Pages

Search This Blog

Showing posts with label Punnagai Mannan. Show all posts
Showing posts with label Punnagai Mannan. Show all posts

Wednesday, November 6, 2013

புன்னகை மன்னன் - என்ன சத்தம் இந்த

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா
அடடா..

(என்ன)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ

(என்ன)

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ

மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யாரிவர்கள் இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்

(என்ன)

punnagai mannan - Enna satham intha

புன்னகை மன்னன் - வான் மேகம்

வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்
மழைத்துளி தெரித்தது எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது
வானம் முத்துக்கள் சிந்தி
வாழுவு வென்றது காதல் வென்றது
மேகம் வந்தது பூக்கள் சிந்துது
ஆளுமில்லை சேர்த்தெடுக்க நூலுமில்லை கோர்த்தெடுக்க

(வான் மேகம்)

வானிலே வானிலே நீரின் தோரணங்களோ
என் மனம் பொங்குதே என்ன காரணங்களோ
அவன் விழி அசைந்ததில் இவள் மனம் அசைந்ததோ
தளிர்கரம் பிடிக்கையில் மலர்க்கொடி சிலிர்த்ததோ
சாலை எங்கும் இங்கே சங்கீத
மேடையானதோ வாடை பாடுதோ
தூரல் போடுதோ தோகை ஆடுதோ
பூமியெங்கும் கவியரங்கம் சாரல் பாடும் ஜலதரங்கம்

(வான் மேகம்)

punnagai mannan - vaan megam

புன்னகை மன்னன் - கவிதை கேளுங்கள்

ஆ ..ஆ ..
கவிதை  கேளுங்கள்  கருவில்  பிறந்தது  ராகம் (2)
நடனம்  பாருங்கள்  இதுவும்  ஒரு  வகை  யாகம்
பூமி  இங்கு  சுற்றும்  மட்டும்  ஆட  வந்தேன்  என்ன  நட்டம் (2)
ஓடும்  மேகம்  நின்று  பார்த்து  கைகள்  தட்டும்


கவிதை  கேளுங்கள்  கருவில்  பிறந்தது  ராகம்
நடனம்  பாருங்கள்  இதுவும்  ஒரு  வகை  யாகம்

நேற்று  என்  பாட்டில்  சுதியும்  விலகியதே
பாதை  சொல்லாமல்  விதியும்  விலகியதே
காலம்  நேரம்  சேரவில்லை 

காதல்  ரேகை  கையில்  இல்லை
சாக  போனேன்  சாகவில்லை
மூச்சு  உண்டு  வாழவில்லை
வாய்  திறந்தேன்  வார்த்தை  இல்லை
கண்  திறந்தேன்  பார்வை  இல்லை
தனிமையே  இளமையின்  சோதனை
இவள்  மனம்  புரியுமா ,இது  விடுகதை

கவிதை  கேளுங்கள்  கருவில்  பிறந்தது  ராகம்
கவிதை  கேளுங்கள்  நடனம்  பாருங்கள்  ஓ ...

ஜகன  ஜகன  ஜகன  ஜம்  ஜம் ....

ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட 
ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட 

ஜகன  ஜகன 
தம்  தம்  தக்க 

ஜகன  ஜகன 
தம்  தம்  தம் 
ஜகன  ஜகன 
தம்  தம்  தக்க 
ஜகன  ஜகன 
தம்  தம்  தம் 
ஜகன  தீம்த  ஜகன  தீம்த 
தீம்த  தீம்த  தீம்த  தீம்த 
ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட 
ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட

பாறை  மீது  பவள  மல்லிகை 

பதியம்  போட்டதாரு 
ஓடும்  நீரில்  காதல்  கடிதம் 
எழுதிவிட்டது  யாரு 
அடுப்பு  கூட்டி  அவிச்ச  நெல்லை 

விதைத்து  விட்டது  யாரு 
அலையில்  இருந்து  உலையில்  விழுந்து 
துடி  துடிக்கிது  மீனு 
இவள்  கனவுகள்  நனவாக  மறுபடி  ஒரு  உறவு 
சலங்கைகள்  புது  இசை  பாட  விடியட்டும்  இந்த  இரவு 
கிழக்கு  வெளிச்சம்  இருட்டை  கிழிக்கட்டும் 
இரவின்  முடிவில்  கனவு  பலிக்கட்டும் 
இருண்டு  கிடக்கும்  மனமும்  வெளுக்கட்டும் ...

ஓம் ....

ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட 

ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட
ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட 

ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட

Punnagai mannan - Kavidhai kelungal

புன்னகை மன்னன் - கால காலமாக வாழும்

கால  காலமாக  வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம் 
காளிதாசன்  கம்பன்கூட  கண்டதில்லை  எங்கள்  சொப்பனம் 
பூமி  எங்கள்  சீதனம்  வானம்  எங்கள்  வாஹனம் 
யாரடா  நான்  நீயாட  ஹே  மனிதனே  போ ......
கால  காலமாக  வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம் 

வீசும்  காற்றுக்கு  சட்டம்  இல்லை  ஒரு  வட்டம்  இல்லை  தடை  யாரும்  இல்லை 
எங்கள்  அன்புக்கு  தோல்வி  இல்லை  ஒரு  கேள்வி  இல்லை  மலர்  மாலை  நாளை  
முள்ளை  யார்  அள்ளிப்   போட்டாலும்  முல்லை  பூவாக  மாறாதோ 
முள்ளை  யார்  அள்ளி  போட்டாலும்  முல்லை  பூவாக  மாறாதோ 
ஆஹா  பூவுக்கு  யார்  இங்கு  தீ  வைப்பது 
பகையே  பகையே  விலகு  விலகு  ஓடி 

கால  காலமாக  வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம் 
காளிதாசன்   கம்பன்கூட  கண்டதில்லை  எங்கள்  சொப்பனம்  

மோதி  பார்க்காதே  என்னை  கண்டு  நீ  வாழை  தண்டு  இவன்  யானை  கன்று 
நாளும்  போராடும்  வீரம்  உண்டு  சுய  மானம்  உண்டு  பகை  வெல்வோம்  இன்று 
பாதை  இல்லாமல்  போனாலும்  காதல்  தேரோட்டம்  நில்லாது  
பாதை  இல்லாமல்  போனாலும்  காதல்  தேரோட்டம்  நில்லாது 
பந்தம்  நம்  பந்தம்  என்றென்றும்  தீ  பந்தமே 
இணைவோம்  இணைவோம்  பகையை  சுடுவோம்  நாமே 

கால  காலமாக  வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம் 
காளிதாசன்  கம்பன்கூட  கண்டதில்லை  எங்கள்  சொப்பனம் 
பூமி  எங்கள்  சீதனம்  வானம்  எங்கள்  வாஹனம் 
யாரடா  நான்  நீயாட  ஹே  மனிதனே  போ ......
கால  காலமாக  வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம் 
காளிதாசன்  கம்பன்கூட  கண்டதில்லை  எங்கள்  சொப்பனம்

Punnagai mannan - Kaalakaalamaaga vaazhum

புன்னகை மன்னன் - சிங்களத்து சின்னக்

ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா

சிங்களத்து சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே
சிங்களத்து சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே

ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா

அன்பே நீ இன்றி அலைகள் ஆடாது
கண்கள் சாய்த்தாலும் இமைகள் மூடாது
பூவே நீ இன்றி பொழுதும் போகாது
காதல் இல்லாமல் கவிதை வாழாது
ஆதரிக்க நல்ல இளைஞன்
மனம் விட்டு காதலிக்க நல்ல கவிஞன்
காதலிக்க வந்த கலைஞன்
இவன் என்றும் தாவணிக்கு நல்ல தலைவன்
தடை ஏது தலைவா
இடை மேலே உடை நீயே
பூ மஞ்சம் நீ போட வா

எனக்கென்ன சிங்களத்து சின்னக் குயில் நான்
உனக்கொரு மந்திரத்த சொல்லும் மயில் நான்
சிங்களத்து சின்னக் குயில் நான்
உனக்கொரு மந்திரத்த சொல்லும் மயில் நான்

ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா

நிலவே நீ தானே நிஜமா வீண் கேலி
உந்தன் மடி தானே நிலவின் நாற்காலி
ஒரு நாள் அமர்ந்தாலும் உலகில் நான் ராணி
காமன் பூச்சூடும் கலையில் நீ ஞானி
ஆத்திரத்தில் தொட்டு வைக்கிறேன்
இருக்கட்டும் ராத்திரிக்கு விட்டு வைக்கிறேன்
விட்டு விடு தத்தளிக்கிறேன்
என்னை விட்டு எட்டி நில்லு எச்சரிக்கிறேன்
பிடிவாதம் தகுமா
கொடி ஒன்று கனி ரெண்டு
வாங்காமல் தாங்காதம்மா

சிங்களத்து சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே
சிங்களத்து சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே

ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
கன்னம் வலிக்கும் கில்ல்லாதே கல்லுளி மங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா

Punnagai mannan - Singalathu chinna kuyile

புன்னகை மன்னன் - ஏதேதோ எண்ணம்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் 
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன் 
உன் ராணி நானே
பண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே


சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்னக் கூறு பூவும் நானும் வேறு

ஏதேதோ எண்ணம் ...

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா
நீயே அணைக்க வா தீயை அணைக்க வா
நீ பார்க்கும் போது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும் இந்த அன்பு போதும்

ஏதேதோ எண்ணம் ..

Punnagai mannan - Yedhedho ennam

Followers