Pages

Search This Blog

Showing posts with label Surya Vamsam. Show all posts
Showing posts with label Surya Vamsam. Show all posts

Thursday, November 7, 2013

சூர்யவம்சம் - சலக்கு சலக்கு சரிக

சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு
வௌளக்கு வௌளக்கு வெக்கம் வந்தா வௌளக்கு வௌளக்கு
ஒனக்குக் குளிரினா என்ன எடுத்துப் போத்திக்கோ
மாமன் தோளில மச்சம் போல ஒட்டிக்கோ
அடடா அல்வாத்துண்டு இடுப்பு ஒன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கௌளப்பு

சலக்கு ...

அடியே மெட்டிச் சத்தம் கேட்காமத்தான்
தலையே வெடிச்சிருச்சு வெகுனேரந்தான்
வரப்பில் ஒன்னப் பாத்தா மறு வேளதான்
இடுப்பில் நிக்காதைய்யா என் சேலதான்
காலையிலும் காட்சி உண்டு சாத்திக்கடி கதவத்தான்
கட்டிலுக்குக் கால்வலிச்ச கட்டாந்தர படுக்கதான்
ஒடும்பு முழுக்க இப்ப ஒரு ரயிலு ஓடுது மச்சான்
களச்சு நொறுக்கச் சொல்லி என் வளையல் கெஞ்சுது மச்சான்
அடடா அல்வாத்துண்டு இடுப்பு ஒன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கௌளப்பு

சலக்கு ..

கெழக்கே வெளுக்காம இருந்தாலென்ன?
இரவே முடியாமத் தொடர்ந்தாலென்ன?
குடையே பிடிக்காம நனஞ்சாலென்ன?
படுக்க சுருட்டாம கெடந்தாலென்ன?
மார்கழியில் பாய்விரிச்சா மாசிவந்தா மசக்கதான்
ஆத்தங்கர அரசமரம் சுத்தவேணாம் ஜாலிதான்
ஒனக்குல் விழுந்தபின்னே நான் எனக்குள் எழுந்ததென்ன?
வௌளக்கு அணச்ச பின்னே ஒரு வெளிச்சம் தெரிஞ்சதென்ன?
அடடா அல்வாத்துண்டு இடுப்பு ஒன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கௌளப்பு

சலக்கு ...

Surya vamsham - Chalakku Chalakku

சூர்யவம்சம் - ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
(ரோசாப்பூ..)

மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்னா விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலு வச்சுக் கொண்டாடினேன்
மழை பேய்ஞ்சாதானே மண் வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசம்தான்
பாத மேல பூத்திருந்தேன் கையில் ரேகை போல சேர்ந்திருதேன்
(ரோசாப்பூ..)

கண்ணாடி பார்க்கையில அங்க முன்னாடி உம் முகம்தான்
கண்ணே நீ போகையில கொஞ்சும் கொலுசாக என் மனம்தான்
நிழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா
மலை மேல் விளக்க ஏத்தி வைப்பேன்
உன்னப் படம்போல் மனசில் மாட்டிவைப்பேன்
(ரோசாப்பூ..)

Surya Vamsham - Rosappu Chinna Rosappu

சூர்யவம்சம் - நட்சத்திர ஜன்னலில்

நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்
விளையாடலாம் நிலாவிலே நிழல் மூழ்குமோ தண்ணீரிலே
வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு
(நட்சத்திர..)

சித்திரங்களைப் பாடச்சொல்லலாம்
தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம்
புத்தகங்களில் முத்தெடுக்கலாம்
பொன்னாடை இமயத்துக்குப் போட்டுவிடலாம்
பூமிக்குப் பொட்டு வைத்து பார்க்கலாம் பார்க்கலாம்
பூவுக்கும் ஆடை தைத்துப் போடலாமா
சூரியத் தேரை மண்ணில் ஓட்டலாம் ஓட்டலாம்
சொர்கத்தின் புகைப்படத்தைக் காட்டலாமா
வானம்பாடி வாழ்விலே
வருந்தி அழுவதில்லை வணங்கி விழுவதில்லை
(நட்சத்திர..)

சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும்
சந்தோஷ முல்லை இங்கே வீட்டில் முளைக்கும்
சந்தமழை நம்மை நனைக்கும்
பூந்தென்றல் பாதை சொல்ல வந்து அழைக்கும்
சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்ததாரடி யாரடி
மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ
மேகத்தில் மீடு கட்டி வாழலாம் வாழலாம்
மின்னலில் கூரை பின்னிப் போடலாமா
ஓங்கும் உந்தன் கைகளால்
வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு
(நட்சத்திர..)

Surya vamsam - Natchathira Jannalil

சூர்யவம்சம் - காதலா காதலா

காதலா காதலா காதலின் சாரலா (2)
தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா
கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா
மாறினேன் மீன்களாய்

காதலா காதலா காதலுன் சாரலா

இதயத் துடிப்பினில் ஓசையில்லை
எடுத்துச் சொல்லவும் பாஷையில்லை
இதற்குமுன் இந்த ஆசையில்லை
இமைகள் விசிறிகள் வீசவில்லை
தனிமையில் இன்று நான் நகம் கடித்தேன்
அடிக்கடி என்னை நான் தினம் ரசித்தேன்
கனவினில் உன்னை நான் படம்பிடித்தேன்
தலையணையோடு நான் அடம்பிடித்தேன்
ஏனிந்த மாற்றமோ?
(காதலா)

பெருகிப் பெருகி ஒரு அலையானேன்
உருகி உருகி பனித் துளியானேன்
பறந்து பறந்து ஒரு சிறகானேன்
நனைந்து நனைந்து இப்புல்வெளியானேன்
பூமியும் இங்கு பின் சுழல்வதென்ன
வானவில் ஒன்று என்னை வளைப்பதென்ன?
மலர்களெல்லாம் பொன் முடைப்பதென்ன
ரகசியம் சொல்லு என்னை ரசிப்பதென்ன?
ஏனிந்த மாற்றமோ?
(காதலா)

Surya Vamsam - Kadhala Kadhala

Followers