எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று
நான் வந்து நீராடும் நீரூற்று 

ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும் 
ஓசைகள் இல்லாத இரவே.. 
ஓ.. நான் மட்டும் தூங்காமல் 
ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே.. 

கலாபம் 
போலாடும் 
கனவில் வாழ்கின்றனே.. 
கை நீட்டி 
உன்னைத்
தீண்டவே பார்த்தேன்.. 
ஏன் அதில் தோற்றேன்.? 
ஏன் முதல் முத்தம் 
தர தாமதம் ஆகுது.? 
தாமரை வேகுது..!

ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. 
ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. 

தள்ளிப் போகாதே.. 
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே.. 
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே 
(தள்ளிப் போகாதே.. 
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே.. 
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே ) 

தேகம் தடை இல்லை 
என நானும் 
ஒரு வார்த்தை சொல்கின்றேன்.. 
ஆனால் அது பொய் தான் 
என நீயும் 
அறிவாய் என்கின்றேன்.. 
அருகினில் வா.. 

ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ... 
ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ... 

கனவிலே தெரிந்தாய்.. 
விழித்ததும் ஒளிந்தாய்.. 
கனவினில் தினம் தினம் 
மழைத்துளியாய்ப் பொழிந்தாய்.. 

கண்களில் ஏக்கம்.. 
காதலின் மயக்கம்.. 
ஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்.. 

நொடி நொடியாய் நேரம் குறைய.. 
என் காதல் ஆயுள் கறைய.. 
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட.. 

விதியின் சதி விளையாடுதே.. 
எனை விட்டுப் பிரியாதன்பே.. 
எனை விட்டுப் பிரியாதன்பே.. 

ஏனோ ஏனோ 
ஏனோ ஏனோ 
ஏனோ ஏனோ 
அன்பே..

Achcham Yenbadhu Madamaiyada - Thalli Pogathey

Followers