Pages

Search This Blog

Showing posts with label Aadhavan. Show all posts
Showing posts with label Aadhavan. Show all posts

Friday, October 11, 2013

ஆதவன் - வாராயோ வாராயோ

வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே

வாராயோ வாராயோ மோனாலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே

இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்
உன்கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்

ஓலைலைலைலை காதல் லீலை
செய்செய்செய்செய் காலை மாலை
உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனோடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா

(வாராயோ வாராயோ காதல் கொள்ள)

நீயே நீயே அந்த ஜூலியத்தின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே

நீ நீ நீ மை ஃபேர் லேடி
வாவா என் காதல் ஜோடி
நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ
(வாராயோ வாராயோ மோனாலிஸா)

Aadhavan - Vaarayo Vaarayo

ஆதவன் - ஹசிலி ஃபிசிலி

அன்பே உன்னால் மனம் freezing
அடடா காதல் என்றும் amazing
Excuse me let me tell you something
நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
நீ வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆள
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ

ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி

எனக்கும் உனக்குமாய் இடைவெளி
நீ இரவினில் இரவினில் எனை ரசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா
என் கனா என் கனா என்றுமே நீதானா
(ஹசிலி..)

உரசாமல் அலசாமல் உயிரோடு ஊருது ஆசை
அதுங்காமல் இதுங்காமல் இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை
இரு விழியே ஏவுகணை உனக்கெதுதான் ஈடு இணை
உன் இடையோ ஊசி முனை உடைந்திடுமோ சேரு எனை

நீ என்னை தீண்டினாய் வெப்பமா
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சிக் கொன்றாய்
(ஹசிலி..)

உயிரோடு உயிரோடு என்னை கொல்ல நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே
யாரிதழில் யாரிதழோ வேர்த்துவிடும் வெங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகளோ

நீ ஆடை பாதியாய் பாதியா
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்தப்பேயா வெக்கை தீயா
(ஹசிலி..)

Aadhavan - Hasili Fisili

ஆதவன் - ஏனோ ஏனோ பனித்துளி

ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
கூறாய் நீ கூறாய் உனை பூட்டிக் கொண்டாயே
வாராய் நீ வாராய் இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே
(ஏனோ..)

மௌனம் என்னும் சட்டை வீசி என்னைக் கீறாதே
மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார் பக்கம்
ஏதோ ஒன்று என்னைத் தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ..
(ஏனோ..)

நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா
திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
காற்றைப்போலே தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்
ஹோ ஹோ
(ஏனோ..)

Aadhavan - Yeno Yeno Panithuli

Followers