வைத்த கண் வைத்தது தானோடி
அப்படியே நிற்கின்றாய்
தைத்த முள் தைத்தது தானோடி
சொக்கியே போகின்றாய்
அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க
அவசரம் நீயும் பூப்பூக்க
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே
(வைத்த கண்..)
ஹா யாரோ எந்தன் மனசின் நடுவிலே
ரோஜா தோட்டம் வைத்தது
உற்று பார்த்தேன் அந்த பகுதியில்
உந்தன் கால் தடம்
ஆ.. யாரோ எந்தன் உயிரின் அறையிலே
கவிதை புத்தகம் படித்தது
தேடி பார்த்தேன் அந்த இடத்திலே
உந்தன் வாசனை
உன் பேரழகு கொஞ்சம்
உன் பேச்சழகு கொஞ்சம்
என் பருவத்துக்குள் வந்து
எனை பஸ்பம் செய்யுதடா
உன் கண்ணழகு கொஞ்சம்
உன் முன்னழகு கொஞ்சம்
என் இரவுக்குள்ளே வந்து
துளியாய் இறங்கி கடலாக மாறியதே
தந்திரா கண்களில் என்னென்ன
தந்திரம் செய்தாயோ
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள்
பத்திரம் ஆனாயோ
இந்த சிரிப்பு இந்த சிரிப்பு தான்
என்னை கொள்ளை கொண்டது
இந்த கண்கள் இந்த கண்கள் தான்
கலகம் செய்தது
இந்த சிணுங்கள் இந்த சிணுங்கள் தான்
எந்தன் அணுவில் நுழைந்தது
இந்த செழுமை இந்த செழுமைதான்
வயசை ஏத்துது
நீ முத்தம் மொத்தம் வைத்தே
என் கண்ணம் பள்ளம் ஆச்சு
உன் அத்துமீரல் பார்த்து
என் பெண்மை திண்மை ஆச்சு
நீ என்னை தீண்டி தீண்டி
என் ஸ்வாச பையில் ஏனோ
ஒரு வெப்ப பந்து நின்று
மெதுவாய் மெதுவாய் சூடாக சுழலுதடி
தந்திரா கண்களில் என்னென்ன தந்திரம் செய்தாயோ
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள் பத்திரம் ஆனாயோ
ஆ வெண்ணிலா வேர்க்குது பாரம்மா
வேர் வரை பூக்குது ஏனம்மா
சிப்பியில் சமுத்திரம் சிக்கியது என்னம்மா
(வைத்த கண்..)
Bose - Vaitha Kann