Pages

Search This Blog

Showing posts with label Raman Thediya Seethai. Show all posts
Showing posts with label Raman Thediya Seethai. Show all posts

Thursday, January 2, 2014

ராமன் தேடிய சீதை - நண்பா நண்பா

நண்பா… நண்பா….
நீ கொஞ்சம் கேளடா….
நாமும் ஜெயிப்போம்
என நம்பி வாழடா….
நண்பா… நண்பா….
நீ கொஞ்சம் கேளடா….
நாமும் ஜெயிப்போம்
என நம்பி வாழடா…
உனை நீ தாழ்வாய் பார்க்காதே
அட நீயே உன்னிடம் தோர்க்காதே
எதுவும் முடியும் என்று நினை
நீ எழுந்து நடக்கும் ஏவுகணை…
நண்பா… நண்பா….
நீ கொஞ்சம் கேளடா….
நாமும் ஜெயிப்போம்
என நம்பி வாழடா….
நண்பா…. நண்பா
உன் நெஞ்சில் எழுதுடா
வானம் நோக்கி
நீ வளரும் விழுதுடா
தயக்கம் என்பது சொந்த சிறை
அதில் தங்கி கிடப்பது உந்தன் குறை
அதிர்ஷ்டம் விற்பது கடவுள் கடை
உன் முயற்சி ஒன்றே அதற்கும் விடை
நண்பா… நண்பா….
நீ கொஞ்சம் கேளடா…..
நாமும் ஜெயிப்போம்
என நம்பி வாழடா…

Raman Thediya Seethai - Nanba Nanba

Saturday, October 5, 2013

ராமன் தேடிய சீதை - மழை நின்ற பின்பும்

மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திரிச்சு
அதற்கும் பெருமை கிட்டுமா ஒகோய்
எனக்குள் இதயம் கணிசிறுசி
அதை உன்னிடும் செர்கட்டுமா
மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்


நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தாய் மௌனால் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையை naan இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை
வானும் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழை துளி பனி துளி கலைந்த பின்னே
அது ஒருவரை தினம் தினம் பிரிந்திடுமோ

மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்


கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைகிரதே
உன் செவியில் விழா வில்லையா உள்ளம் கொஞ்சம் வழிகிறதே
உன்னரகே naan இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இறந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவில் வந்து விடு
நம் திருமண அழைபிதழ் தந்து விடு
 
Raman Thediya Seethai - Malai Nindra Pinbum

ராமன் தேடிய சீதை - என்ன புள்ள செஞ்ச நீ

என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ

பார்கையிலே சொக்க வச்ச
பறக்கத்தான் ரெக்க வச்ச
திக்க வச்ச தெணர வச்ச
திசைய -தான் உணர வச்ச
தேர்க வச்ச வள்ளுவன ஒத்தையிலே நிக்க வச்ச

என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ


கொலை காரன் நானே கொலையாகி போனேன்
அயே மிச்சம் மீதி ஏதும் இல்லை எல்லாம் தொலைச்சேனே
தேதி போல நாளும் தேஞ்சு போகும் தேகம்
நான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம
தண்ணீரில் உண்டாகும் மீன்கள் ஏன் தண்ணீரில் வேகின்ற மாயம்
உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு ஏன் உன்னாலே என் இந்த காயம்
என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஓஹோ


ஒன்ன பாத்தா வேலை உடம்பும் செங்கல் சூலை
அயே செம்பரப்பு அருவியா நீயே வந்தாயே
பாலை மண்ணு பிசைஞ்சே பான போல வரஞ்சேன்
அயே என்ன நீயே என்னிடமே மாதி தந்தையே
இப்போது உன் பேரை சொல்லி என் உள் நாக்கும் தாண்டோர போடும்
முள் பாக்கில் மீனாக தானே அப்போது உன் பிம்பம் ஆடும்
en வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஓஹோ

என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ .
 
Raman Thediya Seethai - Enna Pulla Senja Nee

ராமன் தேடிய சீதை - இப்பவே இப்பவே பாக்கணும்

ஆ:
இப்பவே இப்பவே பாக்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
கைவளையல் ஓசைக் கேட்ட அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள்கைதி ஆகி விட்டேன் அப்பவே அப்பவே

(இப்பவே இப்பவே)

ஆ:
வெள்ளச்சேதம் வந்தால் கூட தப்பிக்க் கொள்ளலாம்
உள்ளச்சேதம் வந்துவிட்டால் என்ன செய்வது

பெ:
முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும்தான்
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டால் யுத்தம் மட்டும்தான்

ஆ:
சொல்லி தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட

பெ:
மின்னல் கண்ட தாழைப் போல உன்னால் நானும் பூத்தாட

ஆ:
உன்னைக் கண்டேன் என்னை காணோம்
என்னைக் காணா உன்னை நானும்

(இப்பவே இப்பவே)

ஆ:
எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்லத் திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்

பெ:
நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்

ஆ:
உன்னை காண நானும் வந்தால் சாலையெல்லாம் பூஞ்சோலை

பெ:
உன்னை நீங்கி போகும் நேரம் சோலைக் கூட தார்ப்பாலை

ஆ:
மண்ணுக்குள்ளே வேரைப் போல நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்
 
Raman Thediya Seethai - Ippave Ippave Paakkanum

Followers