Pages

Search This Blog

Showing posts with label Gopura Vasalile. Show all posts
Showing posts with label Gopura Vasalile. Show all posts

Friday, December 20, 2013

கோபுர வாசலிலே - கேளடி என் பாவையே

கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
***
தன்னைத்தானே சுற்றி வாழும் பூமி போலே...
என்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே...
நித்தம் பூமி சுற்றி ஓடும் சூரியன் போல்...
பாவை உன்னை நானும் சுற்றி வந்ததே..
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா...
உன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மா...ஹஹ்ஹா...
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா...
உன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மா...
என் சொந்தமே...என் சொர்கமே...இணைந்திடம்மா
கனிந்திடு...கலந்திடு...இன்பம் பொங்கும் என்றுமே...
கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
லல்லல்லல்லல்லல வேண்டும்...
ரரரரிரரிரிரர வேண்டும்...
கேளடி என் பாவையே...ஹா
ஆடவன் உன் தேவையே...
***
கானம் பாடும் வீணை நாளும் வாடலாமோ...
மீட்டும் வேளை ராகம் இன்றி போகுமோ...
வானம் பார்த்த பூமி போல ஆகலாமோ...
தென்றல் தேடும் பூவைப் போன்ற பூவையே...
சேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடுதே...
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே...
சேவல் இன்றி பெட்டை ஒன்று வீனில் வாடுதே...
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே...
நினைத்தது நடந்தது தொடர்ந்ததம்மா...
சிலிர்த்தது... சிலிர்த்தது ...ஒ இன்னும் இங்கு வெட்கமா
கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
கேளடி என் பாவையே...ஹஹ்ஹா...
ஆடவன் உன் தேவையே...
ஹூ..ஹு..ஹூ....ஹூ..ஹு..ஹூ (இசை)



Gopura Vasalile - Keladi En Paavayae

கோபுர வாசலிலே - நாதம் எழுந்ததடி கண்ணம்மா

பெண் : நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி
ஆ..ஆ..ஆ..ஆ..

(இசை) சரணம் - 1
பெண்குழு : ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..
த நி ச் த நி ச் த நி ச் த நி
த நி ச் த நி ச் த நி ச் த நி
த நி ச் நி ரீ ச் நி த ப த ம

ஆண் : தாயென்ற சொல்லில் இன்பம் வந்து தாவ
தாயென்ற சொல்லில் இன்பம் வந்து தாவ
தை என்ற சந்தம் சொந்தங்கள் கொண்டாட
தை என்ற சந்தம் சொந்தங்கள் கொண்டாட

பெண் : மோகன பாடம் கீர்த்தனம் நூறு
மூழ்கிடும்போது பேதங்கள் ஏது

ஆண் : ஊடலில் தானாட பேரின்ப வெள்ளம்
ஆடலில் நாம் காண தானாகத் துள்ளும்
ச், நி த நி ச் ச் ச நி ச் ச நி த ம நி த ம
ம நி த ம ம நி த ம நி த ம க ரி ச
த நி ச த நி ச த நி ச ரி க ச ரி க
ச ரி க ம த ம த நி ரீ ச்
நி நி த த ம ம க க ரி
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி நாதம் எழுந்ததடி

பெண்குழு : ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..
(இசை) சரணம் - 2

பெண் : அழகு கண் கொண்டு உலகை நீ கண்டு
தினம் அனுதினம் கவி பாடிட வா

ஆண் : ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ
இனிய கற்கண்டு இளமை கண் கொண்டு
சுகமொடு சுகமென தேடிட வா

பெண் : ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ

ஆண் : காற்று மான் கூறும் கருணையின் கவிதை

பெண் : ஏற்றுக் கொண்டாடு கலைமகள் உறவை

ஆண் : காற்று மான் கூறும் கருணையின் கவிதை

பெண் : ஏற்றுக் கொண்டாடு கலைமகள் உறவை

ஆண் : கன்னி மயில் தனிமையில் பரதம்தான் பயில
கண்ணன் விழி உன்னைத் தொடும் சுகமடி

பெண்குழு : கனவிலே நினைவிலே மலர்ந்தது
மகிழ்ந்ததே இளம் மனம் உறவினில்
கனவிலே நினைவிலே இரு மனம் உயிரிலே
மலர்ந்தது மகிழ்ந்ததே
கலந்தது கரைந்ததே
விழிகளில் ஆசையும் விலகிடவே
உடலும் உயிரும் உறவில் உருகும் தினம் தினம்
மனதில் இதமும் பதமும்
பெருகும் அனுதினம்
உருகி உருகி பருகி பருகி கனிந்திட

பெண் : நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி ஆ..ஆ..ஆ



Gopura Vasalile - Naatham Ezhundhathadi

கோபுர வாசலிலே - காதல் கவிதைகள் படித்திடும்

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட

இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்

கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ நதியோ கலையழகோ
மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி
இது தொடரும் வளரும் மலரும்
இனி கனவும் நினைவும் உனையே

தொடர்ந்திடும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள் அது புதுமை
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவோ
காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய்

தினம் தினம் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்



Gopura Vasalile - Kadhal Kavithaigal Padithidum Neram

கோபுர வாசலிலே - தாலாட்டும் பூங்காற்று

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

நள்ளிரவில் நான் கண்விழித்தேன்
உன் நினைவில் நான் மெய்சிலிர்த்தேன்
பஞ்சணையில் நீ முள்விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
பார்க்கும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலையில் நான் கேட்கும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா என்னாளும்
ஆசையில் நான் தொழும் ஆலயம் நீயல்லவா

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா



Gopura Vasalile - Thalattum Pongkaatru

கோபுர வாசலிலே - பிரியசகி ஓ பிரியசகி

பிரியசகி ஓ பிரியசகி பிரியசகி என் பிரியசகி
வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை ஏனடி
இளைய தேகம் ஓஓஓ இணைய வேண்டும்
இனிய ராகம் ஓஓஓ புனைய வேண்டும்
(பிரியசகி)

காதலன் வீரமிகு ஆண்மகன் ஆண்மகன்
காவலை மீறிவரும் நாயகன் நாயகன்
பார்வை ஒன்று வீசு கண்மணி பூமி தன்னைக் கையில் ஏந்துவேன்
வார்த்தை ஒன்று பேசு கண்மணி மேகம் போல வானில் நீந்துவேன்
வானமும் வையமும் வாழ்த்துமே ஓ

பிரியசகி நான் பிரியசகி பிரியசகி உன் பிரியசகி
வருவாய் வாசல் தேடி வருந்தும் பூங்கொடி
தருவாய் பாடல் கோடி தவிக்கும் பைங்கிளி
இளைய தேகம் ஓஓஓ இணைய வேண்டும்
இனிய ராகம் ஓஓஓ புனைய வேண்டும்
கூண்டிலே காதல் குயில் பாடுது பாடுது
கொண்டுபோ கூவி உனைத் தேடுது தேடுது

வெண்ணிலாவைச் சிறையில் வைப்பதா வானம் என்ன வெளியில் நிற்பதா
வீரமான நெஞ்சமில்லையா நெஞ்சில் இந்த வஞ்சியில்லையா
நீ வரும் பாதையைப் பார்க்கிறேன் ஓ
(பிரியசகி)



Gopura Vasalile - Priyasagi Oh Priyasagi

கோபுர வாசலிலே - தேவதை போல் ஒரு பெண்ணிங்கு

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி
தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும்
சுபவேளை தான்
(தேவதை போல்..)

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட
மூன்று முடி போல ஆண்டாள் துணைக்கூட
வேதங்களின் பாரயணம் பூப்பந்தளில் ஆலிங்கனம்
(தேவதை போல்..)

சீதாவை பிரித்தது மான் தான்
புள்ளி மான் தான்
தோதாக சேர்ந்தது மான் தான்
அனுமான் தான்
நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்
கல்யாணமே வைபோகம் தான்
பூந்தென்றலே ஊர்கோலம் தான்
(தேவதை போல்..)



Gopura Vasalile - Dhevadhai  Pol Oru Penn

Followers