Pages

Search This Blog

Showing posts with label Neerparavai. Show all posts
Showing posts with label Neerparavai. Show all posts

Wednesday, December 12, 2018

நீர்ப்பறவை - தேவன் மகளே தேவன் மகளே சிலுவை காடு

தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி...
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி


என்றோ அடி என்றோ
உன் உயிரில் உரிமை தந்தாய் இன்றே
அடி இன்றே உடல் உரிமை தந்தாய்
நுனியில் விரல் நுனியில் ஒரு நுதன தீண்டல் செய்தாய்
அடியில் உயிர் அடியில் ஓர் அற்புதம் செய்தாய்
உன் ஆசை பாசை எல்லாம் பூட்டி கொண்டே
நான் முத்த சாவி போட்டு திறப்பேன்

தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

கண்ணீர் என் கண்ணீர்
என் கன்னம் காயும் முன்னே
பன்னீர் உன் பன்னீர் உயிர் பரவ கண்டேன்
கோடியில் ஒரு கோடியில்
இரு இளநீர் காய்க்கும் பெண்ணே
மடியில் உன் மடியில்
சிறு மரணம் கொண்டேன்
என் கர்தரங்கள் படைத்த
வேற்ற பாண்டம் நான்
அதில் உன்னை ஊற்றி
என்னை நிறத்தாய்
தேவன் மகளே நன்றி நன்றி

என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி



Neerparavai - Devan Magalea

நீர்ப்பறவை - மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை

மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்
கிச்சு கிச்சு பண்ணும் கிறிஸ்தவ பெண்ணே
பச்சை முத்தம் தர மனம் இல்லையா
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமறை வரி நினைவில்லையா

அடடா முத்தம் பறிக்கிறவழி
இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி
சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்

பெண் கடல்களில் அலைகள் இல்லை
அது போல் மெளனம் காக்கிறாய்
ஆண் கடல்களில் அலைகள் உண்டு
அது போல் உன்னை தீண்டினேன்

அலை என்னும் கரம் நீட்டி நீட்டி
அடி வருடியே போகிறாய்
வெட்கம் வந்து விழி மூடும் நேரம்
முத்தம் கொள்ளையிட பார்க்கிறாய்

அன்பை தந்து அன்பை தந்து
ஆளாக்கினாய் அப்போது
அள்ளிதந்து அள்ளிதந்து
ஆணாக்குதல் எப்போது

அடடா முத்தம் பறிக்கிறவழி
இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி
சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்

விழி நீயும் சொல்லி வாழும் பெண்ணால்
வெட்கம் என்னை விட்டு போகுமா
அக்கம் பக்கம் இங்கு ஆட்கள் உண்டு
அஞ்சுகின்ற மனம் கொஞ்சுமா

கடற்கரைகளில் சோலை இல்லை
பறவைக்கு என்ன பஞ்சமா
தனிமைக்கு இங்கு வாய்ப்பு இல்லை
தவிக்கின்ற மனம் அஞ்சுமா

ஒ... பெண்கள் மட்டும் ஆணையிட்டால்
பேசும் கடல் பேசாது
ஆண்கள் கொண்ட ஆசை மட்டும்
ஆணையிட்டால் நிற்காது

அடடா என்னை தவிர்க்கிற வழி
இதுதான் குறுக்குவழி
எதுதான் உன்னை பிடிக்கிற வழி
சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தாய்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தாய்

கிச்சு கிச்சு பண்ணும் கிறிஸ்தவ பெண்ணே
பச்சை முத்தம் தர மனம் வரவில்லையா
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமறை வரி நினைவில்லையா

அடடா முத்தம் பறிக்கிறவழி
இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி
சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்



Neerparavai - Meenuku Siru Meenuku

நீர்ப்பறவை - யார் வீட்டு மகனோ மகனோ

யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை

யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை

நீ வந்து நிறையும்போது
வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும்போது
நீ இங்கு ஒருமை இல்லை

மகனே நீயும்
அன்பால் வளர்வாய்
கடலும் அன்னை
கரைதான் தந்தை

யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை

நிலங்கள் நீளும் வரையில்
உயிர்கள் வாழும் வரையில்
யாருமே அனாதை இல்லையே
யாதும் இங்கே ஊரே ஆகுமே

புலங்கள் மாறிய போதும்
புலன்கள் மாறுவதில்லை
ஊர்கள் தோறும் வானம் ஒன்றுதான்
உயிர்கள் வாழ மானம் ஒன்றுதான்

மழைச் சொட்டு மண்ணில் வீழ்ந்தால்
மறுக்கின்ற பூமியும் இல்லை
மனிதர் இருவர் உள்ள வரைக்கும்
அகதி என்று யாரும் இல்லை

கால தேசம் எல்லாம் மாறலாம்
காதல் பாசம் எல்லாம் ஒன்றுதான்

யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை

நீ வந்து இணையும்போது
வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும்போது
நீ இங்கு ஒருமை இல்லை

மகனே நீயும்
அன்பால் வளர்வாய்
கடலும் அன்னை
கரைதான் தந்தை

யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை...



Neerparavai - Yaar Veetu Magano

நீர்ப்பறவை - ரத்த கண்ணீர் முடியவில்லை என் ராத்திரி

ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை
ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

காயம் செய்த ஊருக்கு
என் நியாயம் மட்டும் தெரியவில்லை
அறிந்த நான் செய்த பிழை
ஆண்டவர் தான் பொறுப்பாரே
அறியாமல் செய்த பிழை
அன்பே நீ பொறுப்பாயா
மன்னித்தே என்னை கொள்ள மாட்டய

ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

ஏன் இந்த கதி ஏன் இந்த விதி
நொந்தேன் உயிர் நொந்தேன்
நான் கண்ட பழி நீ கொண்டு விட ஆவி வேந்தன்
என் பாவங்களில் நான் வெட்கமுற வில்லை அடி இல்லை
என் பாவங்களில் நீ பங்கு பெற நியாயம் இல்லை
பாதை தான் காணாமல் பட்டம் தான் விடுகின்றேன்
போதை தான் இல்லாமல் இன்றே நான் அழுகின்றேன்
பாவத்தின் பள்ளம் விட்டு எழுகின்றேன்

ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

ஊர் பேசியதே யார் ஏசியதையும் நெஞ்சை சுட வில்லை
நீ துன்பமுற நான் கண்டுவர ஜீவன் இல்லை
என் தண்டனையில் நீ வாடுவது குற்றம் என் குற்றம்
என் பாவநிலை ஏழு ஜென்மம் வரை சுற்றும் சுற்றும்
போதைக்குள் பிறந்தாலும் என் காதல் பொய் இல்லை
சேற்றோடு பிறந்தாலும் தாமரையில் அழுக்கில்லை
வா பெண்ணே உன்னை விட்டால் வாழ்வில்லை

ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

காயம் செய்த ஊருக்கு என் நியாயம் மட்டும் தெரியவில்லை
அறிந்த நான் செய்த பிழை ஆண்டவர் தான் பொறுப்பாரே
அறியாமல் செய்த பிழை அன்பே நீ பொறுப்பாயா
மன்னித்தே என்னை கொள்ள மாட்டயா



Neerparavai - Raththa Kanneer

Tuesday, July 3, 2018

நீர்ப்பறவை - பற பற பற பறவை ஒன்று

பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே
என் தேவன் போன திசையிலே ஜீவன் சேர்த்து அனுப்பினேன்
என் ஜீவன் வந்து சேருமா தேகம் மீண்டும் வாழுமா
இதோ எந்தன் கண்ணீர் அந்த அலை சேரும்
அலை மறுபடி உன்னிடம் வருமா

பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே

தண்ணீரில் வலையும் நிற்கும் தண்ணீரா வலையில் நிற்கும்
எந்தேவன் எப்போதும் திரிகிறான்
காற்றுக்கு தமிழும் தெரியும் கண்ணாளன் திசையும் தெரியும்
கட்டாயம் துன்பம் சொல்லும் மறக்கிறான்
உனது வேர்வை என் மார்புக்குள்
பிசுக்கு பிசுக்கென்று கிடக்குதே
ஈர வேர்வைகள் தீரவும் எனது உயிர்பசி காய்வதா
வானும் மண்ணும் கூடும் போது
நானும் நீயும் கூடாமல் வாழ்வது கொடுமை

பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே

ஊரெங்கும் மழையும் இல்லை வேரெங்கும் புயலும் இல்லை
என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே
கண்ணாளன் நிலைமை என்ன கடலோடு பார்த்து சொல்ல
கொக்குக்கும் நாரைக்கும் கண் அலையுதே
நீரின் மகன் எந்தன் காதலன்
நீரின் கருணையில் வாழுவான்
இன்று நாளைக்குள் மீளுவான்
எனது பெண்மையை ஆளுவான்
என்னை மீண்டும் தீண்டும் போது
காதல் தேவன் இருமுறை முதலிரவுகள் பெறுவான்

பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே

என் தேவன் போன திசையிலே ஜீவன் சேர்த்து அனுப்பினேன்
என் ஜீவன் வந்து சேருமா தெய்வம் மீண்டும் வாழுமா
இதோ எந்தன் கண்ணீர் அந்த அலை சேரும்
அலை மறுபடி உன்னிடம் வருமா

பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே



Neerparavai - Para Para Para Paravai

Followers