Pages

Search This Blog

Showing posts with label Bombay. Show all posts
Showing posts with label Bombay. Show all posts

Wednesday, November 23, 2016

பாம்பே - அந்த அரபிக்கடலோரம் ஓர்

அந்த  அரபிக்கடலோரம்  ஓர்   அழகைக்  கண்டேனே 
அந்தக்  கன்னித்  தென்றல்  ஆடைகளாக்கக்  கண்கள்  கண்டேனே
ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா 
ஏ  பள்ளித்தாமரையே  உன்  பாதம்  கண்டேனே
உன்  பட்டுத்  தாவணி  சரியச்  சரிய  மீதம்  கண்டேனே 
ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா 
ஏ  ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா 


சேலை  ஓரம்  வந்து  ஆளை  மோதியது  ஆஹா  என்ன  சுகமோ 
பிஞ்சுப்  பொன்விரல்கள்  நெஞ்சைத்  தீண்டியது  ஆஹா  என்ன  இதமோ
சித்தம்  கிளுகிளுக்க  ரத்தம்  துடிதுடிக்க  முத்தம்  நூறு  விதமோ 
அச்சம்  நாணம்  அட  ஆளைக்  கலைந்தவுடன்  ஐயோ  தெய்வப்  பதமோ 
ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா 

(அந்த  அரபிக்கடலோரம் )



சொல்லிக்கொடுத்தபின்னும்  அள்ளிக்கொடுத்தபின்னும்  முத்தம்  மீதமிருக்கு 
தீபம்  மறைந்தபின்னும்  பூமி  இருண்டபின்னும்  கண்ணில்  வெளிச்சமிருக்கு 
வானம்  பொழிந்தபின்னும்  பூமி  நனைந்தபின்னும்  சாரல்  சரசமிருக்கு 
காமம்  கலைந்தபின்னும்  கண்கள்  கடந்தபின்னும்  காதல்  மலர்ந்துகிடக்கு 
ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா 

(அந்த  அரபிக்கடலோரம் )

Bombay - Hamma Hamma

பாம்பே - குச்சிக்குச்சி ராக்கம்மா

குச்சிக்குச்சி ராக்கம்மா பொண்ணுவேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணுவேணும்
சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா

குச்சிக்குச்சி ராக்கம்மா பொண்ணுவேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணுவேணும்
சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

குச்சிக்குச்சி ராக்கம்மா வரமாட்டா - நீ
கொஞ்சிப்பேச பொண்ணு ஒண்ணு தரமாட்டா
சாதி சனம் தூங்கல்லையே சாமக்கோழி கூவல்லையே
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

காட்டு முயலுக்கு பனி பிடிக்கும் கானக்குயிலுக்கு வெயில் பிடிக்கும்
ஆணிவேருக்கு மண் பிடிக்கும் ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும்

அரசன் மகனுக்கு வால் பிடிக்கும் அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்
புருஷன் ஜாமத்தில் கனைக்கயிலே பொம்பளைக்கு கிலி பிடிக்கும்

அல்லு பகலுமே நனைந்தாலும் ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும்
அள்ளி அள்ளி நான் கொடுத்தாலும் ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்

அ பொட்டப்புள பெத்துக்கொடு...போதும் என்னை விட்டுவிடு
அ அ அ பொட்டப்புள பெத்துக்கொடு...போதும் என்னை விட்டுவிடு
வெளிச்சம் எரியவிட்டு வெக்கத்தை அணைத்துவிடு

(குச்சிக்குச்சி)

ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா
ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா

சிறகு நீங்கினால் பறவையில்லை திரியை நீங்கினால் தீபமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது புரியவில்லை

உடலை நீங்கினால் உயிருமில்லை ஒலியை நீங்கினால் ஒளியுமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது தெரியவில்லை

பூமி சுற்றுவது நின்றுவிட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை
புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால் என்னாளும் பெண்வாழ்வில் ஏற்றங்கள் இல்லை

பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
தொட்ட இடம் பத்திக்கொளும் தூரத்தில் ஒதுங்கி நில்லு

(குச்சிக்குச்சி)

Bombay - Kuchi Kuchi

பாம்பே - பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன

பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு 
குல்லா குல்லா ஹல்லா குல்லா
வானும் மண்ணும் யாருக்கு நீயும் நானும் யாருக்கு
குல்லா குல்லா ஹல்லா குல்லா

நீ சிரிச்சா தீவானா கைக்கொடுத்தா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா
நீயும் நானும் ஒன்னான்னா ரூப்பு தேரா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

சோலைக்கு என்ன ஒரு கவலை 
எப்போதும் பறவைகள் அழுவதில்லை
சூரியனில் என்றும் இரவு இல்லை
எப்போதும் சொர்க்கத்துக்கு தடையில்லை
குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை
பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை
(நீ சிரிச்சா..)

பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை
கையோடு கை சேர்த்து வானத்தையே தொட்டுவிடு
குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா
(காணத்தானே கண்கள்..)
(நீ சிரிச்சா..)

Bombay - Poovukkenna Poottu

Wednesday, October 9, 2013

பம்பாய் - உயிரே உயிரே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

Bombay - Uyire Uyire

Saturday, September 28, 2013

பம்பாய் - கண்ணாளனே எனது கண்ணை

குமுசுமு குமுசுமு குப்புச்சுப் குமுசுமு குப்புச்சுப்...(2)
சல சல சோலைக்கிளியே சோடிய தேடிச்சா
சிலு சிலு சக்கரை நிலவே மாலைய மாத்திச்சா
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியிலே கட்டிக்கொல்
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வைத்துக்கொல்
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியிலே கட்டிக்கொல்
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வைத்துக்கொல்

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பரித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆலான ஒரு சேதி அரியாமலே அலைபாயும் சிரு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேச வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ
(கண்ணாளனே)

உந்தன் கஞ்சாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம்
தரிகெட்டுத் தலும்புது நெஞ்சம்
எந்தன் நூலாடை பரந்ததில் கொஞ்சம் - கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போழுது
மூங்கில் காடென்ரு ஆயினல் மாது
(கண்ணாளனே)

குமுசுமு குமுசுமு குப்புச்சுப் குமுசுமு குப்புச்சுப்...(2)
சல சல சோலைக்கிளியே சோடிய தேடிச்சா
சிலு சிலு சக்கரை நிலவே மாலைய மாத்திச்சா
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியிலே கட்டிக்கொல்
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வைத்துக்கொல்
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியிலே கட்டிக்கொல்
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வைத்துக்கொல்

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் - வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் - தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மரந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நனவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பர்த்தெந்தன் தாய்மொழி மரந்தேன்
(கண்ணாளனே)

Bombay - Kannalane

Followers