Pages

Search This Blog

Showing posts with label Mr. Bharath. Show all posts
Showing posts with label Mr. Bharath. Show all posts

Friday, January 6, 2017

மிஸ்டர் பாரத் - என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம்

என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன் (இசை)

என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்
உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு நடந்ததும்

{முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்

ஆ...ஆ...ஆ...}

என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்

பாவம் தீர்க்க ஒரு கேள்வி கேட்க
இங்கு தெய்வம் நேரில் வர வில்லை
பாவம் நேரம் அதற்கில்லை
குற்றவாளிகளின் கொட்டம் தீர
ஒரு சட்டம் ஒத்து வர வில்லை
தர்மம் செத்துவிட வில்லை
கட்டில் வேறு ஒரு தொட்டில் வேறு எனில் என்னவாகும் உலகம்
சொந்தமில்லை ஒரு பந்தமில்லை இது நாகரீக நரகம்
தந்தை யாரோ கானல் நீரோ தாய்ப் பால் கூட கண்ணீரோ

உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு நடந்ததும்

{முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்

ஆ...ஆ...ஆ... }

என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்

பெண்கள் யாரும் இங்கு பெண்கள் இல்லை
அவர் எச்சில் துப்பும் ஒரு கிண்ணம்
என்று தானே உனதென்னம் காலம் மாறியது காட்சி மாறியது
பெண்மை ஆளுவது திண்ணம் சீதை சாகவில்லை இன்னும்
போன ஜென்ம வினை நாளை கொள்ளும் அது அந்த நாளில் வழக்கம்
இந்த ஜென்ம வினை இன்று கொள்ளும் இது இந்த நாளில் பழக்கம்
கருவில் தானே வெளிச்சம் இல்லை மண்ணில் வந்தும் ஒளி இல்லை

உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு நடந்ததும்

{முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்

ஆ...ஆ...ஆ... 

என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்

உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு நடந்ததும்

{முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்...

ஆ...ஆ...ஆ... } 

Mr. Bharath - En Thayin Meethu Aanai

மிஸ்டர் பாரத் - காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு

யாரது 
நான் தான்
நான் தான்னா
ப்ச்.. நான் தான்
எங்கே இருக்கீங்க 
இங்கே
எங்கே 

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி 

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா
கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி

எங்கேயோ ஐஸ் ஆச்சு சிலு சிலுப்பாச்சு
இங்க தான் சூடாச்சு எரியுது மூச்சு

லல்லல்லால லல்லல்லால லல்லல்லால லா..
என்னவோ ஆயாச்சு இனி என்ன பேச்சு
பழம் தான் பழுத்தாச்சு பசி எடுத்தாச்சு

என்ன வேணும் ராசா நீ கேட்டாத் தாரேன்

ஒண்ணு ஒண்ணா நான் தானே எடுத்துக்கப் போறேன்

நீ கன்னத்த கிள்ள என்னத்தச் சொல்ல நான்
காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரனும் முன்னுக்கு வந்தேன்
நீ வாடை புடிக்கும் மல்லிகப் பூவோ
வண்ணப் புறாவோ நான்
கை தொட்டதும் தொட்டேன் சம்மதப் பட்டேன் வா

காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன்

பெட்டியில் பாலோடு புட்டிகளும் இருக்கு
வெண்ணையே தடவாத ரொட்டிகளும் இருக்கு

ம்ம்... ஹ ஹ ஹா ஹ ம்ம் ம்ம்...
ஒண்ணுமே வேணாமே உன்ன விட எனக்கு
உள்ளது எல்லாமே உன்னிடத்தில் இருக்கு

மத்தவங்க பாக்காட்டி கொடுப்பேன் நானே

ஹ..இப்போ இங்க ஆள் எது ரகசியம் தானே

நான் வெள்ளரிப் பிஞ்சு மெல்லவே கொஞ்சு வா

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி

ஹஹ்ஹ..காதல் செய்ய கத்துத் தரணும்
முன்னுக்கு வந்தேன்

உள்ள தான் பாரேன்மா ஊட்டி மலைச் சாரல்
உள்ளத்தில் பாயாதோ ஊசி மழைத் தூறல்

அஹஹாஹ அஹஹாஹ அஹஹாஹாஹ
என்னவோ ஏதேதோ இன்பம் பொறந்தாச்சு
சொல்லவே தெரியாம என்ன மறந்தாச்சு

இன்னும் இன்னும் ஆனந்தம் தன்னால் புரியும்

சின்னப் பொண்ணு நான் தானே எனக்கென்னத் தெரியும்

நான் உள்ளத சொல்வேன் சொன்னதச் செய்வேன் வா

காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன்

நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா

ஹஹ்ஹ..

கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா

காத்திருந்தேன் கதவ திறந்தேன்
உள்ளுக்கு வந்தேன் ஹஹ்ஹ..

காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி

ஹவ்..ஹா..

Mr. Bharath - Kaathirukken Kadhava

மிஸ்டர் பாரத் - என்னம்மா கண்ணு சௌக்யமா

என்னம்மா கண்ணு

சொல்லம்மா கண்ணு 

என்னம்மா கண்ணு

சொல்லம்மா கண்ணு

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

யானைக்கு சின்ன பூனை போட்டியா - துணிஞ்சு
மோதிதான் பட்ட பாடு பாத்தியா

யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் - உரசிப்
பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. அஹ

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்.. ஹா

வெள்ளிப்பணம் என்னிடத்தில் கொட்டிக்கிடக்கு
வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு

சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு
உத்தமனா நீயிருந்தா மீசை முருக்கு

சத்தியத்தை நம்பி ஓகோ கோ கோ...
லாபமில்லை தம்பி ஓகோ கோ கோ...

நிச்சயமா நீதி அஹ ஹாஹ ஹா....
வெல்லும் ஒரு தேதி அஹ ஹாஹ ஹா....

உன்னாலதான் ஆகாது வேகாது

கொஞ்சம்தானே வெந்திருக்கு மிச்சம் வேகட்டும் ஹோய்

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

எப்பவும் நான் வச்ச குறி தப்பியதில்ல
என்னுடைய சொல்லை யாரும் தட்டியதில்ல

இன்னொருவன் என்ன வந்து தொட்டதுமில்ல
தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல

மீசையில மண்ணு ஓகோ கோ கோ.......
ஒட்டினதை எண்ணு அஹ ஹாஹ ஹா..

பாயும்புலி நான்தான் அஹ ஹாஹ ஹா.
பார்க்கப் போற நீதான் அஹ ஹாஹ ஹா.

சும்மாவுந்தான் பூச்சாண்டி ஏய் காட்டாதே

நம்மகிட்ட போடுறியே தப்புதாளந்தான் ஹே

என்னம்மா கண்ணு

சொல்லம்மா கண்ணு

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

யானைக்கு சின்ன பூனை போட்டியா -ஆங்- துணிஞ்சு
மோதிதான் பட்ட பாடு பாத்தியா டேய் டேய்

யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் - உரசிப்
பாருங்க மங்கிடாத தங்கம்தான்..

என்னம்மா கண்ணு சௌக்யமா ஆங்

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான் ஆங்

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு ..ஃபண்டாஸ்டிக் !

Mr. Bharath - Ennamma Kannu

Followers