Pages

Search This Blog

Showing posts with label Kadamban. Show all posts
Showing posts with label Kadamban. Show all posts

Tuesday, January 23, 2018

கடம்பன் - ஹேய் உச்சி மலை அழகு

தந்தான நானே ஏ தந்தான நானே     
ஏ தந்தான தந்தான தந்தான நானே     
ஏ தந்தான தந்தான தந்தான தந் தானே     
ஏ தந்தான நானே ஏ தந்தான நானே     
ஏ தந்தான தந்தான தந்தான நா     
ஏ தந்தான தந்தான தந்தான நா…னே……     
     
ஹேய் உச்சி மலை அழகு ஆதாரமா உள்ளவர     
இந்த ஊரு ஒலகமே செழித்து வாழ இல்ல கொற     
பச்ச செடி கொடிங்க பழகி பேசி அள்ளித்தர     
நாங்க கைய ஏந்தித்தான் பொழைக்கமாட்டோம் போகும்வர     
காசு பணம் சொத்து சொகம் போயிடும் தொலைஞ்சிதான்     
நம்ம காக்கும் இந்த காட்ட நம்;பி     
வாழ்வோமே துணிஞ்சிதான்      
காசு பணம் சொத்து சொகம்      
போயிடும் தொலைஞ்சிதான்     
நம்ம காக்கும் இந்த காட்ட நம்பி      
வாழ்வோமே துணிஞ்சிதான்      (உச்சி)
     
பாம்பு தோளு பல்லி கூட பாசங்காட்டி தள்ளி ஓட     
கூடி வாழும் இந்த வாழ்வ கொண்டாடுவோம்     
குறை இல்லாமலே நாளும் பொழுதும் பண்பாடுவோ…ம்     
கருவுல போகும்வரையில தாங்குது காடு மடியில      
ஏ………… ஏஹே…………     
     
ஓடை நீரில் தாவும் மீன      
ஒன்னா சேர்ந்து கொம்பு தேன     
பங்குபோடும் எங்க கூட்டம் ஜோரானதே     
வழி மாறாமலே போகும் திசையோ நேரானது     
இருப்பதை எல்லாம் கொடுக்குற காடா      
இறைவன் இருக்குறான்     
அடிக்குற காத்துல அசைஞ்சிதான்      
அழகா அவனும் சிரிக்கிறான்



Kadamban - Uchimalai Azhagu

கடம்பன் - ஏ சாமக் கோடாங்கி உடுக்க போல்

ஏ சாமக் கோடாங்கி உடுக்க போல் என்ன      
பொழுதும் உலுக்குறியே     
இந்த சீம முச்சூடும் நெறைஞ்சி நின்னாலும்     
சிரிச்சே நீ என்ன கொல்லுறியே     
     
சாம கோடாங்கி உடுக்கபோல் என்ன     
பொழுதும் உலுக்குறியே     
இந்த சீம முச்சூடும் கரைஞ்சி நின்னாலும்     
சிரிச்சே நீ என்ன கொல்லுறியே     
     
ஏ முத்துனவ ரத்தினமே முந்தி அணிஞ்சி     
நீ வந்து நிக்க போகுது என் கண்ணு அவிஞ்சி     
     
பணமே இல்லாத கரும்பா உன் பேச்சி     
மனச தித்திப்பா மாத்திடுச்சி     
     
கோடி ரூபாய கொடையா தந்தாலும்     
ஒதுக்கி வைப்போமுங்க     
எட்டு மாடி வீடெல்லாம்      
எதுக்கு வேணாங்க     
ஓல கொட்டாயே போதுமுங்க     
     
காடு பூராவும் ஒதவும் சொந்தந்தான்     
கலங்கமாட்டோமுங்க     
வேற ஆளே உள்ளார துணிஞ்சி வந்தாலே     
உசுர தந்தாச்சும் காப்போமுங்க     
     
ஏ கட்டையில போரதுதான் இந்த உசுரு     
இத எதையும் தன்னுள்ள மறைச்சி வைக்காத      
காடா வாழ்வோமே நாங்க நாங்க     
     
ஆசப்பாட்டாலும் எதையும் கேட்காம எடுக்கக்கூடாதுங்க     
வெளி வேசம் போடாம நெசமா வாழ்ந்தாலே     
எதுவும் தன்னால கைகூடுங்க     
     
வேரே இல்லாம மரமும் வாழாது      
வெவரம் சொல்வோமுங்க     
வெந்த சோறே ஆனாலும் ஒழைச்சி திங்காட்டி     
ஒடம்பில் ஒட்டாது கேட்டுக்குங்க     
     
ஏ உத்தமனா வாழும்வரை இல்ல கவல     
நீ ஒன்னனதான் நம்பும்வர உண்டு ரகல     
     
வழியும் மாறாம நடந்தா தப்பில்ல     
நிமிர்ந்து வாழ்வோமே ஊரே சொல்ல



Kadamban - Saama Kodaangi

கடம்பன் - ஒத்த பார்வையில் என்ன ஏன்டி

ஒத்த பார்வையில் என்ன ஏன்டி நீ      
படம் போட்டுக்காட்டுற     
கொத்து சாவியா நெஞ்சத்தூக்கியே      
இடுப்போரம் மாட்டுற     
மொத்த ஆசையும் ஒரு சேர ஒன்ன கேட்குதே பரிமாற     
புத்தி மாறுதே பொழுதெல்லாம் மலையேற     
     
முத்தப்பார்வையில் என்ன நீயும் ஏன்      
படம் போட்டுக்காட்டுற     
கொத்து சாவியா நெஞ்சத்தூக்கியே      
இடுப்போரம் மாட்டுற……     
     
ஊரே……… பார்க்க…… போறேன்… ஒன்னத்தூக்க     
     
காத்தே பாவம் கூட கண்ணில் பார்க்காம     
காலம் பூரா ஒன்ன காதல் செய்வேன் கேட்காம     
     
ஏதேதோ ஏமாத்துர என் நெஞ்ச பாழாக்குற     
ஆகாத பேச்ச பேசி ஆள சூடேத்துற      (ஒத்த)
     
ஆசையில்…… தான்டி…… வாரே…ன் உன வேண்டி…     
     
என் வாழ்க்க பூரா ஒன்ன சேர்ந்தா போதாதே     
வாழ்வே நீயா மாற கோடி ஜென்மம் தீராதே     
     
அய்யய்யோ உன் பேச்சில ஆகாயம் என் கையில     
ஏத்தாத என்ன நீயும் ஆச பல்லாக்குல



Kadamban - Otha Paarvayil

கடம்பன் - இளஇரத்தம் சூடேற திசை எட்டும்

இளஇரத்தம் சூடேற திசை எட்டும் தூளாக     
பகை இல்லை இல்லை கைகள் சேர     
ஒரு யுத்தம் ஈடேற பயம்மில்லை போராட     
விடிவெள்ளி எங்கள் பேரை கூற     
எதிராளி யாரென நாங்கள் அறிவோமே மண் மேலே     
ஒரு போதும் தோல்விகள் இல்லை     
நடப்போமே முன்னாலே      (இளஇரத்தம்)
     
ஓ……… கண்ணீரென்ன கண்ணீரென்ன      
கண்ணிலே ரெண்டிலே ஒன்றை     
இன்றே செய்வோம்     
மண்ணிலே எங்கே எங்கே குற்றம் இங்கே     
தேடாமல் தீராதே சோகங்களே     
தீயிலே வாட்டுவோம்     
செல்லாத காசுபோல் எம்மையாக்கிய      
சூழலை மாற்றுவோம் எல்லையை மீறுவோம்     
இன்னும் சீறுவோம்      
நாங்களும் யாரென காட்டுவோம்      (இளஇரத்தம்)
     
ம்………… எல்லோருக்கும் எல்லாம் இங்கே     
சொந்தமா செவ்வானந்தான்     
முள் வேலிக்குள் தங்குமா     
அன்னை தந்தை என்றும் எங்கள் காடென்று      
வாழ்ந்தோமே நீங்காமலே     
பொன்னான காடிதை சூரையாடினால்     
வேட்டையும் ஆடுவோம்     
என்னாலும் வேலிபோல் நாங்கள்      
எங்களை காவலாய் போடுவோம்     
ஆயுதம் தூக்குவோம் வேதனை போக்குவோம்      
வெற்றியின் உச்சியில் ஏறுவோம்      (இளஇரத்தம்)



Kadamban - Ilarattham Soodera

கடம்பன் - ஆகாத காலம் ஒன்னு அடியோட

ஆகாத காலம் ஒன்னு அடியோட ஊரக்கொன்னு     
பொதைச்சிட்டுப் போயிடுச்சே……     
சானேற கீழத்தள்ளும் சதிகார கூட்டம் எங்க     
பொனந்திண்ணக் கூடிடுச்சே……     
கொடிகாலாக நீண்ட எங்க குடிசையும் கூரையும்     
தீஞ்சது தீயாற……… ஓ………     
அடி வேராக வாழ்ந்த எங்க தலமுற கோபுரம்     
சாஞ்சது யாரால முடிவுல போனோமே தோத்து     
வெலங்கலயே இந்த கூத்து      (ஆகாத)
     
ஏ…… வெல்லாம காடு காஞ்சா     
ஒரு போகந்தான் பாழாப்போகும்     
கண்ணான காடு தீஞ்சா     
உயிரெல்லாம் ஊனம் ஆகும்     
அன்னாந்து பார்த்தேன் வானம்     
மழ சிந்தாம ஏது பூமி     
மல்லாந்து போன நீதீ     
வெறும் மண்ணாகிப்போச்சே சாமி     
தல ஓஞ்சோமே………     
அஞ்சாமலே வாழ்ந்தோமே      
ஏமாந்துதான் மாஞ்சோமே      (ஆகாத)
     
அப்பாவியான நாங்க அடிப்பட்டோமே நாடே பார்க்க     
கொத்தோட நாங்க சாய ஒரு ஆளில்ல கேள்வி கேட்க     
முன்னால ஆண்ட கூட்டம்     
முகம் இல்லாம மூலி ஆனோம்     
வென்னீரு பாஞ்ச வேரா     
தெசை எங்கேயும் காணா போனோம்     
புலியானோமே……………     
அஞ்சாமலே வாழ்ந்தோமே ஏமாந்துதான் மாஞ்சோமே…… 
(ஆகாத)



Kadamban - Aagaadha Kaalam

Followers