Pages

Search This Blog

Showing posts with label 7G Rainbow Colony. Show all posts
Showing posts with label 7G Rainbow Colony. Show all posts

Friday, December 30, 2016

7G ரெயின்போ காலணி - ஜனவரி மாதம் ஓ பனி விழும் நேரம்

ஜனவரி மாதம் ஓ பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும் மோதும்
பெண்மை எங்கு மாறும்

என் பின்னங்கழுதிலே உன் உதடுகள் மேய
என் உள்ளே உள்ளே உள்ளே
புது மின்சாரங்கள் பாய
ஏன் அச்சம் மடம் நாணம் எல்லாம்
சிக்கிகொண்டு சாக

ஜனவரி மாதம் ஓ பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும் மோதும்
பெண்மை எங்கு மாறும்
மெய்யா பொய்யா என் தேகம் இங்கே
பையா பையா உன் வீரம் எங்கே

கட்டில் கட்டில் அது தேவையில்லை
கண்ணால் தொட்டால் நீ கன்னி இல்லை

காமம் இல்லா காதல் அது காதல் இல்லை
கையை கட்டி நிற்க இது கோயில் இல்லை
வண்டு வரா பூக்கள் அது பூக்கள் இல்லை
ஆதி வாசி ஆணும் பெண்ணும் வெட்கபடவில்லை

மார்கழி மாதம் ஓ மையல் கொள்ளும் நேரம்
மூடு பனிக்குள்ளே நிலவுகள் சுடும்

முதல் முறை இங்கே ஒரு காயம் இனிக்கும்
முகத்திலெ வெட்கம் ஒரு கோலம் கிறுக்கும்
ஒரு விழி உன்னை வேண்டாமென்றால்
மறு விழி உன்னை வேண்டும்
ஒரு கை உன்னை தள்ள பார்த்திடும்
மறு கை உன்னை தேடும்
என் ஈர கூந்தல் உள்ளே
உன் விரல் வந்து தேட
என் காது மடல் எல்லாம்
உன் உஷ்ண முத்தம் கேட்க
என் அச்சம் மடம் நாணம் எல்லாம்
சிக்கிகொண்டு சாக

7G Rainbow Colony - January Madham

Tuesday, October 22, 2013

7G ரெயின்போ காலனி - நினைத்து நினைத்து பார்த்தேன்

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்துபோன மலரின் மௌனமா
தூதுபேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்துபோன வளையல் பேசுமா
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல்கனவு முடிந்திடும் முன்னமே தூக்கம் கலைந்ததே
(நினைத்து நினைத்து)

பேசிப்போன வார்தைகள் எல்லாம்
காலந்தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா
பார்த்துப்போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா
தொடர்ந்துவந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்துபோகும்
திருட்டுப்போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்

7G Rainbow Colony - Ninaithu Ninaithu Parthen

7G ரெயின்போ காலனி - கண்பேசும் வார்த்தைகள்

கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை கடல் கைகூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்தபிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்டபிறகும்
உன்னை உள்மனம் மறப்பதில்லை
ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
(கண்பேசும் வார்த்தைகள்)

காட்டிலே காயும் நிலவு
கண்டுகொள்ள யாரும் இல்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம்
பாதைக்குச் சொந்தமில்லை
மின்னலின் ஒளியை பிடிக்க
மின்மினிப்பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்குச் சொந்தமடி
வேதனைகள் எனக்குச் சொந்தமடி
அலை கடலைக் கடந்தபின்னே
நுரைகள்மட்டும் கரைக்கே சொந்தமடி
(கண்பேசும் வார்த்தைகள்)

உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒருமுறை வாழ்ந்திடத் திண்டாடுது
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
பனித்துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்களெல்லாம்
அட புடவைகட்டி பெண்ணானது
ஏ புயல் அடித்தால் மலை இருக்கும்
மரங்களும் பூக்களும் மறைந்துவிடும்
சிரிப்புவரும் அழுகைவரும்
காதலில் இரண்டுமே கலந்துவரும்
ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
(கண்பேசும் வார்த்தைகள்)

7G Rainbow Colony - Kan Pesum Varthaigal

7G ரெயின்போ காலனி - இது போர்க்களமா

இது போர்க்களமா இல்லை தீக்குளமா
விதி மாற்றிடும் காதல் புரியாதே
தீயின் மனமும் நீரின் குணமும்
எடுத்துச் செய்தவள் நீ நீயா
தெரிந்தப் பக்கம் தேவதையாக
தெரியாப் பக்கம் பேய் பேயா
நேரம் தின்றாய் நினைவைத் தின்றாய்
என்னைத் தின்றாய் பிழையில்லையா

வேலைவெட்டி இல்லாப் பெண்ணெ
வீட்டில் உனக்கு உணவில்லையா
இருவிழி உரசிட ரகசியம் பேசிட
இடிமழை மின்னல் ஆரம்பம்
பாதம் கேசம் நாபிக்கமலம்
பற்றிக்கொண்டதும் பேரின்பம்
தகதகவென எரிவது தீயா
சுடச்சுடவெனத் தொடுவது நீயா
தொடுதொடுவெனச் சொல்லடி மாயா
கொடுகொடுவெனக் கொல்லுகின்றாயா
நண்பர் கூட்டம் எதிரே வந்தால்
தனியாய் விலகி நடக்கின்றேன்
நாளை உன்னைக் காண்பேனென்றே
நீண்ட இரவைப் பொறுக்கின்றேன்
இப்படி இப்படி வாழ்க்கை ஓடிட
இன்னும் என்ன செய்வாயோ

செப்படிவித்தை செய்யும் பெண்ணெ
சீக்கிரம் என்னைக் கொல்வாயோ
எந்தக் கயிறு உந்தன் நினைவை
இறுக்கிப் பிடித்து கட்டுமடி
என்னை எரித்தால் எலும்புக்கூடும்
உன்பேர் சொல்லி அடங்குமடி

படபடவென படர்வதும் நீயா
விடுவிடுவென உதிர்வதும் நீயா
தடதடவென அதிரவைப்பாயா
தனிமையிலே சிதறவைப்பாயா

7G Rainbow Colony - Idhu Porkkalama

7G ரெயின்போ காலனி - கனாக் காணும் காலங்கள்

கனாக் காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ
விழிபோடும் கடிதங்கள்
வழிமாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ

இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகள் இன்னொரு நரகம்
இளமையின் அதிசயம்

இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும்நெருப்பினை விரல்களும் விரும்பும்
கடவுளின் ரகசியம்

உலகில் மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
மெதுவாய் இனி மழைவரும் ஓசை ஆ

கனாக் காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ
விழிபோடும் கடிதங்கள்
வழிமாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ

நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறென்றால் நட்பு என்று பேரில்லை

பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதைத் தேடி போகிறதோ
திரிதூண்டிப் போன விரல்தேடி அலைகிறதோ

தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவிவந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே ஆ

கனாக் காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ


இது என்ன காற்றில் இன்று ஈரப்பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசிக்கொண்டு அந்திவேளை அழைக்கிறதே
அதிகாலை நேரம் எல்லாம் தூங்காமல் விடிகிறதே
விழிமூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே

நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்
படபடப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனித்துளியாய் அது மறைவது ஏன்
நிலநடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மனநடுக்கம் அது மிகக்கொடுமை ஆ

கனாக் காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ
விழிபோடும் கடிதங்கள்
வழிமாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ

7G Rainbow Colony - Kanaa Kaanum Kaalangal

Followers