Pages

Search This Blog

Showing posts with label Sivappathigaram. Show all posts
Showing posts with label Sivappathigaram. Show all posts

Monday, January 2, 2017

சிவப்பதிகாரம் - மன்னார்குடி கலகலக்க மதுரஜில்லா

ஆண்
ஆடாதவண்டியில அதிராத கொண்டையில .......
பூவான பூ முடிஞ்சு அமுசவள்ளி வந்திருக்கா
ஊரு ஆம்பளைங்க பத்திரம்யா

பெண்
மன்னார்குடி கலகலக்க மதுரஜில்லா மணமணக்க
ஆண்டிபட்டி சிலுசிலுக்க அரசம்பட்டி கமகமக்க

ஆண்
ஏ தேனியெல்லாம் தகதகக்க வீரபாண்டி கிறுகிறுக்க
சின்னமனுர் சிறுசிறுக்க கம்பமெல்லாம் கதகதக்க

பெண்
போடியுந்தான் பொசபொசக்க பெரியகுளம் கிசுகிசுக்க

ஆண்
ஏ வத்தல் குண்டு வெட வெடக்க வாடிப்பட்டி படபடக்க

பெண்
ஏ உசிலம்பட்டி உச்சுக்கொட்ட சேடப்பட்டி நச்சுக்கொட்ட

ஆண்
கலிங்கப்பட்டி கரிச்சுக்கொட்ட கரியப்பட்டி
வேர்த்துக் கொட்ட

பெண்
திருபுவனம் சொக்கி நிக்க சிவகங் திக்கி நிக்க

ஆண்
அட வருசநாடு சாய வழி வாழையூத்தும் சரிய
புளிச்சம்பட்டி காய அந்த புசலுரு கருக

பெண் 
சும்மா ஆடி வந்தேன் ஆடிவந்தேன் ஆட்டம்
என் மேல பல மைனருக்கு நோட்டம்
சும்மா ஆடிவந்தேன் ஆடிவந்தேன் ஆட்டம்
இது குத்தகைக்கு குடுக்காத தோட்டம்

பெண்
ஊதா சட்ட போட்ட பய ஊர் ஊரா திரிஞ்ச பய
உச்சுக்கொட்டி பார்த்த பய ஊதாரியாநின்ன பய
கூரை எட்டி பார்த்த பய குப்புறத்தான் விழுந்த பய
ரெண்டாம் ஆட்டம் போனபய ரொம்பவுந்தான்பயந்த பய
ஆடா தின்னு வளர்ந்த பய ஆடாமலே கவுந்தபய
வேட்டி கட்ட விட்ட பய விந்தி விந்தி நடந்த பய
ஒத்த செருப்பு போட்ட பய ஒரசி ஒரசி தேஞ்ச பய
விசிலடிச்சு கிழிச்ச பய வீணாகத்தான் போன பய
சந்தைக்குத்தான் வந்த பய சங்கதிக்கு நின்னபய
அட வெடலபய ஒருத்தன் சும்மா வெட்டி பய ஒருத்தன்
தெருவில் கெடந்த பய ஒருத்தன் தன்ன மறந்த பய ஒருத்தன்
இது கடைத்தெருவே காணாத தங்கம்
இத களவாடப் போறதெந்த சிங்கம்
இது கடைத்தெருவே காணாத தங்கம்
இத களவாடப் போறதிந்த சிங்கம்

பெண்
அம்மிக்கல்லா நானிருந்தேன்
மஞ்சள் அரைக்க நீ வாரியா
நஞ்ச வெளியா நானிருந்தேன் நாத்து நட நீ வாரியா
திருவிழாவா நானிருந்தேன் உறியடிக்க நீ வாரியா
வாய்க்காலா நானிருந்தேன் வழிமறிக்க நீ வாரியா

பனைமரமா நானியிருந்தேன் கள்ளெடுக்க நீ வாரியாயா
பந்தக்காலா நானியிருந்தேன் கூரை பின்ன நீ வாரியா
கரைமேடா நானியிருந்தேன் செலம்பு சுத்த நீ வாரியா
பஞ்சாரமா நானிருந்தேன் கோழி புடிக்க நீ வாரியா
முந்திரியா காடா நானியிருந்தேன் நாவெரட்ட நீ வாரியா
நான் ராக்கு முத்து ராக்கு என்ன தொட்டுக்கத்தான் சாக்கு
அட நாக்கு முழிமூக்கு எல்லாம் நல்ல நல்ல சோக்கு
அது ஆம்பளையே பாக்காத காத்து
என்ன அப்படியே அள்ளியெடுத்து போர்த்து .............


Sivappathigaram - Mannarkudi Kalakalakka

சிவப்பதிகாரம் - சித்திரையில் என்ன வரும்

பெண்
அப்படியோர் ஆணழகன் என்னை ஆளவந்த பேரழகன்
செப்புக்கல்லு சீரழகன் சின்ன செம்பவள வாயழகன்
இப்படியோர் தேரழகன் இல்ல இன்னு சொல்லும் ஊரழகன்
அப்பறம்நான் என்ன சொல்ல
என்னை கட்டிக்கிட்டான் கட்டழகன்

பெண்
சித்திரையில் என்ன வரும்?
வெய்யில் சிந்துவதால் வெக்கம் வரும்?
நித்திரையில் என்ன வரும்?
கெட்ட சொப்பனங்கள் முட்டவரும்
கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால் உண்மையில் என்ன வரும்?
தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும் (சித்)

பெண்
பாவிப் பயலால இப்ப நானும் படும் பாடுயென்ன

ஆண்
ஆவி பொகபோல தொட்டிடாம இவ போவதென்ன

பெண்
கண்ணுக்கு காவலா சொப்பனத்த போடுற
கன்னத்துக்கு பவுடரா முத்தங்கள் பூசுற

ஆண்
நுலப்போல சீல - பெத்த தாயப்போல காள
யாரப் போல காதல் - சொல்ல யாருமே இல்ல (சித்)

ஆண்
கேணி கயிறாக ஒங்க பார்வ என்ன மெலிழுக்க

பெண்
கூணி முதுகால செல்ல வார்த்தை வந்து கீழிழுக்க

ஆண்
மாவிளக்கு போல நீ மனசையும் கொளுத்துற
நாவிடுக்கு ஓரமா நாணத்தப் பதுக்குற.......

பெண்
யாரும் ஏறச்சிடாத - ஒரு ஊத்துப் போல தேங்கி
ஆகிப்போச்சு வாரம் - இவ கண்ணுமுழி தூங்கி......... (சித்)

Sivappathigaram - Chithhiraiyil Enna

சிவப்பதிகாரம் - அற்றை திங்கள் வானிடம்

அற்றை திங்கள் வானிடம்
அல்லி செண்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடம்
காணுகின்ற காதல், என்னிடம்
நான் தெடுகின்ற யாவும், உன்னிடம்

அற்றை திங்கள் வானிடம்
அல்லி செண்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடம்
காணுகின்ற காதல், என்னிடம்
நான் தெடுகின்ற யாவும், உன்னிடம்

அடி தொட
முடி தொட
ஆசை பெருகிட
நேரும் பல வித பரிபாஷை
பொடி பட பொடி பட
நாணம் பொடி பட
கேட்கும் மனதினில் உயிர் ஓசை
முடி தோட
முகம் தோட
மோகம் முழ்கிட
வேர்க்கும் முதுகினில் இதிகாசம்
உருகிட உருகிட
ஏக்கம் உருகிட
கூடும் அனல் இது குளிர் வீசும்
குலுங்கினேன் உடல் கூசிட
கிறங்கினேன் விரல் மேய்ந்திட
மயங்கினேன் சுகம் சேர்ந்திட
தளும்பினேன் எனை நீ தொட
பாய்ந்திட
ஆய்ந்திட

காணுகின்ற காதல், என்னிடம்
நான் தெடுகின்ற யாவும், உன்னிடம்

அற்றை திங்கள் வானிடம்
அல்லி செண்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடம்

உடல் எது
உடை எது
தேடும் நிலை இது
காதல் கடன் இது, அடையாது
இரவு இது
பகல் இது
தேகும் சுகம் இது
சாகும் வரையிலும் முடியாது
கனவெது
நினைவெது
கேட்கும் பொழுதிது
காமப் பசி வர அடங்காது
வலம் இது
இடம் இது
வாட்டும் கதை இது
தீண்டும் வரையிலும் விளங்காது
நடுங்கலாம் குளிர் வாடையில்
அடங்கலாம் ஒரு ஆடையில்
தயங்கலாம் இடைவேளையில்
உரங்கலாம் அதிகாலையில்
கூடலில்
ஊடலில்

காணுகின்ற காதல், என்னிடம்
நான் தெடுகின்ற யாவும், உன்னிடம்

Sivappathigaram - Atrai Thingal

Followers