Pages

Search This Blog

Saturday, December 8, 2018

எனை நோக்கி பாயும் தோட்டா - எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும்

எதுவரை  போகலாம்
என்று நீ சொல்ல வேண்டும்
என்றுதான் விடாமல் கேட்கிறேன்

தேன் முத்தங்கள் மட்டுமே
போதும் என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்

யார் யாரோ கனாக்களில்
நாளும் நீ சென்று உலவுகின்றவள்
நீ காணும் கனாக்களில் வரும்
ஓர் ஆண் என்றால் நான்தான் எந்நாளிலும்

பூங்காற்றே நீ வீசாதே
ஓஓஓ
பூங்காற்றே நீ வீசாதே
நான் தான் இங்கே விசிறி

என் வீட்டில் நீ நிற்கின்றாய்
அதை நம்பாமல் என்னை
கிள்ளி கொண்டேன்
தோட்டத்தில் நீ நிற்கின்றாய்
உன்னை பூ வென்று என்னி
கொய்ய சென்றேன்

புகழ் பூமாலைகள் தேன் சோலைகள்
நான் கண்டேன் உன் பின் வந்தேன்

பேரும் காசோலைகள்
பொன் மாலைகள்
வேண்டாமே நீ வேண்டும் என்றேன்
உயிரே

நேற்றோடு என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்க கண்டேன்
காற்றோடு என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போகக் கண்டேன்

உன்னை பார்க்காத நான்
பேசாத நான்
என் வாழ்வில் நீ நானென்று நான்
தினம் நீ வந்ததால்
ஆனேன் நான் ஆனந்த பெண் தான்
உயிரே

எதுவரை  போகலாம்
என்று நீ சொல்ல வேண்டும்
என்றுதான் விடாமல் கேட்கிறேன்

தேன் முத்தங்கள் மட்டுமே
போதும் என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்

உன் போன்ற இளைஞனை
மனம் ஏற்க்காமல் மறுப்பதே பிழை
கண்டேன் உன் அலாதி தூய்மையை
என் கண் பார்த்து பேசும் பேறாண்மையாய்

பூங்காற்றே நீ வீசாதே
ஓஓஓ
பூங்காற்றே நீ வீசாதே
நான் தான் இங்கே விசிறி



Enai Noki Paayum Thota -Ethuvarai Pogalaam Endru nee Sollavendum

Followers