Pages

Search This Blog

Showing posts with label Madhurey. Show all posts
Showing posts with label Madhurey. Show all posts

Thursday, December 1, 2016

மதுர - ஐஸ் கட்டி ஐஸ் கட்டி

ஐஸ் கட்டி ஐஸ் கட்டி உள்ளுக்குள் உருளுது
நீ வந்து கன்ன வெச்சா

மீன் குட்டி மீன் குட்டி நெஞ்சுக்குள் குதிக்குது
நீ வந்து மீசை வெச்சா

ஒஹ் ரெண்டு ரெண்டாய் உடைத்தாய் என்னை உடைத்தாய்

நண்டு நண்டாய் கடித்தாய் வந்து கடித்தாய்

துண்டு துண்டாய் இனித்தாய் எங்கும் இனித்தாய்
நீ வந்து கண் அடித்தாய்

ஐஸ் கட்டி ஐஸ் கட்டி உள்ளுக்குள் உருளுது
நீ வந்து கன்ன வெச்சா

மீன் குட்டி மீன் குட்டி நெஞ்சுக்குள் குதிக்குது
நீ வந்து மீசை வெச்சா

உன்னுடைய ஆசைகளை ஆடயாக தைத்துகுடு
அப்படியே வெக்கம் கொள்ள அனிவேனே

உன்னுடைய முத்தங்களை கோப்பையிலே
ஊற்றிகுடு சொட்டு கூடே மிச்சம் இன்றி குடிப்பேனே

ஜில்லுனு சிலிர்குதடா ஒன்னாலே சல்லுனு வியர்குதடா தன்னாலே

ஆண் மனம் மனக்குதடி உன்னாலே ஐவிரல் அதிருதடி தன்னாலே

சந்தோஷ கலவரம்டா ஒஹ்…

ஐஸ் கட்டி ஐஸ் கட்டி உள்ளுக்குள் உருளுது
நீ வந்து கன்ன வெச்சா

மீன் குட்டி மீன் குட்டி நெஞ்சுக்குள் குதிக்குது
நீ வந்து மீசை வெச்சா

நூரு மையில் வேகத்துலே புயல் வந்து நெஞ்சுகுள்ளே
மையம் கொண்டு தாக்குதடி உன்னாலே

குட்டி குட்டி ஏவுகனை மாறி மாறி வந்து வந்து
வெட்கத்துலே மோதுதடா உன்னாலே

சக்கரை ஆலையும் நீ உன் மீது அக்கறை கொண்டவன் நான் இப்போது

பாலியல் வல்லுனன் நீ என் மீது ஆய்வுகள் செய்வதெல்லாம் எப்போது

கண்ணாடி கன்னியல்லவோ ஒஹ்

ஐஸ் கட்டி ஐஸ் கட்டி உள்ளுக்குள் உருளுது
நீ வந்து கன்ன வெச்சா

மீன் குட்டி மீன் குட்டி நெஞ்சுக்குள் குதிக்குது
நீ வந்து மீசை வெச்சா

ஒஹ் ரெண்டு ரெண்டாய் உடைத்தாய் என்னை உடைத்தாய்

நண்டு நண்டாய் கடித்தாய் வந்து கடித்தாய்

துண்டு துண்டாய் இனித்தாய் எங்கும் இனித்தாய்
நீ வந்து கண் அடித்தாய்

Madhurey - Ice Katti Ice Katti

மதுர - பம்பர கண்ணு பச்ச மொளகா

பம்பர கண்ணு பச்ச மொளகா
இஞ்சிமரப்பா இளைக்க வெச்சா
சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சா
எட்டு சானு உசரம்மா
எகிரி நிக்கும் வயசம்மா
கட்டு சோறு போலே என்னை
கட்டுரியே எதுக்குமா எதுக்குமா

பம்பர கண்ணு பச்ச மொளகா
இஞ்சிமரப்பா இலைக்க வெச்சா
சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சா

குமுடிபூண்டிக்கு வருவியா குலிதலைக்கு வருவியா
இத்துனூண்டு கன்னத்திலே இச்சு நூறு தருவியா

 ஏய் திண்டுகல்லுக்கு வருவியா திருநல்வேலிக்கு வருவியா
குட்டியூண்டு மச்சதிலே அல்வா கிண்டி தருவியா

எரிச்ச எலந்த பழமே நீ ஏத்துகிட்டா சிரிப்பேன்
அரிச்ச மாதுளம் பழமே நீ அனுசரிச்சா இனிப்பேன்

கெடச்ச முந்திரி பழமே நீ கேட்டதெல்லாம் ஜெயிப்பேன்
வெடிச்ச வெல்லெரி பழமே உன் வெட்கம் பாத்து எடுப்பேன்

என்ன சொன்ன என்ன சொன்ன
காதல் வந்தால் ஹே கசக்குமா இனிக்குமா

பம்பர கண்ணு பச்ச மொளகா
இஞ்சிமரப்பா இலைக்க வெச்சா

சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சா

கன்னு ரெண்டும் அந்துருண்டை கண்ணம் ரெண்டும் நெய்யுருண்டை
ஒத்துபோனா கச்சேரிக்கு நீயும் நானும் எள்ளுருண்டை

மொறச்சி போற சின்னவனே சிரிப்பில் என்ன தின்னவனே
முத்தி போன நெஞ்சுகுள்ள முட்டி போட்டு நின்னவனே

கலங்கடிக்கிற கனியே நீ காதிருப்பாய் தனக்கு
வெளக்கனைக்கிர வயசு ஏன் வலய வீசுர எனக்கு

பரிதவிக்குது மனசு நீ கொஞ்சம் போலே ஆத்து
தவிதவிக்குது வயசு நான் தல்லாகுலம் காத்து

என்ன சொல்ல என்ன சொல்ல
காதலுனா கொடுக்குமா எடுக்குமா

பம்பர கண்ணு பச்ச மொளகா
இஞ்சிமரப்பா இளைக்க வெச்சா
சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சா

எட்டு சானு உசரம்மா
எகிரி நிக்கும் வயசம்மா
கட்டு சோறு போலே என்னை

கட்டுரியே எதுக்குயா எதுக்குயா

Madhurey - Bambara Kannu

மதுர - மச்சான் பேரு மதுர நீ நின்னு

மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை
மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை
பறையடிச்சா பாட்டு வரும் உரையடிச்சா ஆட்டம் வரும்
கட்டி வெல்லம் உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட வருமே
மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர ஹேய்

உருமி உருமி மேளம் இவ உரச உரச தாளம்
கூந்தல் முதல் பாதம் வரை இவகோடி ரூபா ஏலம்
உடுக்கே உடுக்கே இடுப்பே இது எந்த நாட்டு நடப்பே
தத்தளிக்கும் பேரழகு தக்காளி பழ செவப்பே
ஹெய் இட்டு கட்டி பாடுவேன் வூடு கட்டி ஆடுவேன்
பட்டி தொட்டி சேர்ந்து வந்தா பானா கத்தி வீசுவேன்
நாளு நல்ல நாளுதான் நடப்பதெல்லாம் தூளுடா
நூறு கோடி ஆளுகிட்ட என்னை பத்தி கேளுடா
அழகான முகமே ஹலோ ஹலோ சுகமே
சுட்டு விரல் தொட்டு புட்டா தீ பிடிக்கிது நகமே

மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை

நெருப்பு நெருப்பு கோழி இவ நெருங்கி வந்த தோழி
வேர்வையிலே தீயனைக்கும் வித்தய கத்துக்கோடி
அருவி அருவி பாய்ச்சல் நான் உனக்குள் ஆடும் நீச்சல்
அலை போல நான் விளயாடினால் அடங்காதோ உந்தன் காய்ச்சல்
படபடக்கும் சிட்டுடா பனாரசு பட்டுடா
தங்கத்தாலே செஞ்சு வச்ச தஞ்சாவூரு கட்டுடா
ஒத்தயாக ஓட வா ஓடி விளயாடவா
பத்து விரல் காத்திருக்கு பந்தல் ஒன்னு போடவா
அழகான திருடி எனக்குள்ள இருடி
கொஞ்சி கொஞ்சி பேசிக்கலாம் கொஞ்ச நேரம் கூடி

மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை
பறையடிச்சா பாட்டு வரும் உரையடிச்சா ஆட்டம் வரும்
கட்டி வெல்லம் உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட வருமே

Madhurey - Machhan Peru Madhurey

மதுர - எலந்த பழம் எலந்த பழம்

எலந்த பழம் எலந்த பழம் உனக்குதான்
செக்க செவெந்த பழம் செவெந்த பழம் உனக்குதான்
குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சுபுறாவும் கொஞ்சுபுறாவும் உனக்குதான்
பால் பழம் உனக்குதான் பாயாசமும் உனக்குதான்
சந்தனம் உனக்குதான் சக்கர பொங்கல் உனக்குதான்

முருகா காப்பாத்து, இத முடிஞ்சா மலை ஏத்து
கந்தா காப்பாத்து இத கட்டி கை மாத்து

எலந்த பழம் எலந்த பழம் உனக்குதான்
செக்க செவெந்த பழம் செவெந்த பழம் உனக்குதான்
குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சுபுறாவும் கொஞ்சுபுறாவும் உனக்குதான்

சார பாம்பு சடை சலவை செஞ்ச இடை
சாட்டா வீசும் நடை உனக்குதான்
மார்பில் மச்சபடை மனசில் ரெட்டை கொட
தோதா தூக்கும் இடம் உனக்குதான்
என் கூச்சம் எல்லாம் குத்தகைக்கு உனக்குதான்
என் கொழுகொழுப்பு இலவசம் உனக்குதான்
என் இடுப்பும் உனக்குதான் கழுத்தும் உனக்குதான்
இன்ச்சு இன்ச்சா உனக்குதான்

அய்யோ முருகா காப்பாத்து, இத முடிஞ்சா மலை ஏத்து
கந்தா காப்பாத்து இத கட்டி கை மாத்து

எலந்த பழம் எலந்த பழம் உனக்குதான்
செக்க செவெந்த பழம் செவெந்த பழம் உனக்குதான்
குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சுபுறாவும் கொஞ்சுபுறாவும் உனக்குதான்

குண்டு குண்டுகொடி ரெண்டு ரெண்டு மடி
நண்டு நண்டு புடி உனக்குதான்

சொட்டு சொட்டா இதழ் கட்டு கட்டா உடல்
தட்டு தட்டா முத்தம் உனக்குதான்

என் படுக்கையிலே பாதி இடம் உனக்குதான்

என் மனசுகுள்ள மொத்த இடம் உனக்குதான்

தேமா உனக்குதான்

புளிமா உனக்குதான்

மாமா நான் உனக்கேதான்

ஹய்யோ ஆத்தாடி இது ரெட்டை தாப்பாடி
ஆசை கூத்தாடி நான் அசந்து போனேண்டி

எலந்த பழம் எலந்த பழம் உனக்குதான்
செக்க செவெந்த பழம் செவெந்த பழம் உனக்குதான்

குங்கும பூவும் குங்கும பூவும் எனக்குதான்
இந்த கொஞ்சுபுறாவும் கொஞ்சுபுறாவும் எனக்குதான்

பால் பழம் உனக்குதான் பாயாசமும் உனக்குதான்
சந்தனம் உனக்குதான் சக்கர பொங்கல் உனக்குதான்

ஹய்யோ ஆத்தாடி இது ரெட்டை தாப்பாடி
ஆசை கூத்தாடி நான் அசந்து போனேண்டி

Madhurey - Elantha Pazham

மதுர - கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான்

கண்டேன் கண்டேன் 
எதிர்காலம் நான் கண்டேன் 
கொண்டேன் கொண்டேன் 
உயிர் காதல் நான் கொண்டேன்

இரு விழியினிலே அவன் அழகுகளை 
மிக அருகினிலே அவன் இனிமைகளை 
தின்றேன் தின்றேன் 
தெவிட்டாமல் நான் தின்றேன்

கண்டேன் கண்டேன் 
எதிர்காலம் நான் கண்டேன் 
கொண்டேன் கொண்டேன் 
உயிர் காதல் நான் கொண்டேன்... கொண்டேன்....

நீ வளையல் அணியும் கரும்பு 
நான் அழகை பழகும் எறும்பு 

ஆ... நீ தழுவும் பொழுதில் உடும்பு 
நாள் முழுதும் தொடரும் குறும்பு 

சுடிதாரை சூடிச்செல்லும் பூக்காடு 
தொடும் போது தூறல் சிந்தும் மார்போடு 

பகல் வேஷம் தேவையில்லை பாய்போடு 
பலி ஆடு நானும் இல்லை தேன்கூடு 

ஒரு விழி எரிமலை 
மறு விழி அடைமழை பரவசம் உயிரோடு 

மேல் இமைகள் விரதம் இருக்க 
கீழ் இமைகள் பசியில் துடிக்க

ம்..ம்...கால் விரலில் கலைகள் வசிக்க 
கை விரலில் கலகம் பிறக்க 

எனை மோதி போகும் தென்றல் தீ மூட்ட 
இமையோரம் கோடி மின்னல் நீ காட்ட 

தணியாத தாகம் உன்னை தாழ்பூட்ட 
கனவோடு நீயும் வந்து போர் மீட்ட 

ஜனனமும் மரணமும் 
பலமுறை வரும் என
தலையணை நினைவூட்ட 

கண்டேன் கண்டேன் 
எதிர்காலம் நான் கண்டேன் 
கொண்டேன் கொண்டேன் 
உயிர் காதல் நான் கொண்டேன் 

இரு விழியினிலே அவன் அழகுகளை 
மிக அருகினிலே அவன் இனிமைகளை 
தின்றேன் தின்றேன் 
தெவிட்டாமல் நான் தின்றேன்...

Madhurey - Kanden Kanden

Followers