Pages

Search This Blog

Showing posts with label Bheema. Show all posts
Showing posts with label Bheema. Show all posts

Tuesday, November 5, 2013

பீமா - ரகசிய கனவுகள்

ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்

முதல் பிழை போல் மனதினிலே ..
விழுந்தது உனது உருவம் .. ஒ ..
உதடுகளால் உனை படிப்பேன் ..
இருந்திடு அறை நிமிடம் ..
தொலைவதுபோல் தொலைவதுதான் ..
உலகில் உலகில் புனிதம்..

இறகே இறகே மயிலிறகே ..
வண்ண மயிலிறகே வந்து தோடு அழகே ..
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..

மறுபடி ஒருமுறை பிறந்தேனே ..
விரல் தொட புருவமும் சிவந்தேனே ..
ஒ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ ..
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ ..

சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல ..
எனை சூழ .. நரம்புகளோடு குரும்புகலாடும் ..
எழுதிய கணக்கு ..
எனதிறு கைகள் தழுவிட நீங்கும் ..
இருதைய சுளுக்கு ..

ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்

உயிரணு முழுவதும் உன்னை பேச .. உன்னை பேச ..
இமை தொடும் நினைவுகள் அனல் வீச .. அனல் வீச ..
ஒ .. நெனச்சாலே செவப்பாகும் ..
மருதானித் தோட்டம் நீ ..
தலைவைத்து நான் தூங்கும் ..
தலைகாணி கூச்சம் நீ….

எனது இரு விரல் கசிகிற நிலவொளி நீ ..படர்வாய் ..
நெருங்குவதாலே நோருங்கிவிடாது இருபது வருடம் ..
ஹா .. தவறுகலாலே தொடுகிற நீயும் ..
அழகிய மிருகம் ..

ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்

குயிலினமே .. குயிலினமே ..
எனக்கொரு சிறகு கொடு ..
முகிலினமே .. முகிலினமே ..
முகவரி எழுதி கொடு ..
அவனிடமே .. அவனிடமே ..
எனது கனவை அனுப்பு ..

இறகே இறகே மயிலிறகே ..
வண்ண மயிலிறகே வந்து தோடு அழகே ..
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே .

Bheemaa - Ragasiya Kanavugal

பீமா - எனதுயிரே எனதுயிரே

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்,
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே, தரும் பூக்களே,
நீளுமே காதல் காதல் வாசமே..

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.


இனி இரவே இல்லை,
கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை.
இனிப் பிரிவே இல்லை,
அன்பே உன் உளரலும் எனக்கு இசை..

உன்னைக் காணும் வரையில்
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..
கண்ணால் நீயும் அதிலே
எழுதிப்போனாய் நல்ல ஓவியம்..

சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்.

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.


மரமிருந்தால் அங்கே என்னை
நான் நிழலென விரித்திடுவேன்..
இலை விழுந்தால் ஐயோ என்றே
நான் இருதயம் துடித்திடுவேன்.

இனிமேல் நமது இதழ்கள் இணைந்து
சிரிக்கும் ஓசை கேட்குமே
நெடுநாள் நிலவும் நிலவின்,
களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே

உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே..

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்,
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே, தரும் பூக்களே,
நீளுமே காதல் காதல் வாசமே

Bheema - enathuyirey enathuyirey

பீமா - சிறு பார்வையாலே

ஹ்ம்ம்..

ஹ்ம்ம் ..

சிறு பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே ..
தலை சாய்த்து கொள்ள வேண்டும்
உந்தன் மடியே மடியே ..
சிறு பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே ..
தலை சாய்த்து கொள்ள வேண்டும்
உந்தன் மடியே மடியே ..
நீ தூரப் பச்சை ..
என் நெடுநாள் இச்சை ..
ஒரு மாறு வேடம் பூண்டு வந்த
மலிப்போவே முல்லை தீவே ..

தும்பி ஆகா மாறி உந்தன் வீடு வரவா ?
தூங்கும் உன்னை தொட்டு பார்த்து
முத்தம் இடவா ?
தூங்கும் உன்னை தொட்டு பார்த்து
முத்தம் இடவா ?

சிறு பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே ..
தலை சாய்த்து கொள்ள வேண்டும்
உந்தன் மடியே மடியே ..

உதைக்கும் மலைகளிலே ..
மிதக்கும் படைஎனவே ..
மறைக்கும் முகிலிடையே ..
சிரிக்கும் முழு நிலவே ..

அடக்கம் தடுக்கிறதே ..
அதட்டிப் பிடிக்கிறதே ..
நெருங்கி வருகையிலே ..
நொறுங்கி உடைகிறதே ..

உன் நெஞ்சில் இட்டு என்னை தாலாட்ட ..
என் கர்வம் எட்டிப் பார்க்கும் வாலாட்ட ..
நீ மண்ணில் உள்ள பெண்ணே இல்லை ..
என்னை தேடி வந்தாய் பாராட்டா ..
சிறு பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே ..
தலை சாய்த்து கொள்ள வேண்டும்
உந்தன் மடியே மடியே ..

நீ தூரப் பச்சை ..
என் நெடுநாள் இச்சை ..
ஒரு மாறு வேடம் பூண்டு வந்த
மலிப்போவே முல்லை தீவே ..

சிலிர்க்கும் இழைகளிலே ..
துளிர்க்கும் முதல் இலையே ..
இனிக்கும் கரும்பிநிலே ..
கிடைக்கும் முதல் சுவையே ..
விழுந்தேன் இரவினிலே ..
எழுந்தேன் கனவினிலே ..
கனவில் நீ வந்தாய் ..
மறந்தேன் வெளிவரவே ..
ஒரு ஜோடி தென்றல் போகுது முன்னாலே ..
அதை கால்கள் என்று பொய்கள் சொன்னாயே ..

நீ கொஞ்சும் போது பல்லும் நஞ்சு ..
ஆனால் கூட அள்ளி உன்பெனே ..
ஆ ஆ ..அடி பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே ..
தலை சாய்த்து கொள்ள வேண்டும்
உந்தன் மடியே மடியே ..
நீ தூரப் பச்சை ..
என் நெடுநாள் இச்சை ..
ஒரு மாறு வேடம் பூண்டு வந்த
மலிப்போவே முல்லை தீவே ..

தும்பி ஆகா மாறி உந்தன் வீடு வரவா ?
தூங்கும் உன்னை தொட்டு பார்த்து
முத்தம் இடவா ?
தூங்கும் உன்னை தொட்டு பார்த்து
முத்தம் இடவா ?

Bheema - siru paarvaiyalae

Wednesday, October 9, 2013

பீமா - முதல் மழை எனை

முதல் மழை எனை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ம்ம்ம்...முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ம்ம் இதமாய் மிதந்ததே

கனவோடு தான் அடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்

என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம்நின்று உணர்ந்தேன்

எதுவும் புரியாப் புது கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்

கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடு தான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடு தான் நானும் பறந்தேன்

முதல் மழை எனை நனைத்ததே ல ல லலா
முதன் முறை ஜன்னல் திறந்ததே ல ல லலா

பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ஓர் நாள் உன்னை நானும் காணா விட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை

ஓ ஓ ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை

இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்

உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்

பெயரே தெரியாத பறவை அழைத்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

Beema - Mudhal Mazhai Ennai

Followers