Pages

Search This Blog

Showing posts with label Veyil. Show all posts
Showing posts with label Veyil. Show all posts

Monday, August 13, 2018

வெயில் - காதல் நெருப்பின் நடனம்

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்
காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
புள்ளி மான்கள் புன்னகை செய்து
வேடனை வீழ்த்தும்
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

கனவுகள் பூக்கின்ற செடி என
கண்கள் மாறுது உன்னாலே
வயதிலும் மனதிலும்
விட்டு விட்டு வண்ணம் வழியுதுன்னாலே
உனது வலையாடும் அழகான
கை தீண்டவே
தலையில் இலை ஒன்று விழா வேன்டுமே
குடைகள் இல்லாத நேரத்து
மழை வாழ்கவே
உனது கை ரெண்டும் குடை ஆனதே
உனது முத்த்தத்தில் நிறம் மாறுதே
உடலில் ஒரு சூடு நாதி பாயுதே

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

வானத்தின் மறு புறம்
பறவையாய் நீயும் நானும் போவோமே
பூமியின் அடிப் புறம்
வேர்களாய் நீண்ட தூரம் போவோமே
கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே
காதல் மொழி கேட்டு மழை ஆனதே
நூறு நூற்றாண்டு காணாத பூவசமே
பூமி எங்கெங்கும் தான் வீசுதே

என்னுள் உன்னை உன்னுள் என்னை
காலம் செய்யும் காதல் பொம்மை

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்



Veyil - Kaadhal Neruppin Nadanam

வெயில் - வெயிலோடு விளையாடி வெயிலோடு

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே

நண்டூரும் நரி ஊரும் கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே

பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை புழுதி தான் நம்ம சட்டை
புழுதி தான் நம்ம சட்டை

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே

வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்

தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்

அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்

அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்

பொட்டல் காட்டில் பொழுதெல்லாம் ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயிலத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே

வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
பொன் வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்

காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டனோம்

ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்
கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்

எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்

தொப்புள்கொடியைப் போலத்தான் இந்த ஊரை உணர்ந்தோம்
வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே

நண்டூரும் நரி ஊரும் கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே

பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை புழுதி தான் நம்ம சட்டை
புழுதி தான் நம்ம சட்டை புழுதி தான் நம்ம சட்டை

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே



Veyil- Veyilodu Vilaiyadi 

வெயில் - செத்தவடம் செத்து போனேன்

செத்தவடம் செத்து போனேன்
சொந்தம் சொன்ன வார்த்த
யாத்தே யாத்தே

பத்து தல நாகம் போல
கொத்துதடா இந்த வாழ்க்கை

தெக்க போறதா இல்ல
வடக்க போறதா

தெச ஒண்ணும்
தெரியலயே

கொல கார பயமக்கா
என்ன கொண்ணுதான் போடுங்களே

ஓ ஓ ஓ



Veyil - Chetavadam

வெயில் - இறைவனை உணர்கிற தருணம் இது

இறைவனை உணர்கிற தருணம் இது
இங்கே வாழும் நிமிடம் அது

இறைவனை உணர்கிற தருணம் இது
இங்கே வாழும் நிமிடம் அது

இந்த உறவின் பெயரினை யார் சொல்வது
தொலைந்தததை விதி வந்து இணைக்கின்றது

முகவரி மாறிய கடிதம் ஒன்று
மறுபடி இங்கே வருகின்றது

மழலை காலம் கண் முன் வந்து
மயிலிறகை அசைகின்றது



Veyil - Iraivanai Unarkira Tharunam

வெயில் - அருவா மினுமினுங்கா

எட்டு தெய்வத்துக்கும் மூத்த கருப்பா
எட்டு நாட்ட காக்க வந்த பெரிய கருப்பா

எட்டு வச்சு நடந்து வாரோம்
கருப்பன் எல்லைக்குத்தான் நடந்து வாரோம்

அருவா மினுமினுங்கா
கருப்பானோட ஆவேசம் அருள் பொங்க

திருக்கு மீச பாரு
திருநீறு பூச பாரு

உருட்டு பல்ல பாரு
குங்கும போட்ட பாரு

கருப்பானோட வெட்டு பாரு
கருங்கெடா குட்டி சோறு

துண்டு பீடி கட்ட பாரு
சுதி ஏத்த பட்ட சாரு

கட்ட செருப்பு மாட்டி
கருப்பனுக்கு காலுக்கு சலங்க கட்டி

காக்கும் கருப்பா சாமி
கால மாத்தி ஆடி வாடா

அருவா மினுமினுங்கா
கருப்பானோட ஆவேசம் அருள் போங்க

பட்டி பேசி ஆத்தா
பள பளக்கும் சேலையா கட்டி ஜாக்கெட்டு போடாம வந்தாளே

பேச்சி ஆத்தா ஆளக கண்டு எத்தனையோ பெருசுக
எச்சிய ஒழுக விட்டு நிண்டாய்ங்க

அவ சட்ட மட்டும் போட்டுருந்தா ஜூப்பரு
ஜாக்கெட்டு போடாம வந்தது க்லாமரு

எத்தனையோ பெருசுக தவிக்கிறான்
அவ ஆளக கண்டு நம்மாளு எழைக்கிறான்

எழைக்கிறான் ஆத்தாடி துடிக்கிறான்
அடிக்கிறான் சுருட்ட குடிக்கிறான்

மாட்டுக்கு பட்ட போட்டான்
மனுசனுக்கு நாமம் போட்டான்

பேசிக்கு பேச்சு இங்க தலைய
ஆட்ட விட்டான்

அண்ணணுக்கு ரெண்டு தாரன் அதுக்கொரு தலையாட்டு
கெழவி சமயப் போரா அதுக்கொரு தலையாட்டு

புருசன் இல்லாம புள்ளப் பெத்தா அதுக்கொரு தலையாட்டு
பொண்டாட்டி ஊருக்கு போனா கொழுந்தியாளுக்கு தலையாட்டு

வீட்டுக்கு வீடு டீவீ
புள்ள எங்க படிப்பாண்டி போயி

அவன் ராங்கு கார்டா வாங்கி பாத்தாக்க
நெஞ்சு கொதிக்குது பாவி

அடிக்கடி முத்த காசி வருகுதடி
நாம இப்படியா காதலிச்சோம் பாத்துக்கடி

தொப்புளுக்கும் கீள சேலையாடி
புள்ள பம்பரமா வாங்குறான் புரிஞ்சுக்கடி

அட தெனம் தெனம் என்ன மோதி
கலர் டீவீ ய வாங்க சொன்ன பாவி

சாமிக்கு மாலா மிச்சம்
பூசாரிக்கு பொங்க மிச்சம்

இழந்தாரிக்கு நட தான் மிச்சம்
கொமாரிக்கு நெனப்பு மிச்சம்

பூட்டுக்கு சாவி மிச்சம்
ஆட்டுக்கு புழுக்க மிச்சம்

கெளவனுக்கு இழப்பு மிச்சம்
கெழவிக்கு உலக்க மிச்சம்

எவன்டா அவன் எடுபட்ட பய
எடு வெளக்கு மாத்த

அட குடிக்க இப்ப கூழும் இல்ல
உடுத்த ஒரு துணியும் இல்ல

இப்படி குடிச்சிபுட்டு வந்தியின்னா
குடும்பம் என்ன ஆகுறது

நீ பட்டத எண்ணி பாரு
நல்ல பாதைய எனக்கு கூறு

நீ பட்டத எண்ணி பாரு
நல்ல பாதைய எனக்கு கூறு

அடி வெட்டி வெட்டி வெரகு வெட்டி
வேதனைக்கு நான் குடிச்சா

அடி வெட்டி வெட்டி வெரகு வெட்டி
வேதனைக்கு நான் குடிச்சா

அடி ஊருப் பய பேச்ச கேட்டு
காறித் துப்ப வைக்கிறியே

அடி அருவா எடுத்து வந்தா
நாக்க அறுத்து புடுவேன்

அடி அருவா எடுத்து வந்தா
நான் நாக்க அறுத்து புடுவேன்

கண்டவங்க நின்டவங்க காறி துப்ப
நிப்பவனே

இப்படி கட்டுனாவள விட்டுபுட்டு
வப்பாட்டி கூட திரியுறியே

இப்போ ஒனக்கு ஒரு வேட்டி நிக்கிற
மானத்த காட்டி

ஒனக்கு ஒரு வேட்டி நிக்கிற
மானத்த காட்டி

அடி வேதனைய சொல்லி சொல்லி என்ன
சோதனைக்கு ஆக்காத்தாடி

அடி வேதனைய சொல்லி சொல்லி என்ன
சோதனைக்கு ஆக்காத்தாடி

இப்போ போத கலஞ்சுருச்சு
அடிச்சி நொறுக்கப் போறேன்

ஒன் மண்டய ஓடச்சு பாரு
இப்ப சண்டயா முடிக்கப் போறேன்

ஒன் மண்டய ஓடச்சு பாரு
இப்ப சண்டயா முடிக்கப் போறேன்



Veyil - Aruvaa Mimuminunga

வெயில் - காற்றாகக் காதல் நுழைகிறதே

காற்றாகக் காதல் நுழைகிறதே
குடையாக மனசு விரிகிறதே

நெடுஞ்சாலை பூவில் மழை வருதே
நனையாத தீவில் நளை வருதே

காற்றாகக் காதல் நுழைகிறதே
குடையாக மனசு விரிகிறதே

நெடுஞ்சாலை பூவில் மழை வருதே
நனையாத தீவில் நளை வருதே

இனி இவனுக்கென்ன ஆகும்
இவன் இதயம் உடைந்து போகும்

உடைந்த துண்டு ஒவ்வொன்றும்
இனி அவளைத் தேடி ஓடும்

Veyil - Kaatraka kadhal

வெயில் - ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான்

ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா

ஹே கட்டம் போட்டு ஆடு புலி ஆட்டம் ஒன்னு
டாயம் போட்டு தொடங்குது டா

விட்டு பாரு ஆடு எது புலி எது
வெட்டும் போடு தெரிஞ்சிடும் டா

யாரு தடுத்தாலும் ஏணி போட்டு ஏறு
எதுவா இருந்டாலும் மிதிச்சா நீ சீறு

வெற்றியோடா வாழ்ந்தாதான்
ஊருக்குள்ள பேரு

ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா

வாழ்ந்து காட்ட நீ நெனைச்சா
வழி நூறு தெரியும் டா

வாழை மட்டை நாறு கூட
ஓடி மட்டை ஆகும் டா

மழை பெய்யும் காலத்தில் பனை விசிறி விக்காம
பூ போட்ட குடைய விப்பேன்

மலை நாட்டு ஊருக்குள் தேன் விக்க போகாம
தேநீறு கடைய வைப்போம்

ஹே ஆத்தோட போட்டாலும் அழக்காம நீ போடு
எல்லாமே மீனாக திரும்பி வரும்

அடி மேல் அடி வச அம்மி கல் நகராது
வெடி ஒன்னு போட்டாக்க நகர்ந்து விடும்

ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா

ஆக்கார் அடிக்கோணும் அப்போ தான் பம்பரம்
இன்னொரு ஆள் வேணும் அப்போ தான் பந்தயம்

ஆக்கார் அடிக்கோணும் அப்போ தான் பம்பரம்
இன்னொரு ஆள் வேணும் அப்போ தான் பந்தயம்

குறி பாத்து அடிச்சாக்க குண்டூசி போலதான்
வெறி வேணும் மனசுக்குள்ள

பணம் காச கொடுத்தாக்க உறவெல்லாம் கிடைக்காது
ஆனாலும் அண்ணன் இல்லை

அன்பாலே நீர் விட்டு ஆகாயம் வரை தோடு
ஆவாரம் பூக்காடு குலுங்குதுங்க

பூவானம் ராகெட்டாவாதோ தரைக்கிட்ட
தீ மேல தீ பட்டு கிழம்புதுங்க

ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா

ஹே கட்டம் போட்டு ஆடு புலி ஆட்டம் ஒன்னு
டாயம் போட்டு தொடங்குது டா

விட்டு பாரு ஆடு எது புலி எது
வெட்டும் போஅது தெரிஞ்சிடும் டா

யாரு தடுத்தாலும் ஏணி போட்டு ஏறு
எதுவா இருந்டாலும் மிதிச்சா நீ சீறு
வெற்றியோடா வாழ்ந்தாதான் ஊருக்குள்ள பேரு

ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா



Veyil - Ooran Thotathhilae

Followers