Search This Blog
Tuesday, July 3, 2018
மறுபடியும் - ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா
மறுபடியும் - நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
மறுபடியும் - எல்லோரும் சொல்லும் பாட்டு
Tuesday, January 28, 2014
மறுபடியும் - நல்லதோர் வீணை செய்தே
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய்
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய் நீ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
பூ மாலை ஓர் தோளில் தான்
போட நினைத்தாள் பெண்
போட்டாலும் பூமாலைக்கோர்
பொருளும் இல்லையே
நாள் ஒரு தோளினில்
மாலையை மாற்றிடும்
ஆண் கூட பெண் வாழ்வதா
அதை நானும் பண்பென்பதா
இது ஞாயமா
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
ஆனந்த நீரோடையில்
ஆட நினைத்தேன் நான்
நான் பார்த்த கோதாவரி
கானல் வரியா
தாள் மனை அகன்றதும்
தலைவனை அடைந்ததும்
நான் செய்த தீர்மானம் தான்
அதற்கிந்த சன்மானம் தான்
அவமானம் தான்
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய் நீ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
Marupadiyum - Nalladhor Veenai
Friday, October 25, 2013
மறுபடியும் - எல்லோரும் சொல்லும்
எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து
மேடையே வையகம் ஒரு மேடையே
வேஷம் அங்கெலாம் ஒரு விஷ,ஏ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே
எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து
[1]
நாயகன் மேலிரிந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெலாம் பொம்மை என்று நாடகம் ஆட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான்
ரயில் ச்நேதமா
புயல் அடித்த மேகமா
கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே
[2]
கோவலன் ராதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லை என்றால் கண்ணகி எது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே
எது கூடுமோ
எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே
Marupadiyum - Ellorum Sollu Pattu
மறுபடியும் - ஆச அதிகம் வெச்சு
ஆச அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வெக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி
(ஆச அதிகம்)
சின்னப்பொன்னு நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான்
????? ஒரு செந்தேரில் உல்லாச ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாபத் தேரேறலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலைதான் என் செல்லக்குட்டி
(ஆச அதிகம்)
வெல்லக்கட்டி நான் ஒரு வெள்ளிரதம் நான்
தங்கத்தட்டு நான் நல்ல கார்காலம் நான்
வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்
வாசமுல்லை நான் அந்தி வான்மேகம் நாம்
என் மச்சானே என்னோடு நீ ஆடலாம்
வா தென்பாண்டித் தெம்மாங்கு நாம் பாடலாம்
????
(ஆச அதிகம்)
Marupadiyum - Aasai Athigam
மறுபடியும் - நலம் வாழ எந்நாளும்
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!
மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம்.....!
எதற்கிந்த சோகம்? கிளியே..!
கிழக்கினில் தினம்தோறும் கதிரானது!
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது!
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது!
நிலவினை நம்பி இரவுகள் இல்லை!
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை!
ஒரு வாசல் மூடி......!
மறுவாசல் வைப்பான் இறைவன்!..
Marupadiyum - Nalam Vazha