Pages

Search This Blog

Showing posts with label En Bommukutty Ammavukku. Show all posts
Showing posts with label En Bommukutty Ammavukku. Show all posts

Tuesday, October 30, 2018

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு - உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

வெள்ளி நிலா வானவெளி போவது போல்
பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா .. ஹோ …ஹோ
அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய்
பிள்ளைகளின் செல்லமொழி கேட்டதம்மா

ஒருமர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை
பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை
பால்முகம் மறக்காமல் தடுமாறும்
சேய்முகம் கண்டால்தான் நிலை மாறும்

(ஓ ஓ ஓ ஓ…)

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல்
சொந்தமொன்று மன்றமதில் வந்ததென்ன ..ஹோ ..ஹோ
சொர்க்கமொன்று பூமிதன்னில் கண்டதுபோல்
இன்பங்களை தந்துவிட்டு சென்றதென்ன

துணையாய் வழிவந்து எனைசேர்ந்த அன்பே
இனியும் உனைப்போல இணை ஏது அன்பே
எனக்கென நீதானே நம் வாழ்வில்
உனக்கென நான்தானே எந்நாளும்

(ஓ ஓ ஓ ஓ…)

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

En Bommukutty Ammavukku - Uyire Uyirin

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு - பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ

பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ...
தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ...
வாராமல் வந்த செல்வம்
வீடேறி வந்த தெய்வம்
தேடாமல் தேடி வந்த தாழம்பூச்சரம்

ரெண்டு தாய்க்கொரு பிள்ளை
என்று வாழ்ந்திடும் முல்லை
உன்னை யார் சுமந்தாரோ
உண்மை நீ அறிவாயோ (2)

உன்னை நினைத்து உருகிடும் மாது
உன்னை பிரிய மனம் துணியாது
பூவே பனிப்பூவே நீதான் இல்லாது
பார்வை எங்கள் பார்வை தூக்கம் கொள்ளாது
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ...

(பொம்முக்குட்டி)

பெற்ற தாய்படும் பாடு
பிள்ளை தானறி யாது
இது காக்கையின் கூடு
இங்கே பூங்குயில் பேடு  (2)

வந்த உறவை இவள் விடுவாளோ
சொந்த உறவை அவள் தருவாளோ
பாசம் உயிர்நேசம் வாழும் நெஞ்சோடு
பாடும் உறவாடும் ஜீவன் உன்னோடு
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ...

(பொம்முக்குட்டி)

En Bommukutty Ammavukku - En Bommu Kutti Ammavukku Aararo

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு - குயிலே குயிலே குயிலக்கா

குயிலே குயிலே குயிலக்கா – குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா – கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே

காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்
காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்
ஒன்னா ரெண்டா சங்கீதம் கண்டால் சுகம் உண்டாகும்
உந்தன் இசை பூவாகும் எந்தன் மனம் வண்டாகும்
கண்மணி பெண்ணே வந்திடு முன்னே
கண்மணி பெண்ணே பாரடியோ
என் நிலை கொஞ்சம் கேளடியோ
இன்று வரை உன்னை விட்டால் என் துணை யாரடியோ?

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே

ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்
ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்
பாடும் குயில் பாட்டெல்லாம் பாவை குரல் போலேது?
நாளும் இசை கேட்டாலே தாகம் பசி தோனாது
குக்குக்கு குக்கூ
மெட்டு கலந்து
சொன்னது என்ன ராகத்திலே
சொக்கி விழுந்தேன் மோகத்திலே
கண்மணியே பொன்மணியே என் மனம் சொர்க்கத்திலே

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே

En Bommukutty Ammavukku - Kuyile Kuyile

Followers