Pages

Search This Blog

Showing posts with label Thooral Ninnu Pochchu. Show all posts
Showing posts with label Thooral Ninnu Pochchu. Show all posts

Monday, October 29, 2018

தூறல் நின்னு போச்சு - ஏரிக்கரை பூங்காற்றே

ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென்கிழக்கோ….
தென்கிழக்கு வாசமல்லி….
என்னைத் தேடி வர தூது சொல்லு….
(ஏரிக்கரை பூங்காற்றே)

பாதமலர் நோகுமுன்னு நடக்கும்
பாதைவழி பூவிரிச்சேன்… மயிலே
பாதமலர் நோகுமுன்னு நடக்கும்
பாதைவழி பூவிரிச்சேன்… மயிலே
ஓடம் போல் ஆடுதே மனசு
கூடித் தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த  பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது
(ஏரிக்கரை பூங்காற்றே)

ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரனும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும்வரை ரோசாவே காத்திரு
(ஏரிக்கரை பூங்காற்றே)



Thooral Ninnu Pochchu - Yerikkarai Poonkatre





தூறல் நின்னு போச்சு - பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

மாலை அந்திமாலை
இந்த வேளை மோகமே
மாலை அந்திமாலை
இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே
நாணமே பெண்ணின் சீதனமே
மேகமழை நீராட
தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது

பூவை எந்தன் சேவை
உந்தன் தேவை அல்லவா
பூவை எந்தன் சேவை
உந்தன் தேவை அல்லவா
மன்மதன் கோயில் தோரணமே
மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம்
பாடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்



Thooral Ninnu Pochchu - Bhoopalam Isaikkum

தூறல் நின்னு போச்சு - தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே

பெண்: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோழில் துஞ்சியதோ...

[தங்கச் சங்கிலி...]

மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி

[தங்கச் சங்கிலி...]

ஆண்: காவல் நூறு மீறி
காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூ வேலைகள்
உன் மேனியில் பூஞ்சோலைகள்

பெண்: அந்திப் பூ விரியும்
அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கணவு கனியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்

ஆண்: [தங்கச் சங்கிலி...]

பெண்: ஆடும் பொம்மை மீது
ஜாடை சொன்ன மாது

ஆண்: லாலா லாலலாலா லால லால லாலா

பெண்: கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளின் நீராடினாள்

ஆண்: ராராரரா ராராரரா ராராரரா ராராரரா

அன்பே ஆடை கொடு
எனை அனுதினம் அள்ளி சூடிவிடு

பெண்: இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு

ஆண்: [தங்கச் சங்கிலி...]

பெண்: [மலர்மாலை...]

ஆண் & பெண்: [தங்கச் சங்கிலி...]



Thooral Ninnu Pochchu -Thanga Sangili Minnum Paikili

Followers