Pages

Search This Blog

Showing posts with label Shahjahan. Show all posts
Showing posts with label Shahjahan. Show all posts

Monday, January 6, 2014

ஷாஜஹான் - சரக்கு வச்சிருக்கேன் இறக்கி

சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
அறுத்த கோழி மொளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்
கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு
குமரி ருசியா இருந்தா குமரிய வெட்டு

சொர்க்கம் சிட்டு நான் சினா பட்டு
ஆடை போட்டு மூடி வச்ச அல்வா தட்டு
கோழி ருசியா இருந்தா கோழிய தின்பேன்
குமரி ருசியா இருந்தா குமரிய தின்பேன்
ஹே மாம்பழ குயிலே மார்கழி வெயிலே
உன் அட்ரச்ஸ் தந்து அனுப்பி வச்சான் மன்மத பயலே

ஹே ஓரம் சாரம் பார்த்து என்ன ஒதுங்க சொல்லும் கோழி
ஊருக்கெல்லாம் முட்டை போட நேந்து விட்ட கோழி
யானை கட்டும் சங்கிலியால் போட வேணும் தாலி
முடிச்சு போட்டு போற பையன் முதலிரவில் ஜாலி
ஹோய் ஹோய் ஹோய்

போன வருஷம் குத்த வச்ச பெட்டை கோழி
நீ முத்தம் ஒன்னு போட்டு புட்டா முட்டை கோழி
ஹே வெரட்டி வெரட்டி முட்ட வருது வெள்ளை கோழி
இது சேவலை தான் கற்பழிக்கும் ஜல்சா கோழி
முன்னேறவா முத்தாட வா
முத்தமிட்டு முத்தமிட்டு மூச்சை நிறுத்த வா

சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
அறுத்த கோழி மொளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்
கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு
குமரி ருசியா இருந்தா குமரிய வெட்டு

சொர்க்கம் சிட்டு நான் சினா பட்டு
ஆடை போட்டு மூடி வச்ச அல்வா தட்டு
கோழி ருசியா இருந்தா கோழிய தின்பேன்
குமரி ருசியா இருந்தா குமரிய தின்பேன்
ஹே மாம்பழ குயிலே மார்கழி வெயிலே
உன் அட்ரச்ஸ் தந்து அனுப்பி வச்சான் மன்மத பயலே

ஹே நாக்கு மூக்கு நீளமான அழகு புள்ள
நல்ல வேலை எந்தன் கண்ணில் படவே இல்லை

உன்ன போல வெள்ளை காரன் எவனும் இல்ல
உன்ன உரசி புட்டு செத்து போறேன் கவலை இல்ல
ஹே கூத்தாட வா கொண்டாட வா
சோர்ந்து போன உருப்புக்கெல்லாம் சுழுக்கேடுக்க வா

சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
அறுத்த கோழி மொளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்
கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு
குமரி ருசியா இருந்தா குமரிய வெட்டு

சொர்க்கம் சிட்டு நான் சினா பட்டு
ஆடை போட்டு மூடி வச்ச அல்வா தட்டு
கோழி ருசியா இருந்தா கோழிய தின்பேன்
குமரி ருசியா இருந்தா குமரிய தின்பேன்
ஹே மாம்பழ குயிலே மார்கழி வெயிலே
உன் அட்ரச்ஸ் தந்து அனுப்பி வச்சான் மன்மத பயலே

Shahjahan - Sarakku Vachirukken

ஷாஜஹான் - மே மாத மேகம்

மே மாத மேகம் என்னை நில்லென்று சொல்ல பட பட
பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட
ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட
போர் சேய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட


புன்னகை சொட்டு புன்னகை,
என்னை புலவனாய் மாற்றுதே,
பூமியும், அந்த வானமும்,
சின்ன புள்ளியாய் போனதே,

கண்களே , அந்த கண்களே ,
எந்தன் கற்பினை தீண்டுதே,
பூவுக்கும், ஈட்டி வேலுக்கும்,
இன்று போர்க்களம் மூண்டுதே

சில நேரம் வேலும் வெல்லலாம்
பல நேரம் பூவும் வெல்லலாம்
அது தானே காதல் யுத்தம் அன்பே

வென்றாலும் இனிமை காண்பதும்,
தோற்றாலும் பெருமை காண்பதும்,
இங்கேதான் காணே கூடும், அன்பே

மே மாத மேகம் என்னை நில்லென்று சொல்ல பட பட
பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட
ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட
போர் சேய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட


பறவைகள், பேசும் மொழிகளை,காற்று அறியுமா இல்லையா?
கண்களால், பேசும் மொழிகளை, காதல் அறியனும் இல்லையா?

மலைகளை, கட்டி இழுப்பது,
எனக்கு சுலபம்தான் இல்லையா?
மனத்திலே,உள்ள காதலை,
இறக்கி வைப்பதே தொல்லையா?

போ போ என்ற சொல்லுக்கு வா வா என்று அர்த்தமே
அகராதி இங்கு மாறுமே அன்பே
ஆடைக்குள் ஒளிந்து நிற்கிறாய்

ஆடைக்குள் மூடி நீற்க்கிறாய்,
அது கூட வேறு அர்த்தமா?
ஆஹாஹா, புரிஞ்சு போச்சு, அன்பே,

மே மாத மேகம் என்னை நில்லென்று சொல்ல பட பட
பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட
ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட
போர் சேய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட

Shahjahan - May Madham

Thursday, January 2, 2014

ஷாஜகான் - மின்னலைப் பிடித்து மின்னலைப்

மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து பெண்ணொன்று படைத்து
வீதியில் விட்டு விட்டார்
இப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்ததை
எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான்
அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று
உயிரைத் தடவி திரும்பும் போது
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே
ஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்து
மார்பு கடந்து இறங்கும் பொழுது
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே

மின்னலைப் பிடித்து ....

நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து
பாலில் நனைத்து பாலில் நனைத்து
கன்னங்கள் செய்து விட்டார்
உலக மலர்கள் பறித்து பறித்து
இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து
பெண்ணை சமைத்து விட்டார்
அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா
என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்த்து
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா
ஏஹே கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா

மின்னலைப் பிடித்து ....

மின்மினி பிடித்து மின்மினி பிடித்து
கண்களில் பதித்து கண்களில் பதித்து
கண்மணி கண் பறித்தாள்
தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து
மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து
ஜீவனை ஏன் எடுத்தாள்
காவித் துறவிக்கும் ஆசை வளர்ப்பவள்
ஆணுக்கும் பொண்ணுக்கும் ஆண்மை கொடுப்பவள்
பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே
ஒஹோ தெரிந்த பாகங்கள் உயிரைத் தந்திட
மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜனனம் மரணம் ரெண்டும் தருபவனே

மின்னலைப் பிடித்து ....

Shahjahan - Minnalai pidithu

Saturday, September 28, 2013

ஷாஜகான் - மெல்லினமே மெல்லினமே

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...
நான் தூரத் தெரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயசை
ஒரு நொடிக்குள் அடைந்தாய்.. ஹோ..ஹோ..

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

வீசிப்போன புயலில் என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி
எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி
மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி
கனவுப் பூவே வருக உன் கையால் இதயம் தொடுக.
எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக.
ஹோ..ஹோ...

மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

மண்ணைச்சேரும் முன்னே அடி மழைக்கு லட்சியம் இல்லை
மண்னைச் சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி
உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை
உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி..
வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்
பூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்...
பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதில்லை
காதலி பேசவுமில்லை என் காதல் குறையவும் இல்லை ஹோ..ஹோ..

மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்.
நான் தூரத் தெரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயசை
ஒரு நொடிக்குள் அடைந்தாய்.. ஹோ..ஹோ..

Shahjahan - Melliname Melliname

Followers