Pages

Search This Blog

Showing posts with label Kadalora Kavithaigal. Show all posts
Showing posts with label Kadalora Kavithaigal. Show all posts

Thursday, December 29, 2016

கடலோரக் கவிதைகள் - அடி ஆத்தாடி இள மனசொன்னு

அடி ஆத்தாடி. 
அடி ஆத்தாடி... இளமனசொன்று
இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா..!
அடி அம்மாடி.. ஒரு அலை வந்து
மனசில அடிக்குது அதுதானா..!

உயிரோடு...
உறவாடும் 
ஒருகோடி...
ஆனந்தம்..!
இவன் மேகம் ஆக... யாரோ காரணம்..!

அடி ஆத்தாடி... இளமனசொன்று
இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா..!
அடி அம்மாடி..

மேலே போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ..!
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டிப் பாடாதோ..!

இப்படி நான் ஆனதில்லை
புத்திமாறிப் போனதில்லை..!
முன்னே பின்னே நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை..!

கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ..!
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பார்த்தாயோ..
இசை கேட்டாயோ...!

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள
ஏகப்பட்ட சந்தோசம்..!
உண்மை சொல்லு பெண்ணே -என்னை
என்ன செய்ய உத்தேசம்..!

வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன..!
கட்டுமரம் பூப்பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன..!

கட்டுத்தறி காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே..!
தொட்டுத் தொட்டு தென்றல் பேச
தூக்கம் கெட்டுப் போனேனே..!
சொல் பொன்மானே...!

அடி ஆத்தாடி... 
இளமனசொன்று இறக்கை கட்டிப்பறக்குது 
சரிதானா..! 
அடி அம்மாடி.. 
ஒரு அலை வந்து மனசில அடிக்குது 
அது தானா..!

உயிரோடு...
உறவாடும்
ஒருகோடி...
ஆனந்தம்..!
இவன் மேகம் ஆக... யாரோ காரணம்.

Kadalora Kavithaigal - Adi Aathadi

கடலோரக் கவிதைகள் - தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்

ஒரு காலை தூக்கி...
தவம் செய்யும் வாசா...
தாசான தாசா சின்னப்ப தாசா
லேசான லேசா பாடமது லேசா
முட்டாத்து சின்னப்ப தாசா
இள வட்டத்து சின்னப்ப தாசா

ஆ...ஆ...ஆ... ஆ...ஆ... ஆ...ஆ... ஆ...ஆ...

பள்ளிக்கூடம் போகாமலே
பாடங்களைக் கேட்காமலே
பள்ளிக்கூடம் போகாமலே
பாடங்களைக் கேட்காமலே
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்
பள்ளிக்கூடம் போகாமலே
பாடங்களைக் கேட்காமலே
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்

ஆ... ஆ...ஆ...ஆ...ஆ...
ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...
ஆ...ஆ... ஆ...ஆ...ஆ...ஆ...

கத்தி கையிலெடுத்து
கத்திப் பேசி வந்த நியும்

ஆ...ஆ...ஆ...

வாய பொத்தி மூடிக்கிட்டு
சுத்திச் சுத்தி வாரதென்ன

ஆ...ஆ...ஆ...
கம்பு செலம்புச் சண்ட
போட்டு வந்த நீயும் இப்போ
அன்பால் அடியும் பட்டு
கட்டுப் பட்ட மாயம் என்ன

இந்த படிப்ப்க்கொரு
பள்ளிக்கூடமிருக்கு
சொல்லிக் கொடுப்பதர்க்கு
வெட்டவெளிப் பொட்டலுண்டு
பாசும் ஃபெயிலும் இல்லே
இந்த ஒரு பள்ளியிலே
அள்ளி அளந்து விடு
சொல்லிச் சொல்லி நீயும் கொடு

தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்

லலலல்ல லாலால லா
லலலல்ல லாலால லா
லலலல்ல லாலால லா
லலலல்ல லாலால லா

Kadalora Kavithaigal - Das Das Chinnappadas

கடலோரக் கவிதைகள் - போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே
உறவும் இல்லையே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

சுதி சேரும் போது விதி மாறியதோ
அறியாத ஆடு வழி மாறியதோ
புடவை அது புதுசு கிழிந்து அழும் மனசு
தங்கப் பூவே சந்திப்போமா
சந்தித்தாலும் சிந்திப்போமா
மாயம் தானா

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

நடந்தாலும் கால்கள் நடை மாறியதோ
மறைத்தாலும் கண்ணீர் மடை தாண்டியதோ
தரைக்கு வந்த பிறகு தவிக்கும் இந்தச் சருகு
காதல் இங்கே வெட்டிப் பேச்சு
கண்ணீர் தானே மிச்சமாச்சு
பாசம் ஏது

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே
உறவும் இல்லையே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

Kadalora Kavithaigal - Poguthae Poguthae

கடலோரக் கவிதைகள் - பொடி நடையா போறவரே

பொடி நடையா... போறவரே...
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு...ஹோய்

பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு
நான் போட்டேன் மாராப்பு
வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு
நான் போட்டேன் மாராப்பு
ஓ அக்கிரி கக்கிரி பாச்சா
என்கிட்டே ஆகாது
ஒரு மஞ்சள கட்டி மேச்சா
எங்கேயும் போகாது
பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு...ஹேய்

இறுக்கிப் புடிச்சு இழுக்குதய்யா
மனசுக்குள்ள
அந்த சொகத்த நெனச்சு
தவிக்குதய்யா வயசுப் புள்ள
இறுக்கிப் புடிச்சு இழுக்குதய்யா
மனசுக்குள்ள
அந்த சொகத்த நெனச்சு
தவிக்குதய்யா வயசுப் புள்ள
தங்கமே ஒண்ணா ரெண்டா
ஜாதகம் பாப்போம் கொண்டா
குத்தத்த பாத்தாக்கா சொந்தம் இல்ல
கோபத்த பாத்தாக்கா பந்தம் இல்ல
சிலுத்துக்கிட்டா சிலுத்துக்குங்க
சிறுக்கியத் தான் பொறுத்துக்குங்க
பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு...ர்...

பாக்கு வெத்தல மடிச்சு
ஒனக்கு கொடுக்கட்டுமா
நல்ல பவள மல்லிய
பூவ எடுத்து தொடுக்கட்டுமா
பாக்கு வெத்தல மடிச்சு
ஒனக்கு கொடுக்கட்டுமா
நல்ல பவள மல்லிய
பூவ எடுத்து தொடுக்கட்டுமா
ஒன்ன நான் புள்ளி வெச்சேன்
ஊருக்கு சொல்லி வெச்சேன்
வாங்கினா ஓன் தாலி வாங்கப் போறேன்
தாங்கினா ஓன் மால தாங்கப் போறேன் பொருத்தமுன்னா பொருத்தமய்யா
மனசிலென்ன வருத்தமய்யா
பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு
நான் போட்டேன் மாராப்பு
வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு
நான் போட்டேன் மாராப்பு
ஓ அக்கிரி கக்கிரி பாச்சா
என்கிட்டே ஆகாது
ஒரு மஞ்சள கட்டி மேச்சா
எங்கேயும் போகாது
பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும்
வாரேன் வேணாயா வீராப்பு...ஹோய்

Kadalora Kavithaigal - Podinadaya Poravare

கடலோரக் கவிதைகள் - கொடியிலே மல்லியப்பூ மணக்குதே

கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்

நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்

பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாரால

பறக்கும் திசையேது இந்த பறவை அறியாது
உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது

பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு

காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே

தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

Kadalora Kavithaigal - Kodiyile Malliyapoo

Followers