Pages

Search This Blog

Showing posts with label Sandhitha Velai. Show all posts
Showing posts with label Sandhitha Velai. Show all posts

Wednesday, November 30, 2016

சந்தித்த வேளை - பெண் கிளியே பெண் கிளியே

பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால் 
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு

பெண் கிளியே ...

வாய் மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
உள்மனம் பேசாமல் உண்மைத் தோன்றாது
வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
பெண் கிளி பொய் சொன்னால் ஆண் கிளி தூங்காது 

ஆண் கிளியே ஆண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு 
பாட்டு வரி புரிந்து கொண்டால் 
உன் பல்லவியை நீ மாற்று 

பெண் கண்களே நாடகம் ஆடுமா
பெண் நெஞ்சமே ஊடகம் ஆகுமா
யார் சொல்லியும் பெண் மனம் கேட்குமா
கைத் தட்டினால் மொட்டுக்கள் பூக்குமா
விடை கேட்டேன் கேள்வி தந்தாய்
இது புதிரான புதிர் அல்லவா
கேள்விக்குள்ளே பதில் தேடு 
அது சுவையான சுவை அல்லவா
உள்ளத்தின் வண்ணம் என்னத் தெரியவில்லை
உடைத்துச் சொல்லும் வரைப் புரிவதில்லை 
மூடாத பூவுக்குள் என்றும் தேன் இல்லை 

பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு 
என் பாட்டு வரி பிடித்திருந்தால் 
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு

என் நெஞ்சிலே ஆயிரம் ஓசைகள் 
உன் காதிலே கேட்கவே இல்லையா
நீ ஆழிப் போல் அலைகளை ஏவினால் 
நான் கரையைப் போல் மௌனமாய் மேவினேன்
நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம்
இது பெண் பூசும் அறிதாரமா
உண்மைக் காண வன்மை இல்லை 
உங்கள் விழி என்மேல் பழி போடுமா
நிலவைப் பிரிவதற்கு வலிமை உண்டு 
உன் நெஞ்சைப் புரிவதற்கு வலிமை இல்லை 
கானல் நீர் தேடாதே அங்கே நீர் இல்லை 

ஆண் கிளியே ஆண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு 
பாட்டு வரி புரிந்து கொண்டால் 
உன் பல்லவியை நீ மாற்று 

பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு 
என் பாட்டு வரி பிடித்திருந்தால் 
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு

sandhitha velai - Pen kiliye pen kiliye

Followers