Pages

Search This Blog

Showing posts with label Endrendrum Kadhal. Show all posts
Showing posts with label Endrendrum Kadhal. Show all posts

Thursday, November 7, 2013

என்றென்றும் காதல் - கண்களா மின்னலா

கண்களா ஹ்ம்ம் ....
மின்னலா ஹ்ம்ம் ....
கூந்தலா ஊஞ்சலா
இந்த சந்தேகம் நீ வந்ததாலா - காதலா
மௌனமே பாடலா ஆனதே காதலா
இந்த சந்தோஷம் நீ தந்ததாலா - வெண்ணிலா

ஒஹ் ...என்னோடுதான் நான் இல்லையே
கண்ணோடு தான் துயில் இல்லையே ஹோ ...
கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா
இந்த சந்தேகம் நீ வந்ததாலா - காதலா

ரோஜாபூ தேகத்தில் தாழம்பூ வாசங்கள்
நான் இங்கு கண்டேனடி
செவ்வாயின் ஓரத்தின் சூடான தேனுக்கு
நான் ஏங்கி நின்றேனடி
தொட்டாலும் தாளாமல் விட்டாலும் போகாமல்
தள்ளாடும் நெஞ்சம் இனி
முத்தங்கள் எல்லாமும் முத்துக்கள் என்றாக
நான் கோர்ப்பேன் முத்து மணி
உன்னை தாயாக்கி தாலாட்டுவேன் - கண்மணி

மௌனமே பாடலா ஆனதே காதலா
இந்த சந்தோஷம் நீ தந்ததாலா - வெண்ணிலா

கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா
இந்த சந்தேகம் நீ வந்ததாலா - காதலா

இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்

ஆனந்த வெள்ளத்தில் நான் மூழ்கும் நேரத்தில்
மூச்சுக்கு திண்டாடினேன்
வீழ்கின்ற நேரத்தில் தீ பற்றி கொள்கின்ற
விண்மீனைப் போல் ஆகினேன்
காமன்தன் தேசத்தில் என்னென்ன இன்பங்கள்
எல்லாமும் நான் வாங்கினேன்
எல்லாமும் தந்தாலும் இல்லாத நெஞ்சம் போல்
நாள் தோறும் நான் ஏங்கினேன்
இது எப்போதும் தீராத தாகம் - காதலா

கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா
இந்த சந்தேகம் நீ வந்ததாலா - காதலா
மௌனமே பாடலா ஆனதே காதலா
இந்த சந்தோஷம் நீ தந்ததாலா - வெண்ணிலா

ஒஹ் ...என்னோடுதான் நான் இல்லையே
கண்ணோடு தான் துயில் இல்லையே ஹோய் ...
கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா
இந்த சந்தேகம் நீ வந்ததாலா - காதலா , வெண்ணிலா

Endrendrum Kaadhal - kangala minnala

என்றென்றும் காதல் - ஓ தென்றலே என்

ஓ  தென்றலே என் தோளில்   சாய  வா  
தாய் மண்ணின் பாசமெல்லாம்  என்னோடு பேச வா 
ஓ  தென்றலே என் தோளில் சாய வா 
தாய் மண்ணின் பாசமெல்லாம் என்னோடு பேச வா 
நான்  நடக்கும் அந்த சாலை  
பூ உதிர்க்கும்  அந்த சோலை 
 நான் நடக்கும் அந்த சாலை
 பூ உதிர்க்கும் அந்த சோலை
 நலன்கள்   சொல்லு
ஓ  தென்றலே 
ஓ ... தென்றலே ..  

முதல்  காதல்  முதல்  முத்தம்  என்றும்  மறக்குமா  
ஓ  முதல்  காதல்  பூ  முத்தம்  என்றும்  மறக்குமா  
நெஞ்சில்  தாங்கும்  நியாபகங்கள்  வண்ணம்  இழக்குமா 
 நானில்லை  என்னிடம்  நெஞ்சமோ  உன்னிடம்  
இடம்  காலம்  மாறும் போதும்  என்  பாசம்  மாறுமா  
இடம்  காலம்  மாறும்போதும்  என்  பாசம்  மாறுமா  
தழுவிகொள்ளு  ஓ  தென்றலே  
ஓ  தென்றலே   

கிளிகள்  காணும்  நேரத்தில்  மீனாக்ஷி  நியாபகம்  
ஆ  கிளிகள்  காணும்  நேரத்தில்  மீனாக்ஷி  நியாபகம்  
நிலவில்  நானும்  பார்கிறேன்  நினைவில்  ஆடும்  பூமுகம்  
தாய்மையின்  சாயலை  உன்னிடம்  பார்கிறேன்  
என்  நெஞ்சில்  தவிக்கும்  நினைவை  
என்  கண்ணில்  மிதக்கும்  கனவை  
என்  நெஞ்சில்  தவிக்கும்  நினைவை  
என்  கண்ணில்  மிதக்கும்  கனவை  
எடுத்து சொல்லு  
ஓ  தென்றலே என்  தோளில்  சாய  வா  
காதல்  நெஞ்சின்  ஆசை  எல்லாம்  உன்னோடு  பேச  வா  
ஓ  தென்றலே  ஓ  தென்றலே  ஓ  தென்றலே  ...

Endrendrum kaadhal - Ohh Thendraley

என்றென்றும் காதல் - உலகெல்லாம் ஒரு சொல்

உலகெல்லாம்  ஒரு சொல் காதல் 
ஒரு சொல்லில்  உலகம் காதல் 
உலகெல்லாம் ஒரு சொல் காதல் 
ஒரு சொல்லில் உலகம் காதல் 
கார்காலம்  தொடங்கி கம்ப்யூட்டர் வரையில் 
கார்காலம் தொடங்கி இன்டர்நெட்  வரையில் 
அன்றும்  இன்றும் என்றென்றும் காதல் 
எங்கெங்கும்  காதல் ஒவ்வொன்றும்  காதல் 
என்றென்றும் காதல் என்றென்றும் காதல் 

உலகெல்லாம் ஒரு சொல் காதல் 
ஒரு சொல்லில் உலகம் காதல்  

பூமியோடு  காதல்  மழை  சிந்தும்  நீருக்கு  
பூக்களோடு  காதல்  வழி  போகும்  காற்றுக்கு  
காலம்  மீது  காதல்  கடிகார  முள்ளுக்கு  
கம்பனோடு  காதல்   தமிழ்  கண்ட  சொல்லுக்கு  
நதி  வளைந்து  போவது  எல்லாம்   கரையோடு  கொண்ட  காதல்  
ஆண்  குனிந்து  போவதெல்லாம்   பெண்ணோடு  கொண்ட  காதல்   
எங்கெங்கும்  காதல்  ஒவ்வொன்றும்  காதல் 
என்றென்றும்  காதல்  என்றென்றும்  காதல்  

உலகெல்லாம்  ஒரு  சொல்  காதல்  
ஒரு  சொல்லில்  உலகம்  காதல்  

லலளால்  லல்லால்  லா  லா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ  
லல்லளால்  லலலல  லா ஆ அ  இம்ம் ம்ம்ம் ம்  

பிள்ளையோடு  காதல் பெற்ற அன்னைக்கு  
பொம்மையோடு  காதல் விளையாடும்  பிள்ளைக்கு  
காதல் இல்லை என்றால் நம்  சாமி  வாழாது  
பூமி  மட்டும்  சுற்றும்  அட  பூக்கள்  இல்லாது  
கார்காலம்  ஒன்று  வந்தால்   அட  கம்பளி  மீது  காதல்  
பதினேழு  வயது  வந்தால்   அட  காதல்  மீது  காதல்   

எங்கெங்கும்  காதல்  ஹே  ஹே  ஒவ்வொன்றும்  காதல்  
என்றென்றும்  காதல்  என்றென்றும்  காதல் 

 உலகெல்லாம்  ஒரு  சொல்  காதல் 
 ஒரு  சொல்லில்  உலகம்  காதல்   

என்றென்றும்  காதல்  என்றென்றும்  காதல்  
என்றென்றும்  காதல்  என்றென்றும்  காதல்

Endrendrum kaadhal - Ulagellam oru sol

Followers