Pages

Search This Blog

Showing posts with label Arasu. Show all posts
Showing posts with label Arasu. Show all posts

Tuesday, November 22, 2016

அரசு - மல்லிகை மல்லிகை பந்தலே

மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே

முந்திரி முந்திரி தோப்புல
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள
எந்தன் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில

வெள்ளி கொலுசு போலவே காலை உரச வந்தானே
பட்டு புடவை போலவே தொட்டு தழுவ வந்தேனே
உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே
கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே
(மல்லிகை..)

செவியோடு தான் காதல் சொல்வாய் என்பேனே
தயிர் சாதமாய் உன்னை அள்ளி தின்பேனே
பெண் ஆசையே இல்லா மனிதன் நானடி
உன் ஆசையால் இந்த மாற்றம் ஆனேனடி
நிலையான வாழ்க்கை போல வாழ்ந்து வந்தேனே
உன்னை பார்த்த பின்னே என்னை திருத்தி கொண்டேனே
இந்த அருகம்புல்லின் மேல்
பனி துளியாய் நின்றாயே
எந்தன் பருவ தோள்களில்
பச்சை கிளியாய் வாழ்ந்தாயே
என்னை துளசி செடியாய் சுற்றி வந்தாயே
கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டாயே

அதிகாலையில் தோன்றும் வெள்ளை திங்களே
பசி நேரத்தில் பார்த்த தண்ணீற் பந்தலே
கலங்காதே ஓர் தெப்பம் போல வந்தேனே
நீ தீண்டினால் ஐயோ கலங்கி போனேனே
சதை மூங்கில் போலே உந்தன் தேகம் பார்த்தேனே
அதை ஊதி மெல்ல நானும் அணைத்து சாய்த்தேனே
உந்தன் விழியில் கண்டேனே
எந்தன் கனவை கண்டேனே
உந்தன் உள்ளத்தை கண்டேனே
எந்தன் உணவை கண்டேனே
உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே
கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே
(மல்லிகை..)
(முந்திரி..)

Arasu - Malligai Malligai

Followers