Pages

Search This Blog

Showing posts with label Snegithiye. Show all posts
Showing posts with label Snegithiye. Show all posts

Monday, November 21, 2016

சிநேகிதியே - ராதை மனதில் ராதை மனதில்

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க
(ராதை மனதில்..)

கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள்
நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை எடுத்தாள்
நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க
(ராதை மனதில்...)

கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம்
கால்கள் இருண்டு விட கண்கள் சிவந்துவிட காதல் ராதை அலைந்தாள்
அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா எங்கே சொல் சொல்
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..
(ராதை மனதில்..)

கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கண்ணி கண்ணை விழித்தாள்
கன்னம் தீண்டியது கண்ணன் இல்லை வெறும் காற்றூ என்று திகைத்தாள்
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாய்
கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு கிழக்கு நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கறையும்முன் உடல் மண்ணில் சரியும்முன்
கண்ணா கண்ணா வா வா
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..

Snegithiye - Radhai Manathil

சிநேகிதியே - தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ
தேணிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ
பூங்குயில் பாஷை நீயோ
சூரியன் போனதும் அங்கே
வருவதும் நீயோ

நட்சத்திர புள்ளி வானம் எங்கும் வைத்து
நிலவுன்னை கோலம் போட அழைத்திடும்
நீ இருக்கும் இடம் வேடந்தாங்கல் என்று
பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும்
என்னோடு நீயும் ஓட முகில்கள் ஊஞ்சல் போடும்
உலவும் தென்றல் வந்து உன் ஊஞ்சலை அசைதே போகும்
பகலினில் முழுவதும் வெயிலினிலே
உனை சுட்டு வருத்திய வானம் அது
இரவினில் முழுவதும் அதை எண்ணியே
பனித்துளி சிந்திய அழுகிறது
(தேவதை வம்சம்..)

வாழ்வின் திசை மாறும் பாதைகளும் மாறும்
நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே
சொந்தம் நூறு வரும் வந்து வந்து போகும்
என்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே
உன் பாதம் போகும் பாதை மண்ணுக்கு சந்தோஷங்கள்
உன்னோடு ஓர் ஓர் நிமிஷம் உயிருக்கு ஆனந்தங்கள்
பூக்கள் எல்லாம் உன்னை தொட தவமிருக்கும்
நீயும் தொட சருகுக்கு உயிர் பிறக்கும்
வானவில்லும் வந்துனக்கு குடை பிடிக்கும்
எங்களுக்கும் அதற்குள்ளே இடம் இருக்கும்
(தேவதை வம்சம்..)

Snegithiye - Devadhai Vamsam

Followers