Pages

Search This Blog

Showing posts with label Kadhalan. Show all posts
Showing posts with label Kadhalan. Show all posts

Monday, November 25, 2013

காதலன் - கோபாலா கோபாலா

பெண் : ஏய் எர்ரானி குரதானி கோபாலா
அஹ சுரு மந்தி நீ சூப்பு நா கேளா
எர்ரானி குரதானி கோபாலா
அஹ சுரு மந்தி நீ சூப்பு நா கேளா
கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

ஆண்குழு : கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா
கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

பெண் : பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா

ஆண்குழு : மலை ஏறு கோபாலா

பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

***

ஆண் : இந்த ஒரு பூவுக்குத்தான்
அம்முலு ஏழு மலைத் தாண்டி வந்தேன்

பெண் : காமன் வந்து சண்டப் புடிக்க
மொத்தத்தில் காரம்புளிக் கொறச்சுக்கிட்டேன்

ஆண் : அச்சாரம் போடத்தான் ஐநூறு கிலோமீட்டர் வந்தேனே

பெண்குழு : தேனே தேனே தேனே செந்தேனே தேனே னே

பெண் : ஆதாரம் காட்டத்தான்
அதக் கொஞ்சம் இதக் கொஞ்சம் தந்தேனே

ஆண்குழு : யானைப் பசி எனக்கு
போங்கடி கீரைத்தண்டு எதுக்கு

பெண்குழு : இடைவேள முடிஞ்சு
பாரைய்யா என்னென்னமோ இருக்கு

ஆண் : அடியே உன் தேகம் ரத்த ஓட்டம் பாய்கிற தந்தம்

பெண் : அட டா உன் நெஞ்சில் புது புது கவிதைகள் பொங்கும்
கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

கம்யூ.குரல் : கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

பெண்குழு : கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

பெண் : பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா

பெண் : மலை ஏறு கோபாலா

பெண் : எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மந்தி நீ சொப்பு நா கேளா
சத்தானி சுக்கநேனு கோபாலா
நேனு சிக்குதானு செய்யண்ட இய்யாலா

***

ஆண்குழு : ஓராபாய் ஓராபாய் ஓராபாய் ஓராபாய்

பெண் : நெத்தியில முத்தம் கொடுத்தா
நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி படபடக்கும்

ஆண் : காதுக்குள்ளே முத்தம் கொடுத்தா
யம்மம்மா கண்ணுக்குள்ளே வெடி வெடிக்கும்

பெண் : மச்சானே மச்சானே
அச்சம் விட்டுப் போனது தன்னாலே

பெண்குழு : லே லே லே லே தன்னாலே லே லே லே

ஆண் : அச்சச்சோ அச்சச்சோ
அச்சு வெல்லம் கசக்குது உன்னாலே

பெண்குழு : சிக்குபுக்கு ரயிலே
எங்கேயோ பத்திக்கிச்சு நெருப்பு

ஆண்குழு : எக்கு தப்பு நடந்தா
அம்மணி ரெண்டு பேரும் பொறுப்பு

பெண் : அடடா இப்போது உலகத்த மறந்தது உள்ளம்

ஆண் : இதுதான் பெண்பூவே உயிர் வரைப் பாய்கிற வெள்ளம்

பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

ஆண்குழு : கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

கம்யூ.குரல் : கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

பெண் : பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா

கம்யூ.குரல் : மலை ஏறு கோபாலா

பெண் : ஆஹா எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மந்தி நீ சூப்பு நா கேளா
சத்தானி சுக்கநேனு கோபாலா
நேனு சிக்குதானு செய்யண்ட இய்யாலா

பெண்குழு : எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மந்தி நீ சூப்பு நா கேளா

கம்யூ.குரல் : சத்தானி சுக்கநேனு கோபாலா

பெண்குழு : நேனு சிக்குதானு செய்யண்ட இய்யாலா
 

Kadhalan - Gopala Gopala

காதலன் - காதலிக்கும் பெண்ணின்

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை, தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே

காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே

காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே

குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்

பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால் லட்ஷ ரூபாய்

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை, தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே

காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே

காதலுக்கு அன்னபட்ஷி தேவை இல்லையே
காக்கை கூட தூது போகுமே

காதல் ஜோடி புகைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை

இடில் அர்ப்பமானது எதுவும் இல்லை
இன்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை

வானும் மண்ணும் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்தையா என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் இன்று
காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் இன்று

Kadhalan - Kadhalikkum Pennin kaikal

Thursday, October 17, 2013

காதலன் - என்னவளே அடி என்னவளே

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
கண்டதும் கண்டு கொண்டேன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் என்னை பார்ப்பது போல் ஒரு கலக்குமும் தோன்றுதடி
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாழ்வதும் வீழ்வதும் போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்


கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக் கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்நிலவே உன்னை தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சுடக்குகெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை காதுக்குள் ஒதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள் புதிய
கவிதைகள் என்றுரைப்பேன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
கண்டதும் கண்டு கொண்டேன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

Kadhalan - Ennavale Adi

Followers