Pages

Search This Blog

Showing posts with label May Madham. Show all posts
Showing posts with label May Madham. Show all posts

Friday, January 6, 2017

மே மாதம் - ஆடிப்பாரு மங்காத்தா

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ராணி எடுத்து வை ஏஸ் எடுத்து வை

வை ராஜா வை வை ராஜா வை வை ராஜா வை
வை ராஜா வை வை ராஜா வை வை ராஜா வை

ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல் கட்டா

ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்துபோடு வோட்டு

ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல் கட்டா

ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ஏஸ் எடுத்து வை

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ஏஸ் எடுத்து வை

என்னென்ன நம்பர் வேணும் என்னக் கேளடி சும்மா
எதுவும் தருவேன் அம்மா

ஒன்பதாம் நம்பர் மட்டும் இங்கே ஒட்டாதம்மா
விவரங் கேளடி சும்மா

என்னாட்டம் விளையாடு தப்பாட்டம் கூடாது
நம்பர்கள் சதி செஞ்சா நண்பர் மேல் தப்பேது

இது போல ஆட்டம் ஆடி இந்தியா கறை சேர்ப்பேன்
சொந்தத்தில் ராக்கெட் வாங்கி சொர்கம் சென்று விலை கேட்பேன்

பொன் கூண்டை விட்டு நான் வானம்
வந்த பட்சி

வானத்தை தாண்டி புது வாழ்க்கை
வாழும் கட்சி

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்து போடு வோட்டு

ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல்கட்டா

ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்து போடு வோட்டு

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ஏஸ் எடுத்து வை

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ஏஸ் எடுத்து வை

பிரிக்காத சீட்டுக்கட்ட மின்னும் போதை வன்னம்
அச்சு வெல்ல கன்னம்

உன்னோடு எந்த ஆணும் தோக்க தானே வேணும்
ஆஹா என்ன ஞானம்

இது வரை என்னாச்சு என் வாழ்க்கை வீனாச்சு
சொந்தத்தில் சுவாசிச்சு அட ரொம்ப நாளாச்சு

என் கால்கள் எங்கும் போகும்
தட்டி கேட்க கூடாது

என் பேர்கள் எங்கும் போகும்
கட்டி போட கூடாது

வார்த்தைகள் கற்க
நான் பள்ளிக்கூடம் சென்றேன்

வாழ்க்கையை கற்க
நான் வாசல் தாண்டி வந்தேன்

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்துபோடு வோட்டு

ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல்கட்டா

ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்துபோடு வோட்டு

May Madham - Adi Paru Mangatha

மே மாதம் - பாலக் காட்டு மச்சானுக்கு

பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

செலவுக்கு நோட்டே இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

பாட்டு சத்தம் கேட்டு புட்டா
மத்ததெல்லாம் கொசுரு

செலவுக்கு நோட்டே இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

சிட்டு குருவி சிட்டு குருவி
சிரிக்கட்டுமே பெட்டை குருவி

ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது
ஆஹா வாழ்வே சொர்கம்

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

செலவுக்கு நோட்டே இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

சிட்டு குருவி சிட்டு குருவி
சிரிக்கட்டுமே பெட்டை குருவி

ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது
ஆஹா வாழ்வே சொர்கம்

கவலைகள் வேண்டாம் கனவுகள் வாங்கு
வா சந்தோஷம் நமக்கு

திருமணம் வேண்டாம் காதலை வாங்கு
கதவுகள் வேண்டாம் சாவிகள் வாங்கு
வா பொற்க்காலம் நமக்கு

செல்வங்கள் வேண்டாம் சிறகுகள் வாங்கு
வா வானம் நமக்கு

வானமும் பூமியும் வாழ்ந்தால் இனிமையே

பாடகன் வாழ்விலே நித்தம் நித்தம்
பரவசம் நவரசம்

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

செலவுக்கு நோட்டே இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

வானத்தை எவனும் அழைக்கவும் இல்லை
வா இப்போதே அளப்போம்

வாழ்க்கையை எவனும் ரசிக்கவும் இல்லை

பூக்களை எவனும் திறக்கவும் இல்லை
வா இப்போதே திறப்போம்

பூமியில் புதையலை எடுக்கவும் இல்லை
வா இப்போதே எடுப்போம்

வாலிபம் ஒன்று தான் வாழ்வின் இன்பமே

புன்னகை ஒன்று தான் என்றும் என்றும்
இளமையின் ரகசியம்

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

செலவுக்கு நோட்டே இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

செலவுக்கு நோட்டே இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

சிட்டு குருவி சிட்டு குருவி
சிரிக்கட்டுமே பெட்டை குருவி
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது
ஆஹா வாழ்வே சொர்கம்

May Madham - Pala Kaattu Machanukku

Thursday, December 26, 2013

மே மாதம் - மார்கழிப் பூவே மார்கழிப்

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை (மார்கழி)

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
(மார்கழி)

(வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்) (2)

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை
(மார்கழி)

May Madham - Maargali Poovae

மே மாதம் - மின்னலே நீ வந்தேனடி

மின்னலே நீ வந்தேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்துப் போது

மின்னலே என் வானம் உன்னை தேடுதே

மின்னலே நீ வந்தேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி

சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

கண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே
கண் விழித்து  பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே
கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறி போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்


மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

பால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா
பால் மழைக்கு  காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்


மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்துப் போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

May Madham - Minnalae Nee

மே மாதம் - மெட்ராஸை சுத்தி பார்க்க

மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன்
லைக்ட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன்
(மெட்ராஸை..)

ஹே.. மெட்ராஸை சுத்தி காட்ட போறேன்
மெரினாவில் சுண்டல் வாங்கி தாரேன்
இதுதானே நிப்பன் பில்டிங் பாரு
இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்
(இதுதானே..)

அட சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம்
ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம்
பாரின் சரக்கு பர்மபஜார்
நம்ம உள்ளூர் சரக்க் பாம்பஜாரு

ஏ பொண்ணு ஏ பொண்ணு
இதை பார்க்காத கண்ணு என்ன கண்ணு
பொண்ணு ஏ பொண்ணூ
என்னை இழுத்துக்குனு போடி என் கண்ணு

மெட்ராஸின் ஹீரோ அது மெட்ரோ வாட்டர்
ஆனா ஸ்டைலுன்னா இப்போ குடி மினரல் வாட்டர்
மெட்ராஸின் கீதம் அது ஆட்டோ ஆட்டோ சத்தம்தான்
ஆல் இன் ஆல் கேட்டால்
ஒரு போட்டோ போட்டோ கையில்தான்
இங்கே மாமியார் தொல்லை
இல்ல முகமூடி கொள்ளை
ஆனால் இஸ்மாயிலும் அப்ரஹாமும்
இந்தியனாக வாழும் ஊரு
(மெட்ராஸை..)

பொண்ணு ஏ பொண்ணு
நாத்தான் துண்ண வாடி என் கண்ணு
உன்னை கூட்டிகினு போறேன் சினிமாவுக்கு
இல்ல கொத்திகினு போவான் பொறம்போக்கு

காலம் கெட்டு போச்சு மகராசி
சும்மா கப்புன்னு இசுக்குது முவராசி
மூத்த சொல்றேன் இதை யோசி
நான் மூனு தலைமுறையா மகராசி

வெள்ளைக்காரன் கோட்டை அது பழைய மெண்ட்ராஸ்
ராணியம்மா பேட்டை இது புதிய மெட்ராஸ்
ஒன் வேயில் புகுந்து கூட மெட்ராஸை சுத்தி பார்க்கலாம்
செண்ட்ரலையும் எக்மோரையும் சுத்தி காட்டி நீ துட்டு சேர்க்கலாம்
சினிமா பைத்தியம் என்றால் மெட்ராஸ்
காதல் வைத்தியம் என்றால் மெட்ராஸ்
இங்கே இல்ல ஜோலி பக்கேட் காலி
ஆனா லைஃப் இப்போ ஜாலி ஜாலி
(மெட்ராஸை..)

May Madham - Madrasai Suthi

மே மாதம் - மார்கழிப் பூவே மார்கழிப் பூவே

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
(மார்கழி )
 
பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்க்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
(மார்கழி)
 
(வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூககள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்) (2)
காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை
(மார்கழி)
(வெண்பா)

May Madham - Marghazhi Poove

மே மாதம் - என் மேல் விழுந்த

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்
(என் மேல்)

மண்ணைத் திறந்தால் நீரிருக்கும் - என்
மனதைத் திறந்தால் நீயிருப்பாய்
ஒலியைத் திறந்தால் இசை இருக்கும் - என்
உயிரைத் திறந்தால் நீயிருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும் - என்
வயதைத் திறந்தால் நீயிருப்பாய்
இரவைத் திறந்தால் பகல் இருக்கும் - என்
இமையைத் திறந்தால் நீயிருப்பாய்
(என் மேல்)

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ
(என் மேல்)

May Madham - En Mel Vizhunda

Followers