Pages

Search This Blog

Showing posts with label Dhool. Show all posts
Showing posts with label Dhool. Show all posts

Friday, December 30, 2016

தூள் - அறுவா மீசை கொடுவா பார்வை

அறுவா மீசை கொடுவா பார்வை
ஆறுமுகந்தான் கைய வச்சா தூள்
கடவா பல்லு கங்கப்பல்லு 
அடுத்த பல்லு சிங்கப்பல்லு தூள்
ஏய் போடா வெண்ணை போட்டி இன்னா
சொல்லியடிப்பேன் தூள்
ஏய் அட்ரா சக்கை அட்ரா சக்கை
வாடா நைனா தூள் தூள் தூள்
(கொடுவா..)

கண்டைக்காய் வெண்டைக்காய் பொண்ணுங்க நடுவே
சூரக்காய் உடைச்சு ஜெயிச்சாக்கா தூள்
குண்டக்கா மண்டக்கா பேச்சுக்கு எதிரே
கண்டிப்பா கோட்டையை புடிச்சாக்கா தூள்
கட்டபொம்மன் பேரண்டா தொட்டதெல்லாம் தூள்
காட்டு தேக்கு தேகம்டா கெட்டப் எல்லாம் தூள்
ஏய் அட்ரா சக்கை அட்ரா சக்கை
வாடா நைனா தூள் தூள் தூள்
தூள் தூள்..
(கொடுவா..)

மானுக்கு கெம்புடா யானைக்கு தந்தம்டா
மக்களின் பெருமை அன்புடா தூள்
சிங்கம்னா சீறும்டா சிறுத்தையின்னா பாயும்டா
என்னோட பலமெல்லாம் வீரம்டா தூள்
சூரக்கோட்டை கோனியிலே குடையிருந்தா தூள்
தாகம் வந்தா கேணியிலே தண்ணி இருந்தா தூள்
காலம் உன்னை ஏணியிலே ஏத்தி வைக்கும் தூள்
(கொடுவா..)

Dhool - Aruvaa Meesai

தூள் - மதுரை வீரன் தானே

மதுரை வீரன் தானே
அவனை உசுப்பி விட்டே வீணே
இனி விசிலு பறக்கும் தானே…
என் பேராண்டி மதுரை வீரன் தானே

ஏ….சிங்கம் போலே!
ஏ…சிங்கம் போலே நடந்து வரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி!
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ சியான் சியான் சிலுக்கு இவனை
புத்தூருக்கு அனுப்பு
ஏ சியான் சியான் சிலுக்கு இவனை
புத்தூருக்கு அனுப்பு

ஏ புலியைப் போல
ஏ புலியைப் போல துணிஞ்சவண்டா எனங்க பேராண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல 
பிச்சு வீசப் போறாண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல 
பிச்சு வீசப் போறாண்டி
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ இந்தா ஏ இந்தா
ஏ இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா!

ஏ இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா!
அ அ அ அ..
ஏ சூறாவளி
ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
ஏ சூறாவளி
ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம்
மிரண்டு போறாண்டி
ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம்
மிரண்டு போறாண்டி
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ கோவில் பட்டி முறுக்கு
சும்மா குனிய வச்சி முறுக்குடா டேய்..

ஏ ஜல்லிக்கட்டு
ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
உங்களை பனைமரமா பிடுங்கி
இப்போ வீசப் போறாண்டி
ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
உங்களை பனைமரமா பிடுங்கி
இப்போ வீசப் போறாண்டி
ஏ கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா..
ஏ கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா..
ஏ கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா..

Dhool - Madurai Veeran

தூள் - ஆசை ஆசை இப்பொழுது பேராசை

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது

தலை முதல் கால்வரை இப்பொழுது நீ?
தவறுகள் செய்வது எப்பொழுது

ஓ?..இடைவெளி குறைந்தது இப்பொழுது உன்?
இதழ்களை துவைப்பது எப்பொழுது

அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது அதை
ஆடுதான் மேய்வது எப்பொழுது

திருவிழா ஆகிறேன் இப்பொழுது நீ?
எனக்குள் தொலைவது எப்பொழுது

ஆசை ?.ஆசை?ஆசை?.ஆசை? ஆசை?..
ஆசை?ஆசை?.ஆசை..

பூல்வெளி ஆகினேன் இப்பொழுது நீ?
பனித்துளி ஆவது எப்பொழுது

ஓ..கொட்டும் மழை நான் இப்பொழுது உன்?
குடிநீராவது எப்பொழுது

கிணற்றில் சூரியன் இப்பொழுது உன்?
கிழக்கில் உதிப்பது எப்பொழுது

புடவை கருவில் இப்பொழுது நீ?புதிதாய் பிறப்பது எப்பொழுது

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது
மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது

Dhool - Aasai Aasai

Followers