Pages

Search This Blog

Showing posts with label Bhooloham. Show all posts
Showing posts with label Bhooloham. Show all posts

Thursday, January 3, 2019

பூலோகம் - வணக்கம் வணக்கம் வணக்கம்

வணக்கம் வணக்கம் வணக்கம்
இந்த சித்தனுக்கெல்லாம் வணக்கம்
ஒனக்கும் எனக்கும் தெனிக்கும்
பலம் நாட்டு மருந்து கொடுக்கும்
கிச்சிலிக் கெழங்கு பெரண்ட
சுக்கு மெளகு திப்பிலி உருண்ட
மருந்த கண்டா ஏண்டா மெரண்டா
நீ தரையில உருண்டு பொரண்ட

ஐஸ் அவுஸ் பாபு நைஸா போறான்
சைஸா புடிச்சி மருந்த ஊத்துடா
இஸ்தபாலு எஸ்கேப்பாவுறான்
எஸ்ட்ரா கொஞ்சம் பஸ்மம் ஊட்டுடா

டபுலி டபுலி கபுலி கபுலி

வணக்கம் வணக்கம் வணக்கம்
இந்த சித்தனுக்கெல்லாம் வணக்கம்
ஒனக்கும் எனக்கும் தெனிக்கும்
பலம் நாட்டு மருந்து கொடுக்கும் 

எரியிற நெருப்புல எண்ணைய ஊத்தி
வெந்த புண்ணுல வேல பாய்ச்சி
நொந்த கண்ணுல சுண்ணாம்பு தடவி
ஒம்பது வாசலும் பஞ்சரா போச்சி

மழையில தான் நனஞ்சாக்கா ஜொரம் வரும்
அது கொறையலைன்னா
மனசுக்குள்ள பயம் வரும்
மாத்திரைய மாத்தித் தின்னா நொர வரும்
சித்த மருந்த நம்பு மலைய தூக்கும் பலம் வரும்
வன்னாந்தொர அண்ணாதொர
இன்னும் கொஞ்சம் வாய தொற

மாஸ்டர் ரொம்ப டார்ச்சர் பண்ணுறாரு
நாட்டு மருந்த தந்து ரப்ச்சராக்குறாரு
மாட்டிக்கிட்டோம் எங்க கெட்ட நேரம்
இத மறக்கத் தானே டாஸுமார்க்கு போறோம்

வணக்கம் வணக்கம் வணக்கம்
இந்த சித்தனுக்கெல்லாம் வணக்கம்
ஒனக்கும் எனக்கும் தெனிக்கும்
பலம் நாட்டு மருந்து கொடுக்கும்

மனுசனுக்கு செக்ஸு ரொம்ப மஸ்டுடா
அதுல மார்க்க எடு தோத்துபுட்டா வொஸ்ட்டுடா
மருந்து கேட்டா இருக்கு பல லிஸ்டுடா
டௌட்ட மாஸ்டர் கிட்ட கேட்டுக்கிட்டா பெஸ்டுடா
வீரியம் தான் முருங்க வெத
விருத்திக்கி தான் முள்ளி வெத

மாஸ்டர் அந்த மருந்த கொஞ்சம் தாங்க
இந்த கோதாவுல எறங்கப் போறோம் நாங்க

ஜோடி போட்டு ஏறலாமா ரிங்கு
அந்த சண்டையில நாங்க இப்ப கிங்கு

ஜிகுலா ஜிகுலா ஜிகுலா ஜிகுலா

டிங்கல டிங்கா ஸர்ஸர்

ஜிகுலா ஜிகுலா ஜிகுலா ஜிகுலா

டிங்கல டிங்கா ஸர்ஸர்


Bhooloham - Vanakkam Vanakkam

பூலோகம் - வாங்கி வந்த பூ மால

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபதாம் வருடம்...
எங்கள் சென்னை மா நகரினிலே...
செண்ட் ஜார்ஜ் கோட்டை அருகினிலே
ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து..
பிரபல பாக்ஸிங் வாத்தியாராய் வாழ்ந்து
இன்று தானாக முடிவு தேடி...
வாழாமல் போனதேனோ...
ஐயா ரத்தினம் ஐயா...
நீ சாகும் போது யாரைச் சொல்லி 
அழைத்தாய் ஐயா...

வாங்கி வந்த பூ மால தான் ஐயா
வாத்தியாரே உன் மேல தான்

வாங்கி வந்த பூ மால தான் ஓ ஐயா
வாத்தியாரே உன் மேல தான்
குத்து சண்டையில அப்பன் புள்ளையா
கட்டிப் புரண்டோம் மாஸ்டர்
இப்ப ஒட்ட வச்சது எங்களை ஏனோ
கண்ணீரு அஞ்சலி போஸ்டர்
ரத்தினம் மாஸ்டரு ரத்தினம் மாஸ்டரு 
எங்க ரத்தமும் சதையுமாயிருந்த
ரத்தினம் மாஸ்டரு 

வாங்கி வந்த பூ மால தான் ஐயா
வாத்தியாரே உன் மேல தான்

திருலக்கேணி மார்க்கெட்டுல 
தவுலத்தா நீ நடந்தா
ரிஸ்கான ரௌடிசெல்லாம் 
சலாம் போட்டு போவான்
போலிஸ் வேல ரயில்வே வேல
ஸ்போர்ட்ஸ் மேனு கோட்டால
எவ்வளோ ஸ்டுடன்ஸுக்கு 
கெடச்சதிங்கு உன்னால

எக்கச்சக வாத்தியார ஸ்கூல்ல பாத்திருக்கேன்
உன்னப் போல கெத்து இல்ல
கத்து தந்த வித்தைகள

ரத்தினம் மாஸ்டரு ரத்தினம் மாஸ்டரு 
எங்க ரத்தமும் சதையுமாயிருந்த
ரத்தினம் மாஸ்டரு 

வாங்கி வந்த பூ மால தான் ஓ ஐயா
வாத்தியாரே உன் மேல தான்

பாசத்தோட வளத்த புள்ள பாட ஓல பின்னுதையா
பச்ச மூங்கில் வெட்டுதையா
கொள்ளி போட கத்துதையா
மீளாத பயணத்துக்கு அழகாக பல்லக்கத் தான்
அழுகைய அடக்கிக்கிட்டு 
அலங்காரம் பண்ணுதையா
மால போட்டு படுக்க வச்சி
மஞ்சளோட குங்குமம் வச்சி
ஒத்த ரூபா நாணயத்த 
நெத்தியில தானே ஒட்ட வச்சி
மேட போட்டு குந்த வச்சி
முன்னால ஒரு மைக்க வச்சி
இந்த கானா தாஸ உன் பெரும 
பாட சொன்னான் பூலோகம்
தேங்ஸு பூலோகம்

ஆட்டக் கணக்குடா விதி போட்ட கணக்குடா
நண்பா கூட்டிப் பெருக்கி கழிச்சி பாத்தா
பூட்டக் கணக்குடா வெறும் ஓட்டக் கணக்குடா

குடும்பம் கூத்தியாருன்னு...
ஒண்ணுமில்லாம வாழ்ந்திட்டாரு...
இந்த வித்தைக்கெல்லாம் இனிமே நாதி யாரு...
பூலோகம் தான் வாத்தியாரு...



Bhooloham - Vaangi Vantha

பூலோகம் - இவன் சென்னை மா நகர் வீரன்

இவன் சென்னை மா நகர் வீரன்
சிங்கார வேலன் பேரன்
பெரும் சொத்து சேர்க்க மாட்டான்
தன்னை வித்து சேர்க்க மாட்டான்

இவன் சென்னை மா நகர் வீரன்
சிங்கார வேலன் பேரன்
பெரும் சொத்து சேர்க்க மாட்டான்
தன்னை வித்து சேர்க்க மாட்டான்
வலை வீசும் வீடியோவின் 
விலை பேசும் மீடியாவின்
தூண்டிற் புழு ஆக மாட்டான்
இந்தியா உங்கள் சந்தையா
மக்களா இல்லை மந்தையா
நாடகம் இல்லை ஊடகம்
உண்மையே அதன் ஆயுதம் 
ஓ... ஓ... ஓ... ஓ... 

சோப்பு சீப்பின் பேராலே ஒரு யுத்தம் தானே
நோயை விற்கும் கேமரா இவன் லென்ஸு தானே
ஊட்டச் சத்து மாவென்பான்
சாப்பிட்டா தான் மூளையாம்
நாட்டை மார்க்கெட்டாக்கியே விளையாடுறாண்டா
மாடல் பாத்து ஓடாதே வாழ்க்கை உன்னோடதே
காரு வாங்க அழைப்பார் ஏது பெட்ரோல் டீசலு
ஷாம்பூ கூந்தல் ரோப்பாய் மாறி 
காரை இழுக்குதாம்
சென்டை பூசிக் கொண்டால் 
எந்த பெண்ணும் ஈஸியாம்
சாஹசங்களே விளம்பரமா
பாரம்பரியம் தகர்ந்திடுமா...

இந்தியா உங்கள் சந்தையா
மக்களா இல்லை மந்தையா
நாடகம் இல்லை ஊடகம்
உண்மையே அதன் ஆயுதம் 

ஓ... ஓ... ஓ... ஓ... 

வியாபாரம் நாடாளுதாம்
வர்த்தக விளம்பர சூதாட்டம் தான்
ஹே கல்வித் துறை வியாபாரம்
ஆஸ்பத்திரி வியாபாரம் பந்நாட்டு வியாபாரம்
கண்டம் விட்டு கண்டம் தாண்டி
பண்டம் விற்க வந்துட்டாண்டா
உள் நாடே தேங்கிப் போச்சேடா

இந்த உலகமே வியாபாரம் தான்
மதக் கலவரம் வியாபாரம் தான்
பக்தி பரவசம் வியாபாரம் தான்
நாட்டில் இலவச வியாபாரம் தான்



Bhooloham - Ivan Chennai

Followers