Pages

Search This Blog

Showing posts with label Guru Sishyan. Show all posts
Showing posts with label Guru Sishyan. Show all posts

Tuesday, January 29, 2019

குரு சிஷ்யன் - உத்தம புத்திரி நானு

உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு
தண்ணியில் துள்ளுற மீனு.. தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே
உத்தம புத்திரி நானு.. ஹா.. ஆஆஆ ஓஓஓ..
...

பெண் ஜென்மங்கள் எல்லாமே ஒரு வெள்ளாட்டு மந்தைதான்
ஓஓஓ.. நம் சொந்தங்கள் எந்நாளும் ஒரு வியாபாரச் சந்தைதான்
இதிலென்ன காதல் கீதம்.. இங்கு யாவும் மாயம்தானே
இலக்கியக் காதல் கூட வெறும் ஏட்டில் வாழும் மானே
கோப்பைதான் என் கையோடு.. போதைதான் என் கண்ணோடு
ஆனந்தம் என் நெஞ்சோடு.. ஆலோலம் என் நினைவோடு
சோகங்களே ராகங்களாய் நான் பாடுறேன்.. ஹோய்.. ஹா..

உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு.. ஹோய்..
தண்ணியில் துள்ளுற மீனு.. தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே

உத்தம புத்திரி நானு.. ஹா.. ஆஆஆ ஓஓஓ..
...

தரரரர தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்.. ததம்
தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்..
தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்.. ததம்
தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்..
தரத்தா தரத்தா தரத்தா தரத்தா
தரத்தா தரத்தா தா..
...

என் எண்ணத்தில் இப்போது ஒரு உல்லாசக் கச்சேரி
ஆஆ ஆஆ.. நான் தள்ளாடித் தள்ளாடி இங்கு வந்தாடும் சிங்காரி
அந்திப் பகல் நான்தான் வாட.. வந்த காதல் நோயும் போச்சு
கண்ணிரண்டில் பார்த்தா ஆசை.. இப்போ கானல் நீராய் ஆச்சு
போடி போ.. நீ தனியாளு.. நாளெல்லாம் உன் திருநாளு
கூத்தாடு.. உன் மனம் போலே.. பூத்தாடு.. பொன் மலர் போலே

சோகங்களே ராகங்களாய் நான் பாடுறேன்.. ஹோய்.. ஹா..

உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு.. ஹோய்..
தண்ணியில் துள்ளுற மீனு.. தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே

உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு.. ஹோய்..
உத்தம புத்திரி நானு.. ஆ.. ஆஆஆ ஆஆஆ




Guru Sishyan - Uthama Puthiri Naanu

குரு சிஷ்யன் - வா வா வஞ்சி இளமானே

வா வா வஞ்சி இளமானே

வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக

வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே


ஈரெட்டு வயதில் ஈர தாமரை
வாய் விட்டு சிரிக்காதா

வாய் விட்டு சிரிக்கும் மாலை வேலையில்
தேன் சொட்டு தெரிக்காதா

தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு
தாகத்தை தனித்துதிட வா..

ஆனாலும் நீ காட்டும் வேகம்
ஆத்தாடி ஆகாதம்மா

பொன்வண்டு கூத்தாடும்போது
பூச்செண்டு நோகதம்மா

போதும் போதும் போ


வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக

வந்தால் வஞ்சி இளமானே
கொண்டால் உன்னை இங்கு தானே


நான் உன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி
நூலாட்டம் இளைத்தேனே

நான் கூட தவித்தேன் வேறு மாதிரி
பாலாட்டம் கொதித்தேனே

ஆசைகள் எனக்கும் அங்காங்கே சுரக்கும்
அளைத்தான் அசத்துவது ஏன்

பொன் வண்டு கூத்தாடும் போது
பூச்செண்டு நோகாதம்மா

கால் மீது கால் போட்டு ஆட
கல்யாண நாள் இல்லையா

நேரம் காலம் ஏன்...

வந்தால் வஞ்சி இளமானே
கொண்டால் உன்னை இங்கு தானே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக

வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே

வந்தால் வஞ்சி இளமானே
கொண்டால் உன்னை இங்கு தானே



Guru Sishyan - Vaa Vaa Vanji

குரு சிஷ்யன் - கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்

ஜங்குஜங்குஜான் ஜங்குஜங்குஜான்
ஜங்குசான் ஜான் ஜங்குஜங்குஜான்
தங்குறாதாங்குதான் தங்குறா தங்குதான்
ஹஹ ஹாஆஆஹஹ ஹ ஹ (இசை)

ஹோய்.கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா
மானே தேனே மயிலே குயிலே என்று
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று

கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்..


மாமன் மச்சான் அத்தான்னு சொன்னாளா
வம்பு தும்பு ஏதாச்சும் பன்னாளா
உள்ளாற ஏதேதோ ஞாபகம்
உன் பாட்ட நெஞ்சோடு பாடுற
த்தனக்கட த்தனக்கட த்தனக்கட தின தின

என்னான்னு ஏதுன்னு கேட்டதும்
சொல்லாமா கொள்ளாம மூடுறே
ஹொய் ஹொய் ஹொய் ஹோய்
எத்தனைப் பேர் பார்த்திருக்கேன்
எங்கிட்ட நீ மறைக்காதே
சோத்துல முழுப் பூசணிக்காய்
மறையுமுன்னு நினைக்காதே
காதில் பூவை சுத்திப்பார்க்க
நீ தான் நினைச்சா நடக்காதே

கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா
மானே தேனே மயிலே குயிலே என்று.ஓய்..
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று
தர தரத்தானத்த தானத்த தா


தினத்துன
காதல் கலையில் நான் தான் உன் முன்னோடி
குருவை மிஞ்சும் சிஷ்யன் நீ கில்லாடி
கொண்டாட்டம் கும்மாளம் போடு நீ
அண்ணாச்சி என் வாழ்த்தை ஏத்துக்கோ

த்னத்துனஜிங்குரதான்த்தா..ஜிங்குரதான்த்தா
பெண்டாட்டி ஆகாத காதலி
தாயாக ஆகாம பார்த்துக்கோ
ஹோய் ஹோய் ஹோய்...

ஹோய் ஆத்திரத்தில் துடிக்காதே அவசரமா புடிக்காதே
தூண்டியில மீனாட்டம் மாட்டிக்கிட்டு முழிக்காதே
திட்டம் போட்டு வட்டம் போடு
குருவின் பேரை கெடுக்காதே

கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் பிடிச்சேன்
காதல் நோயை கண்டுப் பிடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா
மானே தேனே மயிலே குயிலே என்று
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று


ஹஹ்ஹஹ
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்.. ஹோய்



Guru Sishyan - Kandu Pudichen

குரு சிஷ்யன் - ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
இங்க என்னடி உன் மனக்கணக்கு
சொல்லடி சொல்லடி எனக்கு
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம் சுடலாமா

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
இங்க என்னடி உன் மனக்கணக்கு
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு


அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது
சிறுகச்சிறுக அருகில் நெருங்கி
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது
அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது
சிறுகச்சிறுக அருகில் நெருங்கி
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது

ஏ.. கொஞ்சிக் கொஞ்சி நான் கொண்டாடிடும்
என் வஞ்சிக் கொடி நீ மிஞ்சாதடி
சிந்தாதடி இங்கு சில்லறைய
என் சிந்தாமணி அது செல்லாதடி

ஆண்களுக்குத்தான் இங்கு என்ன இருக்கு
நல்ல பெண்ணைத் தவிர இந்த உலகத்திலே

அதைச் சொல்லாதே சொர்ணக் கிளியே

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
அட என்ன இங்கு உந்தன் கணக்கு
சொல்லிடு சொல்லிடு எனக்கு
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
என் வீர மகராஜா அடடடட
ஊரைச் சுத்தலாமா
என் வீர மகராஜா அடடடட
ஊரைச் சுத்தலாமா


துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து எடுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே.. ஹோய்
துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து எடுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே

ஊர்க்காவலா நான் உன் காதலி
நீ ஊர் மேயவா உந்தன் பின்னால் வந்தேன்
காதல் கிளி எந்தன் காவல் உண்டு
சிறு மோதல் என்றால் இங்கு ரெண்டில் ஒன்று

பாமாவுக்கு நான் கண்ணனடி
நல்ல மாமி வீட்டு மகராஜனடி
என்னைச் சீண்டாதே செல்லக் கிளியே

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
அட என்ன இங்கு உந்தன் கணக்கு

அட சொல்லடி சொல்லடி எனக்கு
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு

என் வீர மகராஜா அடடடட
ஊரைச் சுத்தலாமா

சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம் சுடலாமா

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
அட என்ன இங்கு உந்தன் கணக்கு

அட ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு



Guru Sishyan - Jingidi Jingidi

Followers