Search This Blog
Thursday, August 16, 2018
யூத் - அட ஆள்தோட்ட பூபதி நானடா
யூத் - சந்தோஷம் சந்தோஷம் வாழ்கையின்
யூத் - ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு
யூத் - அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ
யூத் - சகியே சகியே சஹித்தால் என்ன
யூத் - சக்கரை நிலவே பெண் நிலவே
Tuesday, November 19, 2013
யூத் - ஓல்ட் மாடல் -உ லைலா மஜ்னு
ஓல்ட் மாடல் -உ லைலா மஜ்னு காதலு
ஒட்டகம் தூது போச்சு
மாடர்ன் மாடல் -உ மாம்சு நம்ம காதலு
மீடியா நூறு ஆச்சு
மௌஸ் -எ அமுது இன்டர்நெட் -உள்ளே
மயிலு மாட்டும் இதய நெட் -உள்ளே
பழைய காதல் லவ் -உ லவ் -உ
பப்பல் கம் போலே ஜுவ்வு ஜுவ்வு
பசங்க நம்ம லவ் -உ லவ் -உ
பத்தி எரியும் ஸ்டோவே -உ ஸ்டோவே -உ
ஆதாம் தான் அட ஆரம்பிச்சான்
ஆப்பிள் -எ தின்னு பொட்டு ஆசை வெச்சான்
ஏவாள் நெஞ்சிலும் பத்த வெச்சான்
ஏகம் ஏறிப்போய் சுத்த வெச்சான்
அதுதான் ஆதாம் தான்
ஏவலின் ஏவல்தான்
நமக்கு கொட் பாதர் டான் 'ட் போதர்
குஷி குஷி ஒரே குஷி ஹே
லவ் -உ பண்ண குத்தமில்லை
எந்த பயலும் சுத்தமில்லை
காதல் ஜோடி செத்தாகூட
காதல் என்றும் செத்ததில்லை
ச்டுடேன்த்ஸ் காதலெல்லாம் சிட்டி பஸ் -உள்ளே
மினிச்டெர் காதெல்லாம் ஏற் பஸ் -உள்ளே
குட்டன் காதலு குடிசையிலே
காதல் எங்கும் உண்டு கடவுள் போலே
வானம் இல்லாத தேசம் உண்டாட
அதுபோல் காதல்தான் கடவுள்தான்
எங்கும் எங்கும் உண்டு
புனிதமாகும் காதல் கதை
போற்றி நில்லு கடைசி வரை
காதலுக்கு மரியாதை செய்
சொல்வதுங்கள் நண்பன் விஜய்
மாடர்ன் மாடல் -உ மாம்சு நம்ம காதலு
மீடியா நூறும் ஆச்சு
Youth - Old Model Laila
யூத் - அட ஆல்தோட்ட பூபதி
அட ஆல்தோட்ட பூபதி நானாட
அந்த அமர தொட்ட பூபதியும் நானாட
ஒரு பாட்டு நான் பாடபோறேன் கேளுடா
அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா
இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா
இவ மூடி வெச்ச ஒரு மத்தாலமா
காதல் கல்யாணத்த அந்த சாமி சென்ஜானட
சாமி எந்த சாமி அந்த சாமி கந்த சாமி
(அட ஆல்தோட்ட ...)
தொட்டு தொட்டு பேசும் பூங்கோடீ
தூக்கம் கெட்டு போனேன் நானடி
உள்ளுக்குள்ளே ரத்த ம் ஊறுதே
உன்னால் ஆசை எல்லை மீறுதே
ஏ தூண்டில் சிக்காத மீனு ஒன்னு
துள்ளி குதிப்பத பார்துக்கட
ஆடும் ஆட்டத்தை கண்டதாலே
ஆயுள் கைதி ஆநேனட
இவ கட்டுடலே ஒரு கல்லூரி தான்
அதில் கல்வி கற்க நான் வந்தேனடா
வாடி பொட்ட புள்ள என்னை யாரும் தொட்டதில்ல
ஓர பார்வையாலே என்னை ஓங்கி அரங்ஜவலே
(அட ஆல்தோட்ட ...)
சிக்கு புக்கு சிக்கு ரைளுட
இவ சேல கட்டி வந்தா மயிலு த
மோகதால் உள்ளம் நோகுதே
மூங்கில் காடை தேகம் வேகுதே
பட்டு சேலை போல் என்னை நீயே
சுத்தி சுத்தி கட்டிக்கோடி
பாதி கண்ணாலே நீயும் பார்த்தால்
பட்டின்னதாரம் கோவலந்தான்
இவ கன்னி ராசி நான் கண்ணன் ராசி
நம்ம ஜாதகத்தில் இனி நல்ல ராசி
வாடி பொட்ட புள்ள என்னை யாரும் தொட்டதில்ல
ஓர பார்வையாலே என்னை ஓங்கி அரஞ்சவலே
(அட ஆல்தோட்ட ...)
Youth - Aal Thotta Boopathy
Wednesday, October 9, 2013
யூத் - சந்தோசம் சந்தோசம்
சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ.....
சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ...
வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம்பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணிப் பண்ணி திருந்திய பிறகுதான் நாகரீகம் பிறந்ததடி
தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பவளக்கொடி
உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பைத் தொட்டியில்லை
உள்ளம் என்பது பூந்தோட்டியானால் நாளை துன்பமில்லை
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ....
ஆதியில் ஆண்டவன் இந்த பூமியைப் படைத்தானே
அவன் ஆசையைப் போலவே இந்த பூமி அமையலையே
ஆண்டவன் ஆசையே இங்கே பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மையென்றும் தீமையென்றும்
நான்கு பேர்கள் சொல்லுவது நம்முடைய பிழையில்லையே
துன்பம் என்ற சிற்பிக்குள் தான் இன்ப என்ற முத்து வரும்
துணிந்தபின் பயமில்லையே
கண்ணீர்துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள்
காலுக்கு செருப்பு எப்படிவந்தது முள்ளுக்கு நன்றிசொல்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ...
சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்.
Youth - Santhosham Santhosham
யூத் - சர்க்கரை நிலவே
சர்க்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே
சர்க்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
மனம் பச்சை தண்ணீ தான் பெண்ணே
அதை பற்ற வைத்தது உன் கண்ணே
என் வாழ்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?
சர்க்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே
காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமிதேன்
கண்ணே உன் பொன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா?
அதில் கொள்ளை போனது என் தவறா?
பிரிந்து சென்றது உன் தவறா?
நான் புரிந்து கொண்டது என் தவறா?
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவரா?
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா ?
நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தர் சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய் ?
Youth - Sarkkarai Nilave