ஆ:
இப்பவே இப்பவே பாக்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
கைவளையல் ஓசைக் கேட்ட அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள்கைதி ஆகி விட்டேன் அப்பவே அப்பவே
(இப்பவே இப்பவே)
ஆ:
வெள்ளச்சேதம் வந்தால் கூட தப்பிக்க் கொள்ளலாம்
உள்ளச்சேதம் வந்துவிட்டால் என்ன செய்வது
பெ:
முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும்தான்
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டால் யுத்தம் மட்டும்தான்
ஆ:
சொல்லி தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட
பெ:
மின்னல் கண்ட தாழைப் போல உன்னால் நானும் பூத்தாட
ஆ:
உன்னைக் கண்டேன் என்னை காணோம்
என்னைக் காணா உன்னை நானும்
(இப்பவே இப்பவே)
ஆ:
எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்லத் திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்
பெ:
நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்
ஆ:
உன்னை காண நானும் வந்தால் சாலையெல்லாம் பூஞ்சோலை
பெ:
உன்னை நீங்கி போகும் நேரம் சோலைக் கூட தார்ப்பாலை
மண்ணுக்குள்ளே வேரைப் போல நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்