Pages

Search This Blog

Showing posts with label Subramaniapuram. Show all posts
Showing posts with label Subramaniapuram. Show all posts

Tuesday, January 3, 2017

சுப்ரமணியபுரம் - தேனீரில் சிநேகிதம்

ஆண்: தேனீரில் சிநேகிதம்... தீராத பேச்சுகள்...
பின்சிட்டில் மின்மினி... எப்போதும் சுகம் சுகம் புவியினிலே....
காலேஜ்ஜில் ஏஞ்சல்கள்.. கண்ணாலே தூண்டில்கள்...
காலண்டர் பேபிகள்... கொண்டாடு இளமையின் விழிகளிலே...
வயசு வயசு பறக்குற வயசு
இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும்... என்றென்றும்....
வயசு வயசு பறக்குற வயசு
இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும்... என்றென்றும்....

(இசை...)
ஆண்: இது பற்றிப் பாயும் பாமாலை
செவிச் சேர்த்து செல்லும் காதலை
தீண்டும் நெஞ்சில் சாரலை
தீண்டாதோ மின்னலை தேடும் தென்றலை

ஆண்: பொய் பேசா தோழமை தோள் சாயும் காதலி
நீங்காத சவுந்தர்யம் சந்தோசம் தரும் தரும் நினைக்கையிலே
விரல் மீது முன்பனி நில்லாத மேகங்கள்
நீர் வீழ்ச்சி காலங்கள் என்னாலும் இனிமைகள் இயற்கையிலே

ஆண்: வயசு வயசு பறக்குற வயசு
இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும்... என்றென்றும்....
வயசு வயசு பறக்குற வயசு
இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும்... என்றென்றும்....
வயசு வயசு பறக்குற வயசு
இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும்... என்றென்றும்....
வயசு வயசு பறக்குற வயசு
இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும்... என்றென்றும்....

Subramaniapuram - Theneeril Snehitham

சுப்ரமணியபுரம் - காதல் சிலுவையில்

ஆண்: காதல் சிலுவையில்.. அறைந்தால் என்னை...
தீயின் குடுவையில்.. அடைத்தால் கண்ணை...
காதல் சிலுவையில்.. அறைந்தால் என்னை...
தீயின் குடுவையில்.. அடைத்தால் கண்ணை...
கனவுகளில் விழுந்த என்னை கவலையிட மனம் புகுகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது உறவுகளும் வீணோ...
உலகம் இதுதானோ....

(இசை...)

ஆண்: கழுகுகளின் கண்களிலே மரண பயம் இல்லை
ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்ப்பில்லை
புழுதியிலே இரத்தினமாய் இருந்தது ஒரு தொல்லை
பாவங்களை பாராமல் பழகியதனால் தொல்லை
தேவை பூமியை தினமும் தேனாக்கும்
கோபம் துயரங்களை சேர்க்கும்
கனவுகளில் விழுந்த என்னை கவலையிட மனம் புகுகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது... உறவுகளும் வீணோ...
உலகம் இதுதானோ....

(இசை...)

ஆண்: அவளுடைய கற்பனையை எழுத வழியில்லை
கூண்டுக்கிளி நான் ஆனேன் வெளிவரவும் வாய்ப்பில்லை
இவனுடைய உண்மைகளை உளர வழியில்லை
தோல்விகளின் வீடானேன் துணை வரவும் ஆளில்லை
வாழும் மானிடரின் சுமைகள் தீராது
காலம் உறவுகளின் தீவு
கனவுகளில் விழுந்த என்னை கவலையிட மனம் புகுகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது... உறவுகளும் வீணோ...
உலகம் இதுதானோ.... (காதல் சிலுவையில்...)

Subramaniapuram - Kadhal Siluvayil Araidhaal

Wednesday, November 23, 2016

சுப்ரமணியபுரம் - கண்கள் இரண்டால் உன் கண்கள்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

(கண்கள் இரண்டால்)

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

( கண்கள் இரண்டால் )

கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

(கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்)

Subramaniapuram - Kangal Irandal

Followers