Pages

Search This Blog

Showing posts with label Raavanan. Show all posts
Showing posts with label Raavanan. Show all posts

Tuesday, November 5, 2013

ராவணன் - வீரா வீரா

வீரா வீரா வீரா வீரா வீரா
வீரா வீரா வீரா வீரா வீரா
வீரா வீரா
வீரா வீரா வீரா வீரா
வீரா வீரா வீரா வீரா வீரா
இட்ட பேரு வீரா
பட்ட பேரு நூறா
சூரா தீரா காள
காள காள காள காள
அட ரம்மன்னா ராமன்
ராவணனன்னா ராவணன்
ரெண்டும்னா ரெண்டும்தேன்
ரெண்டும்தேன்
ராமன்தேன் ராவனந்தேன்
ராமன்தேன் ராவனந்தேன்
வீரா..
என் போறப்ப நீ கண்ட
என் பாதை நீ கடந்த
என் யுத்தம் நீ செஞ்ச
நீ ராமன்தேன் ராவனந்தேன்
ரெண்டும்தேன் ரெண்டும்தேன்
ரெண்டும்தேன் ரெண்டும்தேன்
போடா
வீரா சூரா காள
தன தன் தம் தம்
தன தன் தம் தம்
தம் தம்
வீரா வீரா வீரா வீரா
வீரா வீரா வீரா வீரா வீரா
வீரா வீரா
இட்ட பேரு வீரா
பட்ட பேரு நூறா
சூரா தீரா காள
காள காள காள காள
வீரா வீரா வீரா வீரா
வீரா வீரா வீரா வீரா வீரா
வீரா வீரா

வீரா வீரா வீரா வீரா

வீரா வீரா வீரா வீரா வீரா
வீரா வீரா

Raavanan - Veera Veera

Wednesday, October 23, 2013

ராவணன் - உசுரே போகுதே


இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்

அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ.. மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமின்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்கேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேக்கல
தவியா தவிச்சு
உசிர் தடம் கெட்டுத் திரியுதடி
தைலாங்குருவி
என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி
இந்த மம்முதக் கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சிருமா

சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ.. மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமின்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி


இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான் மனுசப்புள்ள
விதிவிலக்கில்லாத விதியுமில்ல

எட்டயிருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமோ போகல
பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள
உன் நெனப்பு மனசுக்குள்ள
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ.. மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமின்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ.... மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமின்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

Raavanan - Usure Pogudhey

Wednesday, October 9, 2013

ராவணன் - கள்வரே கள்வரே

கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமை கண்கள் தூங்காது
தலைவா என் தலைவா அகமறிவீரோ.. அருள்புரிவீரோ..

வாரம் தோறும் அழகின்  பாரம் கூடும் கூடும் குறையாது
உறவே என் உறவே உடை களைவீரோ உடல் அணிவீரோ

என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்
என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னால்
கண்ணாலே ஆமாம் என்பேனே

எங்கெங்கே உதடும் போகும்
அங்கங்கே உயிரும் போகும்
அன்பாளா ஆளச் சொல்வேனே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா

கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே

Raavanan - Kalvarae Kalvarae

Followers