Pages

Search This Blog

Showing posts with label Miruthan. Show all posts
Showing posts with label Miruthan. Show all posts

Wednesday, November 16, 2016

மிருதன் - முன்னாள் காதலி

ஹே முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி

ஹே முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி 
வலி இருந்தும் சோகம் இல்லை 
உன் மேல் துளி கோபம் இல்லை 
கண்ணே நீ இல்லாமல் என் எதிர்காலம் தூரம் இல்லை 

முன்னாள் காதலி முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உண்மை கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன் 

ஹே முன்னாள் காதலி ....

தன்னந்தனிமையில் ஒரு காதலை வளர்த்தவன் 
யாரும் அறியும் முன் அதை உயிருடன் புதைக்கிறேன்
என்னுள் நுழைந்திடும் போது அதிர்வின்றியே நுழைந்தாயடி 
வெளிக்கிளம்பிடும் போதோ தொடர் பூகம்பம் விளைத்தாயடி 
யாரோடு வாழ்ந்தாலும் நீ இன்பம் காணுவாய்
என்றேனும் ஓர் நாளில் என் காதல் காணுவாய் வருந்துவாய் 

முன்னாள் காதலி முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உண்மை கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன் 

ஹே முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி 
வலி இருந்தும் சோகம் இல்லை 
உன் மேல் துளி கோபம் இல்லை 
கண்ணே நீ இல்லாமல் என் எதிர்காலம் தூரம் இல்லை

Miruthan - Munnal Kadhali

மிருதன் - வெறி வெறி வெறி

வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
 
குருதியில் பரவிடும் 
வெறி வெறி வெறி வெறி
கிருமி என்றழித்திடும் 
வெறி வெறி வெறி வெறி

இரும்பினை இறுக்கிடும் 
வெறி வெறி வெறி வெறி
நெருப்பினை எரித்திடும்
வெறி வெறி வெறி வெறி

விழி வலி வெறி வெறி 
விரல் வலி வெறி வெறி
முடி முதல் 
அடி வரை
இடியென வெடித்திடும்

வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி

நகங்களில் தெரிந்திடும்
வெறி வெறி வெறி வெறி
நரகத்தை எழுப்பிடும் 
வெறி வெறி வெறி வெறி

நசுக்கிட துடித்திடும் 
வெறி வெறி வெறி வெறி
நரங்களை முறித்திடும் 
வெறி வெறி வெறி வெறி

துடித்திடும் வெறி வெறி
உடைத்திடும் வெறி வெறி
திசுக்களின் திரிகளில்
உடும்பென பிடித்திடும்

வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி

இருட்டினை இருளினில்
புதைத்திட
வெளிச்சத்தை ஒளியினில்
அழித்திட.

உயிருறும் முனையையும் 
மரணத்தின் முனையையும்
இணைத்திட வெறி வெறி

சுழளுரும் புவியினை
நொறுக்கிட
விழுந்திடும் மழையினை
நறுக்கிட

மனிதரை அளித்திட
படைகளை திரட்டிட
பெருகுது வெறி வெறி

குருதியில் பரவிடும் 
வெறி வெறி வெறி வெறி
கிருமி என்றழித்திடும்
வெறி வெறி வெறி வெறி

இரும்பினை இறுக்கிடும் 
வெறி வெறி வெறி வெறி
நெருப்பினை எரித்திடும்
வெறி வெறி வெறி வெறி

விழி வலி வெறி வெறி 
விரல் வலி வெறி வெறி
முடி முதல் 
அடி வரை
இடியென வெடித்திடும்

வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி

Miruthan - Veri Veri Veri

Followers