Pages

Search This Blog

Showing posts with label Enai Noki Paayum Thota. Show all posts
Showing posts with label Enai Noki Paayum Thota. Show all posts

Saturday, December 8, 2018

எனை நோக்கி பாயும் தோட்டா - எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும்

எதுவரை  போகலாம்
என்று நீ சொல்ல வேண்டும்
என்றுதான் விடாமல் கேட்கிறேன்

தேன் முத்தங்கள் மட்டுமே
போதும் என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்

யார் யாரோ கனாக்களில்
நாளும் நீ சென்று உலவுகின்றவள்
நீ காணும் கனாக்களில் வரும்
ஓர் ஆண் என்றால் நான்தான் எந்நாளிலும்

பூங்காற்றே நீ வீசாதே
ஓஓஓ
பூங்காற்றே நீ வீசாதே
நான் தான் இங்கே விசிறி

என் வீட்டில் நீ நிற்கின்றாய்
அதை நம்பாமல் என்னை
கிள்ளி கொண்டேன்
தோட்டத்தில் நீ நிற்கின்றாய்
உன்னை பூ வென்று என்னி
கொய்ய சென்றேன்

புகழ் பூமாலைகள் தேன் சோலைகள்
நான் கண்டேன் உன் பின் வந்தேன்

பேரும் காசோலைகள்
பொன் மாலைகள்
வேண்டாமே நீ வேண்டும் என்றேன்
உயிரே

நேற்றோடு என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்க கண்டேன்
காற்றோடு என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போகக் கண்டேன்

உன்னை பார்க்காத நான்
பேசாத நான்
என் வாழ்வில் நீ நானென்று நான்
தினம் நீ வந்ததால்
ஆனேன் நான் ஆனந்த பெண் தான்
உயிரே

எதுவரை  போகலாம்
என்று நீ சொல்ல வேண்டும்
என்றுதான் விடாமல் கேட்கிறேன்

தேன் முத்தங்கள் மட்டுமே
போதும் என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்

உன் போன்ற இளைஞனை
மனம் ஏற்க்காமல் மறுப்பதே பிழை
கண்டேன் உன் அலாதி தூய்மையை
என் கண் பார்த்து பேசும் பேறாண்மையாய்

பூங்காற்றே நீ வீசாதே
ஓஓஓ
பூங்காற்றே நீ வீசாதே
நான் தான் இங்கே விசிறி



Enai Noki Paayum Thota -Ethuvarai Pogalaam Endru nee Sollavendum

எனை நோக்கி பாயும் தோட்டா - மாமு பொழுதுபோகல பாடம் பிடிக்கல

மாமு பொழுதுபோகல
பாடம் பிடிக்கல
கண்ணில் பசுமை காணல
காற்று கூட அடிக்கல


ஒரு தாமரை நீரினில்
இல்லாமல் இங்கே ஏன்
இரு மேகலை பாதங்கள்
மண்மீது புண்ணாவதேன்

ஓர் ஓவியம் காகிதம்
கொள்ளாமல் இங்கே ஏன்
அதன் ஆயிரம் ஆயிரம்
வண்ணங்கள் பெண்ணவதேன்

ஓ.....
நான் பிழைப்பேனோ மூச்சு வாங்குதே
நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே
ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே
நாடகம் போலே நாட்கள் போகுதே
ஆயிரம் பூக்கள் தூவ தோன்றுதே
தோன்றிடும்போதே பாவம் தீருதே
காரிகை ஆளே காற்றும் மாறுதே
வானிலை வெப்பம் தோற்று போகுதே

காலை விழிப்பு வந்ததும்
கண்ணில் அவள்முகம்
என்னை புதிய ஒருவனாய்
செய்யும் செய்யும் அறிமுகம்

இது நாள்வரை நாள்வரை
இல்லாத பூந்தோட்டம்
திடு டிப்பேனே டிப்பேனே
எங்கெங்கும் ஏன்வந்தது
உன்னை பார்ப்பது நிச்சயம்
என்றன அன்றாடம்
என்னை சில்லிட வைத்திடும்
பூகம்பம் தான் தந்தது



நான் பிழைப்பேனோ மூச்சு வாங்குதே
நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே
ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே
நாடகம் போலே நாட்கள் போகுதே
எனுனை பார்த்தால் poovav ஞாபகம்
ஏழுஎட்டு நூலாய் வந்து போகணும்
வீட்டுக்கு போனால் அங்கும் உன்முகம்
வீம்புடன் வந்தே வீழ்த்தி பார்க்கணும்

வெண்ணிலா தூரத்து பார்வைகள் போகாதே
அதை என்னிடம்
வாயென்று சொன்னாலும் வராதே
நான்கைந்து வார்த்தைகள்
நான் சேர்க்கிறேன்
வைரக்கல் போல ஒவ்வொன்றும்
நான் கோர்க்கிறேன்
ஏதேனும் பேசாமல் தீராதினி
உடையும் பனி



Enai Noki Paayum Thota - Naan Pizhaippeno

Tuesday, April 25, 2017

எனை நோக்கி பாயும் தோட்டா - மறுவார்த்தை பேசாதே

மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விறல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே

விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்

மணி காட்டும் கடிகாரம்
தரும் வாடை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்

மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்

முதல் நீ
முடிவும் நீ
அலர் நீ
அகிலம் நீ

தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும், நீ
விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் எனும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தருமுன்பே
கனவாகி கலைந்தாய்

பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்

மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விறல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே


மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு



Enai Noki Paayum Thota - Maruvaarthai Pesathey

Followers