Pages

Search This Blog

Showing posts with label Dharma Durai (2016). Show all posts
Showing posts with label Dharma Durai (2016). Show all posts

Tuesday, January 22, 2019

தர்மதுரை (2016) - போய் வாடா என் பொலி காட்டு ராசா

போய் வாடா....... என் பொலி காட்டு ராசா     
போராடு..... சிறு மலையெல்லாம் தூசா.....     
நல்லது செய்ய நெனச்சா நல்ல நேரம் எதுக்கு     
நம்பிக்கை உள்ள மனசுக்கு நாலு தெசையும் கிழக்கு     
     
போய் வாடா....... என் பொலி காட்டு ராசா     
போராடு..... சிறு மலையெல்லாம் தூசா.....     
வைகை நதி நடந்தா வயக்காடு முந்தி விரிக்கும்     
வல்லவனே நீ நடந்தா      
புல்லுவெளி நெல்லு விளையும்     
எட்டுவச்சுப் போடா இவனே நெற்றிக்கண்      
தொறடா சிவனே     
வெற்றிதாண்டா மகனே      (போய்)



Dharma Durai (2016) - Poi Vaada

தர்மதுரை (2016) - நான் காற்றிலே அலைகிற காகிதம்

ஹே……… ஹே……… ஹே………     
நான் காற்றிலே அலைகிற காகிதம்     
நான் கடவுளின் கைகளில் காவியம்     
என்றும் புன்னகை ஒன்றுதான் என்பதை     
வாழ்வில் பூக்களோ முட்களோ     
சம்மதம் என்றுமே சம்மதம்      (நான்)
     
என் உடலுக்கு ஜனனம் அங்கே     
என் அறிவுக்கு ஜனனம் இங்கே     
இங்கு பட்டங்கள் அல்ல வாழ்க்கை வாங்க     
வந்தேனே மூடி மறைத்த தேகம்     
திறந்துப் பார்ப்போம் நேரிலே     
மூடி மறைக்கும் நெஞ்சை திறந்துப்பார்க்க தெரியலே  (நான்)
     
இங்கு முதல் முதல் காதலும் உண்டு     
சில மூன்றாம் காதலும் உண்டு     
இங்கு வாங்கிய காயம் வாழ்வின் ஞாயம் ஆகாதோ     
கடைசி ஆசை என்ன என்று கேட்டால் சொல்லுவேன் ஓ…     
முதுமை வயதில் மீண்டும் இந்த பாதை சேருவேன்     
நான் மாணவன் மருத்துவ மாணவன்      
என் தொண்டுதான் தொழிலென ஆனவன்     
வாழும் உடல்களை கோயிலாய் பார்ப்பவன்      
அந்த கடவுளின் தவறுகள் தீர்ப்பவன் தீர்ப்பவன் காப்பவன்     
நான் மாணவன் மருத்துவ மாணவன் ஏய்……



Dharma Durai (2016) - Naan Kaatrilae

தர்மதுரை (2016) - மக்க கலங்குதப்பா மக்க கலங்குதப்பா

இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு     
தலைவா உன் கால் அடியில்     
நம்பிக்கையின் ஒளி விளக்கு     
நம்பிக்கையின் ஒளி விளக்கு     
     
ஏய் சூ சூ நிறுத்து நிறுத்து     
என்ன சினிமா பாட்டு பாடிக்கிட்டிருக்க     
ஏன் சொந்தப்பாட்டெல்லாம் பாடமாட்டியா     
     
வவுத்துப்பாட்டுக்கு பாடிக்கிட்ருக்கேன்     
ஏன் வம்பு பன்ற     
சொந்தப்பாட்ட எவன் கேட்குறான்     
     
எதுக்கு அந்த கழுதையர்கள     
ஓரமா உட்காரவச்சிட்டீங்க ஓய்     
     
தப்பாட்டத்த இப்பக்கூப்பிடாதப்பா     
     
என்னது தப்பாட்டமா     
போயாங்கய்யாங்     
இதான்யா இந்த நாட்டோட சரியான ஆட்டமே     
ஏய் சரி இங்கவா நீ அடி உம்…     
     
மக்க கலங்குதப்பா மக்க கலங்குதப்பா     
மடிப்புடிச்சி இழுக்குதப்பா     
நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்கிதப்பா     
என்னப் பெத்த மக ராசா…     
     
ஏ…… ய் ஏய் எம்புட்டு தூறம்யா போவ     
ஏன்யா சவ்வா இழுக்குற     
சியான் நாலு பொண்டாட்டி கட்டி      
ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காப்ல     
சந்தோசமா பாடுயா நிம்மதியா போவாப்ள ம்…     
     
மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா     
மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா     
நாடு கலங்குதப்பா நாடு கலங்குதப்பா      
நாட்டு மக்க தவிக்கிதப்பா     
என்ன பெத்த மகராசா நீ என்ன பெத்த மகராசா     
நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா     
நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா     
     
ரோசாப்பூ மாலப்போட்டு ரோசாப்பூ மாலப்போட்டு      
ராசா நீ அமர்ந்திருக்க ராசா நீ அமர்ந்திருக்க     
அத்தருமை மணக்குதப்பா அத்தருமை மணக்குதப்பா     
பன்னிரு வாடையப்பா அங்கம் ராசா…     
ஏ அங்கம் மணக்கும் ராசா     
இந்த ஊரக்காக்கும் ராசா     
பன்னிரு வாடையப்பா அங்கம் ராசா…     
ஏ அங்கம் மணக்கும் ராசா     
இந்த ஊரக்காக்கும் ராசா     
     
பார்த்தாலே பச்சமுகம்…… ம்……     
பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம்      
பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம்     
பச்ச முகத்தழகா என் ராசா      
பச்ச முகத்தழகா என் ராசா     
நீங்க பரலோகம் எங்கள விட்டு பரலோகம்     
ராசா பரலோகம் போனியப்பா என் ராசா     
நீங்க பரலோகம் போனீங்களே என் ராசா      (மக்க)



Dharma Durai (2016) - Makka Kalanguthappa

தர்மதுரை (2016) - எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று

எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று     
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு     
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காரல் உண்டு     
சிறு கரப்பான் பூச்சி வாழ்வதுண்டு     
அட ரோஜாப்பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும்     
என் ராஜாபையன் நீ அழுதால் அதில் யானம் மிஞ்சும்     
உன் சோகம் ஒரு மேகம்     
நான் சொன்னால் அது போதும்     
உன் கண்ணில் ஏந்தும் கண்ணம் தான் ஆகும்      (எந்த)
     
எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமேது     
எப்போதுமே பகலாய் போனால்     
வெப்பம் தாங்காதே     
மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் கதைதான்      
உன் உயிரை சலவை செய்ய     
ஒரு காதல் நதி உண்டு     
உன் சுவாசப்பையை மாற்று     
அதில் சுத்தக்காற்றை ஏற்று     
நீ இன்னோர் உயிரில்      
இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு…… ஓ…     
     
ஹோ…… ஹோ…… ஹோ……     
     
சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது     
சல்லலையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது     
தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய்     
நம் உறவின் பெயரேத்தெரியாதம்மா     
உயிரைத் தருகின்றாய்      
உன் உச்சந்தலையை தீண்ட     
ஓர் உரிமை உண்டா பெண்ணே     
உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே…     
ஓ……… ஓ………… ஹோ………      (எந்த)



Dharma Durai (2016) - Endha Pakkam

தர்மதுரை (2016) - ஆண்டிப்பட்டி கனவாய் காத்து ஆள் தூக்குதே

ஆண்டிப்பட்டி கனவாய் காத்து ஆள் தூக்குதே     
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே     
அடி முக்காப்பொம்பளையே     
என்ன முழுசா நம்பளையே     
நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும்     
அச்சம் தீரலையே     
     
உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரிப் புடிப்பா     
இந்தக் கிறுக்கிய ஏழ சிறுக்கிய எதுக்காகப் புடிச்ச     
     
ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா     
வெறுத்து ஓடிப்போவா     
இவ வெள்ளரிக்கா வித்துக்கூட     
வீடு காத்து வாழ்வா     
     
ஹோ… தாலிகட்ட பன்னிக்கிட்டோம் நிச்சயத்த     
     
தள்ளி நில்லு மீறாதய்யா சத்தியத்த     
     
கொஞ்சம் தொட்டா குண்டர் சட்டம் பாயுமா     
     
நண்டை தீண்டும் நரி நான் ஓயுமா     
     
நீ மஞ்சக்கரு வேலம் பூவு     
அதில் மாசு தூசு ஒன்னும் சேரல     
ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன்     
உன் மாராப்பு நான் தான் புள்ள     
     
ம்…… மெய்யாகுமா வேப்ப எண்ணெய் நெய்யாகுமா     
     
பெண் மீணுக்கு தண்ணி மேல சந்தேகமா     
     
ஏழப்பொண்ணும் ஏமாந்து தான் போகுமா     
     
என்னை எழுதித்தாறேன் போதுமா     
     
ஊரில் உள்ள ஆளை எல்லாம் நான்     
அண்ணன் அண்ணன்னு சொல்லிக்கூப்பிட்டேன்     
ஏ ஒன்ன ஒன்ன மட்டும் தானே இப்போ      
மாமான்னு நான் கூப்பிட்டேன்



Dharma Durai (2016) - Andipatti

Followers